• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-24 11:06:36    
வானொலி கன்பிஃயூசியஸ் கழகம்கழகம்

cri
அண்மையில், சீனாவின் முதலாவது வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் சீன வானொலி நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. சீனப் பாண்பாட்டின் மீது ஆர்வம் கொண்ட அல்லது சீன மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டு நண்பர்களைப் பொருத்த வரை, இது ஒரு நற்செய்தியாகும். ஏனென்றால் இனிமேல் இக்கழகம் தயாரிக்கும் வானொலி நிகழ்ச்சி, இணையதள நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் வெளிநாட்டவர்கள் தமது தாய் மொழி மூலம் சீன மொழியைக் கற்றுக்கொள்ளலாம்.

நண்பர்களே, நீங்கள் கேட்டது, ஒரு செர்பிய சிறுமி மன்னம் செய்து பாடிய பழ் சீனப் பாட நூலின் செய்யுளாகும். அவருக்கு வயது 9 மட்டுமே. அவருக்கு சுலினா என்ற இனிமையான சீன பெயர் உண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் தாயுடன் அவர் சீனாவுக்கு வந்தார். அவருடைய தாய் சு சுன் யு மகள் பற்றி கூறியதாவது

3 ஆண்டுகளுக்கு முன் சீனா வந்தோம். அப்போது, அவருக்கு சீன மொழி பற்றி ஒன்றும் தெரியாது. சுமார் 2,3 திங்களில் அவர் ஒன்றும் பேசவில்லை. குழந்தைகளுடன் விளையாடிய போது கேட்ட கண்ணா மூச்சி என்ற சீன மொழி சொல் பற்றி என்னிடம் கேட்டார். நான் அவருக்கு விளக்கம் அளித்தேன். இப்படியே, படிப்படியாக சீன மொழியைக் கற்றுக்கொண்டு வருகின்றார். தற்போது அவர் ஒரு பெய்ஜிங் குழந்தை என்றார் அவர்.

தாய் மொழி போன்ற சூழ்நிலையில், சுலினா விரைவாக சீன மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். எமது வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் இந்த தத்துவத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. ஒரே வடிவத்திலான பாட நூலின் படி, வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் 38 மொழிகளில் தொடர் நிகழ்ச்சிகளை தயாரிக்கும். இந்த நிகழ்ச்சிகள், வானொலி ஒலிபரப்பு, இணைய ஒலிபரப்பு ஆகியவற்றின் மூலம் முழு உலகிற்கு வழங்கப்படும். அதாவது, உலகின் பல்வேறு இடங்களில் வாழும் நண்பர்கள் தாய் மொழி மூலம் சீன மொழியைக் கற்றுக்கொள்ளலாம்.

வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் நிறுவப்பட்டமை வானலையில் ஒரு நட்பு பாலத்தை அமைத்து, பல்வேறு நாடுகளின் சீன மொழி கற்கும் தேவையை நிறைவேற்றியுள்ளது என்று சீன துணை கல்வி அமைச்சர் zhang xin sheng கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

வானொலி கன்பிஃயூசியஸ் கழகத்துக்கு ஈடு செய்ய முடியாத மேம்பாடு உண்டு. பல்வேறு நாடுகளின் சீன மொழி கற்கும் தேவையை இது மேலும் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்ற முடியும். காரணம், சீன மொழியை கற்பிப்பதில் சீன வானொலி நிலையத்துக்கு 40 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உண்டு. 2வதாக, வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் தொலைதூர கல்வியின் தனிச்சிறப்பை இணைக்கலாம் என்றார் அவர்.

உண்மையில், 2004ம் ஆண்டு முதல், உலகில் பல்வேறு இடங்களில் வெளிநாட்டவருக்கு சீன மொழியை கற்பிக்கும் நிறுவனங்களை சீனா அமைக்க துவங்கியது. சீனப் பாரம்பரிய பண்பாட்டின் பிரதிநிதியான கன்பிஃயூசியஸின் பெயர் இவற்றுக்கு சூட்டப்பட்டன. இதுவரை, 60க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 200க்கும் அதிகமான கன்பிஃயூசியஸ் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளுடனான பரிமாற்றம் நாளுக்கு நாள் பரந்து ஆழமாகி வருவதுடன், சீன மொழியின் பண்பாடு மற்றும் பயன்பாட்டு மதிப்பும் உயர்ந்து வருகின்றது. மென்மேலும் அதிகமான வெளிநாட்டவர்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்கின்றனர். புள்ளிவிவரங்களின் படி, வெளிநாடுகளில் சீன மொழியைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. கன்பிஃயூசியஸ் கழகங்கள் அவர்களின் தேவையை முற்றிலும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலைமையில் வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் உருவானது.

