• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-24 09:44:48    
நேயர்களின் கருத்துக்கள்

cri
கலை: வணக்கம் நேயர்களே. உங்கள் எண்ணங்களின் வண்ணத்தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து எங்களுக்கு அன்பும் ஆதரவும் காட்டி ஊக்கமூட்டி வரும் நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்.
க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை எஸ். வி. துரைராஜா எழுதிய கடிதம்,. மே திங்கள் முதல் இடம்பெற்ற "உலகத்தார் அனைவரும் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டியின் எழுச்சி" செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியை கேட்டேன். சிறப்பான தகவல்களை அற்ய முடிந்தது. ஆகஸ்ட் திங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சாராம்சங்களை நாளுக்கு நாள் ஒலிபரப்பி வரும் சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.
கலை: நாகர்கோவில் பிரின்ஸ் ராபர்ட் சிங் எழுதிய கடிதம். சீன வானொலியின் செய்திகள் மூலம் ஐ. நாவின் பொருளாதார நிபுனர்கள் இவ்வாண்டு சீனாவின் பொருளாதாரம் 10. 7 விழுக்காடு வளரும் என்று மதிப்பிட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது. சீனாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது பற்றியும் அவ்வறிக்கை கூறியுள்ளது.
க்ளீட்டஸ்: பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில், ஷாங்ரிலாவிலுள்ள சிறுபான்மை தேசிய இன மக்களின் பண்பாட்டு வாழ்க்கை பற்றியும், ஷாங்ரிலா கலைக்குழு பற்றியும் அறிந்தோம். சிறுபான்மை இன மக்களின் பண்பாட்டையும், வாழ்க்கையையும் பற்றி அறிந்துகொள்ள சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது.
கலை: மல்ர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி கரிவலம்வந்த நல்லூர் ஜி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதம். சீன மொழி பேசும் பறவை பற்றியும், பலூனில் பறக்க விடப்பட்ட கடிதம் மீனின் வாலில் கண்டுபிடிக்கபட்டததையும், இறந்தபோனபின்னும் வாழ்ந்த மனிதனை பற்றியும் அறிந்துகொண்டோம். வேறுபட்ட தகவல்களை சுவையாக தந்தது நிகழ்ச்சி.

க்ளீட்டஸ்: அடுத்து சென்னை தி.நகர் என். ராஜேந்திரன் எழுதிய கடிதம்.
மஞ்சள் அரிசி மது பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி கேட்டேன். சீனாவில் புகழ்பெற்ற மஞ்சள் அரிசி மது தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றன, எந்தெந்த நாட்களில் இந்த மஞ்சள் அரிசி மதுவை மக்கள் பயன்படுத்துகின்றனர் போன்ற தகவல்களை கலையரசி அவர்களும், தமிழன்பன் அவர்களும் அழகாக தொகுத்து அளித்தனர். மஞ்சள் அரிசி மது உடல் நலத்திற்கு நல்லது என்றும் கூறக் கேட்டேன்.
கலை: அடுத்து தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி குறித்து பெரம்பலூர் சு. கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். ஹோட்டல் பற்றிய செய்திகளையும், அவர் வீட்டில் இல்லை, தகவல் தரவேண்டுமா, விரைவில் அவர் வீடு திரும்புவார் போன்றவற்றை எப்படி சீன மொழியில் சொல்வது என விளக்கமாக கூறினார் வாணி. தமிழ் மூலம் சீனம் புத்தகம் இருப்பதால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கிறது.
க்ளீட்டஸ்: கவுந்தப்பாஅடி பி.கே. பழனிசாமி எழுதிய கடிதம். விளையாட்டுச் செய்திகளில் ஒலிம்பிக் தொடர்பான பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. டென்னிஸ் போட்டி, டென்னிஸ் விராங்கனைகள், பூப்பந்து போட்டிகள் ஆகியவை பற்றிய தகவல்களும் கேட்டு மகிழ்கிறோம்.
கலை: அடுத்து அசுவபுரம், மும்பை சுகுமார் எழுதிய கடிதம். நேயர் நேரம் நிகழ்சியின் மூலம் கேட்கத் தவறிய நிகழ்ச்சிகளை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. சீனாவில் நூலகங்கள் அதிகரித்து வருவது அறிந்தேன். எல்லா நாடுகளும் இம்முறையை பின்பற்றுவது நல்லது. ஆரம்ப காலத்தில் புத்தரின் கருத்துக்களே அதிகம் அச்சேறியதாக கூறுகின்றனர். புத்தன் அகம், புத்தகம். உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் மேலும் அதிக தகவல்கள் வெளி வரக்கூடும்.
மின்னஞ்சல் பகுதி

