• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-24 14:25:14    
ஹோங் லுவோ கோயில் (அ)

cri

ஹோங் லுவோ கோயில், பெய்ஜிங்கின் ஹுவாய் ழோ மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலான ஹோங் லுவோ மலையின் தெற்கில் உள்ளது. அது, தோங் ஜின் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த தாங் வம்சக்காலத்தில் விரிவாக்கப்பட்டது.

முன்பு, அது, தா மிங் கோயில் என அழைக்கப்பட்டது. தெற்கு நோக்கியதாய், வடக்கில் அமைந்துள்ளது. மலை நிலையின்படி, கட்டியமைக்கப்பட்டது. அதன் பரப்பளவு, சுமார் 6 ஹெக்டராகும். அது, Zhong, dongkua, xikua, dongxiakan, xita ஆகிய 5 முற்றங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முற்றங்களில் வெளியே சில நூறு ஆண்டுகாலம் வளர்ந்து வருகின்ற மரங்கள் காணப்படுகின்றன. பிற்காலத்தில், ஹோங் லுவோ தேவியுடன் தொடர்புடைய கதையால், அது ஹோங் லுவோ கோயில் என அழைக்கப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளாக, அது, புத்த மதத்தின் புனித இடமாக உள்ளது. அங்குள்ள பல தலைமை முனிவர்கள், அரசக் குடும்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கோயிலில், 244 அறைகள் உள்ளன. Zhong முற்றம், முக்கிய வாயல், தியான் வாங் மண்டபம், தா ச்சியோங் பௌ மண்படபம், ஷான் ஷேங் மண்டபம் ஆகியவற்றை, மையமாகக் கொண்டு, கிழக்கிலும் மேற்கிலும் நான்கு மண்டபங்களைக் கட்டியமைத்தது. அங்கு, ஆயிரம் கைகளைக் கொண்ட Guanyin மண்டபம், jialan மண்டபம், jixingzushi மண்டபம், yinguangzushi மண்டபம் மற்றும் திரும்றையை மனப்பாடம் செய்யும் அறைகள் இருக்கின்றன. கிழக்கு முற்றத்தில், வரவேற்பறையும், மேற்கு முற்றத்தில், மூத்த மத தலைவரின் அறை மற்றும் shifangtang அறையும், தெற்கு முற்றத்தில், பயிற்சிச் சதுக்கமும் இடம் பெறுகின்றன.