வன்முறையின்மை என்பது தலாய் லாமா, அவரது செயல்களை அலங்காரப்படுத்துவதற்கானதே என்று சீன மக்கள் நாளேட்டின் வெளிநாட்டுப் பகுதியில், இன்று வெளியான பெயரிட்ட கட்டுரை கூறியுள்ளது.
வன்முறையை எதிர்ப்பதாக தலாய் லாமா பறைசாற்றுகிறார். 21வது நூற்றாண்டு, பேச்சுவார்த்தை நூற்றாண்டாகும். வன்முறையற்ற வழிமுறை மூலம், தன்னாட்சியை நாடுவதில் திபெத் மக்கள் ஊன்றி நிற்கின்றனர் என்று மே திங்கள் 19ம் நாள், அவர் பெர்லினில் கூறினார். ஆனால், இதற்குப் பிந்திய 3வது நாள், அவர் பாரிஸில் பேசிய போது, பெய்ஜிங்குடனான தனது பிரதிநிதியின் பேச்சுவார்த்தை உடைந்தால், திபெத்தில் கடுமையான வன்முறைச் செயல்கள் மீண்டும் நடைபெறக் கூடும் என்றார் அவர்.
தலாய் லாமா, புத்த மதத் துறவி என்ற அவரது தோற்றத்தைப் பேணிக்காப்பதற்காக, கருணையுள்ள மக்களை ஏமாற்றி, வன்முறையின்மை என்ற கொடியைப் பயன்படுத்தினார். ஆனால், ஏமாற்றமடைந்த மக்கள், அவரது உண்மையான நோக்கத்தைக் கண்டறிவது உறுதி என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.
|