• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-24 09:43:16    
சீனாவிலுள்ள இந்தியத் தூதரின் கருத்து

cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவும் வகையில், சீனப் பொதுத் துறை அமைச்சகம் மற்றும் சி ச்சுவான் மாநிலத்தின் அரசுடன் கலந்தாலோசிக்க இந்திய அரசு விரும்புவதாக சீனாவிலுள்ள இந்தியத் தூதர் Nirupama Rao அம்மையார் நேற்று தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற, இந்திய மருத்துவச் சிகிச்சைக் குழு, முதன்முறையாக சீனாவுக்கு வந்ததன் 70வது ஆண்டு நிறைவு பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய மருத்துவச் சிகிச்சைக் குழு சீனாவுக்கு வந்ததன் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, இரு நாடுகளும் ஒரு கூட்டு மருத்துவச் சிகிச்சைக் குழுவை உருவாக்கியுள்ளன. இக்குழு, இரு நாடுகளின் 20 இள மருத்துவ நிபுணர்களைக் கொண்டுள்ளது. இம்மருத்துவச் சிகிச்சைக் குழு, மே திங்களில் சீனாவின் ஹே பெய் மாநிலத்திலுள்ள சில கிராமப்புறங்களில் இலவச மருத்துவச் சிகிச்சைச் சேவையை வழங்கியுள்ளது. நவம்பர் திங்கள், அது, இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கும்.