வாழும் புத்தரின் வரவேற்பு
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நாளை லாசாவில் நடைபெறும். இது திபெத் மக்களின் பெருமையாகும் என்று வாழும் புத்தரும் சீனப் புத்த மதச் சங்கத்தின் நிரந்தர ஆளுனரும் இச்சங்கத்தின் திபெத் கிளையின் துணைத்தலைவருமான Chigungqungcang Losang Champa தெரிவித்தார். ஒலிம்பிக் தீபத்தின் வருகையை தான் ஆர்வத்துடன் எதிர்ப்பாகப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது பார்வையில், ஒலிம்பிக் தீபம், புனித விளக்கை போல், மங்கலம் மற்றும் அமைதியை குறிக்கின்றது என்றும் அவர் கூறினார். சி ச்சுவானில் பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட்ட பின், திபெத்துக்குத் திரும்பிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுவரை, திபெத் மதத் துறை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 11 இலட்சத்து 70 ஆயிரம் யுவான் நன்கொடை வழங்கியுள்ளது. திபெத்தின மக்களும், ஹான் இன மக்களும் ஒரே குடும்பத்தினராவர் என்பதை இது கோடிட்டுக்காட்டுகின்றது என்று வாழும் புத்தர் Losang Champa கூறினார்.
|
|