• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-23 16:13:08    
Fujian மாநிலத்தின் xiamen நகரத்திலுள்ள தைவான் வணிகர்

cri
சீனப் பெருநிலப்பகுதியின் தென் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள fujian மாநிலத்தைச் சேர்ந்த xiamen நகரம், தைவானுக்கு மிக அருகிலுள்ள ஒரு நகரமாகும். இரு கரைகளுக்கிடையில் பொருளாதார வர்த்தக தொடர்பு மென்மேலும் அதிகரிப்பதோடு, பல தைவான் வணிகர்கள் xiamen நகரில் முதலீடு செய்கின்றனர். பல ஆண்டுகால முயற்சிகள் மூலம், சீனப் பெருநிலப்பகுதியின் பொருளாதாரம் விரைவாக வளர்வதுடன், தைவான் வணிகர்களின் இலட்சியங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

Zengqinzhao, fujian மாநிலத்தின் xiamen doowell மின்னணு தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஆவார். கடந்த 90ம் ஆண்டுகளில், தைவானிலுள்ள அவரின் மின்னணு தொழில் நிறுவனம், சந்தை, உழைப்பு ஆற்றல் செலவு போன்ற வளர்ச்சிக்கான பிரச்சினைகளை சந்தித்தது. அதனால், தொழில் துறையை பிற இடங்களுக்கு இடம் மாற்றுவதை அவர் கருத்தில் கொண்டார். அவர் கூறியதாவது:

சீன பெருநிலப்பகுதியில் சோதனைப் பயணம் மேற்கொள்ளும் முன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு நான் சென்றேன். ஆனால், அப்போது சீனப் பெருநிலப்பகுதிக்கு வரவில்லை. ஒரு நாள் எனது ஊருக்குத் திரும்ப நினைத்தேன் என்றார் அவர்.

பல சோதனைகளை மேற்கொண்ட பின், வணிகத்தின் எதிர்கால வாய்ப்பை கருத்தில் கொண்டு, அவர் xiamen நகரத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தார். அவர் கூறியதாவது:

நம் உற்பத்திப் பொருட்கள் முக்கியமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. Xiamen நகரம், ஒரு துறை முக நகரமாகும். எனவே, சிறந்த ஏற்றுமதி செய்யும் நகரமாக இது மாறலாம். தவிர, தைவானுக்கு மிக அருகிலுள்ள ஒரு நகரம் இதுவே ஆகும். போக்குவரத்து மேம்பாட்டை கருத்தில் கொண்டு, நாம் xiamen நகரத்தில் உற்பத்தி தளத்தை உருவாக்கினோம் என்றார் அவர்.

கடந்த 90ம் ஆண்டுகளின் துவக்கத்தின் போது, சீனப் பெருநிலப்பகுதியின் வாழ்க்கை நிலைமைக்கும் தைவானின் வாழ்க்கை நிலைமைக்குமிடையில் பெரும் ஏற்றத் தாழ்வு நிலவியது. தொழில் நிறுவனங்கள் சிறந்த நிலைமையில் காணப்படவில்லை. ஆனால், இடர்களைச் சமாளித்து, பல அனுபவங்களோடு அவர் தொழில் நிறுவனத்தை மேன்மேலும் வளர்த்து வருகிறார். இத்தொழில் நிறுவனத்தின் அளவும் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2007ம் ஆண்டு, xiamen doowell மின்னணு தொழில் நிறுவனத்தின் ஏற்றுமதி மதிப்பு சுமார் 40 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழியில்லை. தமது குறிக்கோளில் ஊன்றி நிற்பதது தான் தேவை என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

வெற்றி பெற வேண்டுமனால், தொழில் நிறுவனம் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பெருநிலப்பகுதியில் தொழிற்சாலையை உருவாக்கிய பின், நான் மின்னணு தொழில் துறையில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றேன். ஏனென்றால், எந்தப் பணிகளை புரிய போதும், கவனம் மிகுந்த தேவையானது. வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி ஏதுமில்லை என்று அவர் கூறினார்.

