இன்று பெய்சிங்கில், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டிக்கு சிச்சுவான் வென் சுவான் கடும் நிலநடுக்கத்தில் மீட்புதவிப் பணி மற்றும் புனரமைப்புப் பணியின் முன்னேற்றும் குறித்து சீனத் துணைத் தலைமையமைச்சரும் சீனத் தேசிய நிலநடுக்கத் தலைமையகத்தின் தலைவருமான hui liangyu தெரிவித்தார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உரிய முறையில் குடியமர்த்துவது, மருத்துவச் சிகிச்சை நோய் தடுப்புப் பணியை முழுமையாகவும் சீராகவும் மேற்கொள்வது, அடிப்படை வசதிகளின் செப்பனிடுதலை விரைவுபடுத்துவது, பேரழிவு தடுப்புப் பணியை மேலும் செவ்வனே மேற்கொள்வது, பாதிக்கப்ட்ட பிரதேசங்களின் உற்பத்தியை வெகு விரைவில் மீட்டெடுப்பது ஆகியவை, அரசவையின் தற்போதைய முக்கிய பணிகளாகும்.
|