……திருச்சி மு.பரத்வாஜ்……
சீனத் தமிழொலி இதழ் கிடைக்கப் பெற்றேன். சீனாவிற்கு வருகை தந்த "சிறப்பு நேயர்" நண்பர் பாண்டிச்சேரி என். பாலகுமார் அவர்களின் அனுபவம் படிப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. சீனாவில் அவரை வரவேற்ற விதம் மிகவும் நன்றாக இருந்தது. நேயர்களை கௌரவிப்பதில் சீனாவானொலி நிலையத்திற்கு நிகர் சீனா வானொலி நிலையம் தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
பணி தொடர வாழ்த்துக்கள்.
வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
சூன் திங்கள் 10 ஆம் நாள் இடம்பெற்ற •சீனாவில் இன்பப் பயணம்• நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தேன். •அழகான சின்யான் நகரம்• என்ற கட்டுரை என்னைப் பெரிதும் கவர்ந்தது. காரணம், அதில் அடுத்தடுத்து இடம்பெற்ற லிங்ஷான் கோயில், லீகூங் மலை, நாங்வான் ஏரி மற்றும் சிங்யாங்மாவ்சேங் தேயிலை பற்றிய செய்திகளாகும். மனதைக் கொள்ளை கொள்ளும் அம்சங்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்திருப்பது அரிதான ஒன்றாகும். ஆனால் இத்தகைய நிலைமையை சின்யான் பெற்றிருப்பதைக் கண்டு மனம் மகிழ்கின்றேன். வளமான நடையில் அமைந்த அருமையான கட்டுரை. நிலைக்கண்ணாடி போல, சீனாவைப் பற்றி தெளிவான முறையில் அறிந்து கொள்ளும் ஓர் அற்புத நிகழ்ச்சியாக •சீனாவில் இன்பப் பயணம்• நிகழ்ச்சி மாறியுள்ளது. என் பாராட்டுக்கள்.
……முனுகப்பட்டு.பி.கண்ண‌ன்சேகர்……
"நிலநடுக்க பிரதேசங்களில் நோய்த்தடுப்புப் பணி" செய்தித் தொகுப்பு மூலம் சி ச்சுவான் மாநிலத்தில் சீனச் சுகாதர அமைச்சு புயல் வேகத்தில் செயலாற்றி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் காயமடைந்த மக்களை காப்பாற்றி இருப்பது பாராட்டுக்குரியது. இந்த பகுதியில் 2000முதலுதவி மருத்துவ மீட்பு வண்டிகளும், 10000 சுகாதார நலப்பணியாளர்களும் பம்பரமாக சுழன்று செயல்பட்டு, காயமுற்ற பல ஆயிரம் மக்களை மருத்துவ மனைகளில் சேர்த்து காப்பாற்றியுள்ளதை வரவேற்கிறேன். இரவுப் பகல் எனப் பாராமல் தன்னலமின்றி பணியாற்றிய சுகாதாரத்துறையினர் அனைவரையும் உளமார பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
......மதுரைஅண்ணாநகர் N.இராமசாமி......

ஜூன் திங்கள் 2ம் நாளன்று அறிவியல் உலகம் நிகழ்ச்சியை கேட்டேன். மருந்துவர்கள் யாருக்கும் தெரியாமல் தனிமையில் துன்புறுகிறார்கள். அதிகமான துன்பமும் வலியும் அடையும் போது மருத்துவ அறிவால் தங்களுடைய உடல் நிலையை அறிந்து தங்களையே மாய்த்து கொள்ள தேவைப்படும் நச்சு அல்லது தூக்க மருந்தை எடுத்துக்கொள்கிறார்கள். மருத்துவர்கள் இறப்பதற்கு மாரடைப்பு காரணம் அல்ல. ஆண்டுக்கு 300, 400 மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற தகவலை அறிந்துகொண்டேன். இத்தகைய அரிய செய்திகளை தரும் சீன வானொலி தமிழ்ப்பிரிவை பாராட்டுகிறேன்.
……ஈரோடு, சி.சுந்தர் ராஜா…….
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேசத்தின் புனரமைப்புத் திட்டத்தை சீனா வகுக்கத் துவங்கியுள்ளதை பற்றிய செய்திதொகுப்பை கேட்டேன். 3 ஆண்டுகளுக்குள், பாதிக்கப்பட்டப் பிரதேசங்களின் அடிப்படை வசதி, மக்களின் வசிப்பிடம் முதலியவை நிலநடுக்கத்துக்கு முந்தைய நிலைமையை எட்ட சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கு பிந்திய 5 ஆண்டுகளுக்குள் இப்பிரதேசங்களின் சமூகம், பொருளாதாரம் ஆகியவை பன்முகங்களிலும் வளர்க்கப்படும் என்றும் அன்றைய செய்தித்தொகுப்பின் மூலம் தெரிந்து கொண்டேன்.
……திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்……
ஜூன் திங்கள் 4ம் நாள் காலை 'நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் பல்லவி பரமசிவம் அவர்கள் அளித்த நேர்காணலை கேட்டேன். 1986 ஆம் ஆண்டு ஈரோடு ராணா திருமண மண்டபத்தில் நடந்த 'பீகிங் வானொலி நேயர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு திரு. சுந்தரம் அவர்களிடம் கையெழுத்து வாங்கியது மற்றும் மறைந்த y.s.பாலு அவர்கள் உட்பட பல நேயர்களைச் சந்தித்த சுவையான நிகழ்வுகளை மனதில் அசை போட வைத்தது பரமசிவம் அவர்களின் அனுபவப் பகிர்வு.