ZENGQINZHAO, பெருநிலப்பகுதியில் முதலீடு செய்து 16 ஆண்டுகளாகிவிட்டது. கடந்த 16 ஆண்டுகளில், பெருநிலப்பகுதியின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருவதை அவர் கண்கூட்டாகக் கண்டுள்ளார். பெருநிலப்பகுதியிலுள்ள தைவான் வணிகர்கள் வெற்றி பெறுவது, இங்குள்ள பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன் நெருக்கமாக தொடர்புடையது. அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில், சீன பொருளாதாரம் விரைவான வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில், பெருநிலப்பகுதியில் முதலீடு செய்யும் தைவான் வணிகர்கள் உயர் தொழில் நுட்பத் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகின்றனர் என்றார் அவர்.

இந்நகரத்தில் தைவான் வணிகர்கள் வெற்றி பெறுவது என்பது அவர்களுக்கும் அவர்களின் தொழில் நிறுவனங்களுக்கும் xiamen நகரம் வழங்குகின்ற சலுகை கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலுள்ள ஆதரவுகளோடு தொடர்புடையது. தைவான் வணிகர்களுக்கு இந்நகரம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது என்று Xiamen நகரத்தின் தைவான் பணி அலுவலகத்தின் துணை இயக்குநர் wangmingshui தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தைவான் வணிகர்கள், Xiamen நகரத்தில் முதலீடு செய்வதை பாதுகாத்து ஊக்குவித்து, அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காக்கும் வகையில், 1994ம் ஆண்டு, xiamen நகத்திலுள்ள தைவான் உடன்பிறப்புகள், முதலீடு செய்வதற்கு பாதுகாப்பு உத்தரவாத விதிகள், xiamen நகரத்தில் தைவான் உடன்பிறப்புகளின் புகார்களைக் கையாள்வதற்கு தற்காலிக வழிமுறைகள் ஆகியவற்றை xiamen நகர மக்கள் பேரவை ஏற்றுக்கொண்டது. தைவான் வணிகர்களுக்குச் சேவை செய்யுமாறு, Xiamen நகர தைவான் விவகார அலுவலகத்தில் தைவான் உடன்பிறப்புகளின் புகார்களைக் கையாளும் மையத்தை உருவாக்கியது என்று அவர் கூறினார்.

xiamen நகரத்தின் கௌரவ நகரவாசி என்ற விருதை Zengqinzhao பெற்றார். தற்போது, அவரின் இலட்சியம் தடையின்றி வளர்ந்து வருகிறது. ஆனால், ஒரு இனிமையான விருப்பம் நனவாக அவர் விழைகின்றார். அவர் கூறியதாவது:

விமான மற்றும் கப்பல் போக்குவரத்து, அஞ்சல் தொடர்பு, வணிகம் ஆகியவற்றை தைவான் நீரிணையின் இரு கரைகள் வெகுவிரைவில் நனவாக்க வேண்டும். இரு கரைகளும் மேலும் நெருக்கமாக இணைந்து, பொருளாதார வளர்ச்சியை இரு கரை மக்கள் கூட்டாக முன்னேற்றி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நேரடியாக நடைமுறையாக்க வேண்டும். உலகமயமாக்கத்தின் போது, பொருளாதாரத்தின் சாதனைகளை நாம் கூட்டாக பெற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

தற்போது, zengqinzhao, xiamen நகரத்தின் தைவான் வணிகர்கள் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தலைவராவார். Xiamen நகரத்திலுள்ள தைவான் வணிகர்களுடன், தைவான் நீரிணையின் இரு கரை விமான மற்றும் கப்பல் போக்குவரத்து, அஞ்சல் தொடர்பு, வணிகம் ஆகியவற்றை நனவாக்குவதற்கு கூட்டாகப் பாடுபட என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.