தற்போது திபெத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பல்வேறு கோயில்களின் இயல்பான மத நடவடிக்கைகள் மீட்கப்பட்டுள்ளன என்று சீன பௌத்த சங்கத்தின் திபெத் கிளையின் துணை தலைவரும் வாழும் புத்தருமான தன்ஸின் கேலேகு லாசா நகரில் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
மார்ச் 14ம் நாள் நிகழ்ச்சி நிகழ்ந்த பின், பல்வேறு கோயில்களின் இயல்பான மத நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தற்போது, திபெதின் நிலைமை, சீரானது. இயல்பான மத நடவடிக்கைகள் மீட்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
அண்மையில், பல்வேறு கோயில்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகியவற்றுக்காக இறை வேண்டல் செய்தன என்றும் அவர் தெரிவித்தார்.
|