வானொலி கன்பிஃயூசியஸ் கழகம், கற்பிக்கும் ஆற்றலில் கன்பிஃயூசியஸ் கழகத்தின் பற்றாக்குறையை நிரப்பலாம் என்று சீன மொழியின் சர்வதேச பரவல் தலைமை குழு அலுவலகத்தின் தலைவர் xu lin அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது

வானொலி கன்பிஃயூசியஸ் கழகத்தின் தனிச்சிறப்பு தெளிவானது. இதன் பரவல் வேகம் மற்றும் அளவு மிகவும் பெரியது. பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள கன்பிஃயூசியஸ் கழகங்களில் ஒன்றுக்கு சில நூறு மாணவர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், வானொலி கன்பிஃயூசியஸ் கழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பெறலாம். மேலும், கன்பிஃயூசியஸ் கழகத்தின் ஆசிரியர்கள் சீனப் பண்பாடு, சீனப் பாரம்பரிய சுதேசி மருத்துவம், சீன மூலிகை மருந்து, வூ ஷு முதலியவை பற்றிய அறிவுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது. இந்தத் துறையில், வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் அதிக அறிவுகளைப் பரவல் செய்யலாம். வானொலி கன்பிஃயூசியஸ் கழகம் பெரும் உதவி அளிக்கும் என்றார் அவர்.

தற்போது, உலகின் 5 கண்டங்களில் சீன வானொலி நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 3000ஐத் தாண்டியுள்ளது. இவற்றிலிருந்து சிறந்த வசதியுடையவற்றைத் தேர்ந்தெடுத்து, வானொலி கன்பிஃயூசியஸ் வகுப்புகளை சீன வானொலி நிலையம் உருவாக்கும். இவற்றின் உறுப்பினர்கள், வானொலி மற்றும் இணையதளம் மூலம் சீன மொழியைக் கற்றுக்கொள்ளலாம். அதேவேளையில், சீன அரசால் அனுப்பப்படும் சீன மொழி ஆசிரியர்களுடன் நேருக்கு நேர் பரிமாற்றம் செய்யலாம். தற்போது, கன்யா, ஜப்பான், ரஷியா, மங்கோலியா முதலிய நாடுகளில் சுமார் 10 வகுப்புகள் நிறுவப்பட்டுள்ளன அல்லது நிறுவப்பட்டு வருகின்றன.

தவிர, பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தனிச்சிறப்புக்கிணங்க, கல்வி நிகழ்ச்சிகளை அதிகரித்து, வெளிநாடுகளில் வானொலி கன்புஃயூசியஸ் கழகத்தின் சீன மொழித் தேர்வு மற்றும் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் பணியை முன்னேற்ற இந்தக் கழகம் பாடுபடும்.

சீன வானொலி இயக்குநர் wang geng nian கூறியதாவது

வானொலி கன்பிஃயுசியஸ் கழம் சளையாத முயற்சி மூலம், மொழி பண்பாட்டுப் பரிமாற்றுக்குக்காக, சீன மக்களுக்கும் உலக மக்களுக்கும் இடையில் ஒரு பாலத்தைக் கட்டியமைக்க விரும்புகின்றது. உலகில் பல்வேறு பண்பாடுகளின் வளர்ச்சி மற்றும் இணக்க உலகின் கட்டுமானத்துக்கு இது ஆக்கப்பூர்வ பங்காற்றும் என்றார் அவர்.

இனிமேல் மென்மேலும் அதிகமான நண்பர்கள் வானொலி கன்பிஃஃயுசியஸ் கழகத்தைத் தேர்ந்தெடுத்து, சீன மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகின்றோம்.