க்ளீட்டஸ் – இன்று எந்த வகை சீன உணவு பற்றி கூறுகின்றோம்? வாணி – இன்று சைவ உணவு விரும்பும் நேயர்களுக்கு ஒரு சுவையான உணவு வகையின் தயாரிப்பு பற்றி கூற இருக்கின்றோம். க்ளீட்டஸ் – அப்படியா, நல்லது. கேட்க ஆவலாகவுள்ளது. வாணி – இதற்குத் தேவையான பொருட்களும் தமிழகத்தில் எளிதாக கிடைக்கலாம். தயாரிப்பு முறை எளிதானது.
க்ளீட்டஸ் – தேவையான பொருட்களைத் தெரிவிக்கவும். வாணி – நான் கூறுவேன். க்ளீட்டஸ், தமிழகத்தில் சாதாரண குடும்பத்தின் சமையல் அறையில், தேங்காய் துருவி எனும் கருவி உள்ளது. அப்படியா? க்ளீட்டஸ் – ஆமாம், தேங்காய் இடம்பெறும் உணவு வகைகளை தமிழ் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். வாணி – நல்லது, இன்றைய சீன உணவு வகையைத் தயாரிப்பதில் இந்த கருவி பயன்படுத்தப்படும். க்ளீட்டஸ் – அப்படியா? வாணி – ஆமாம், முதலில், தேவையான பொருட்களை கூறுகின்றேன். வெள்ளை முள்ளங்கி 1 கேரட் 1 கோதுமை மாவு போதிய அளவு உப்பு 2 சிறிய தேக்கரண்டி சமையல் எண்ணெய் 200 கிராம் வெங்காயத் தழை சிறிதளவு முட்டை 1 க்ளீட்டஸ் – அவ்வளவு தானா? வாணி – அவ்வளவு தான். க்ளீட்டஸ் – முதலில், முள்ளங்கி மற்றும் கேரட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, இவற்றின் தோலை நீக்கலாம். வாணி – அடுத்து, தேங்காய் துருவியைப் பயன்படுத்த வேண்டும், வெள்ளை முள்ளங்கியையும், கேரட்டையும் இதன் மூலம் துருவிக் கொள்ளவும். க்ளீட்டஸ் – வெங்காயத்தழையை வெட்டி கொள்ளவும். வாணி –வெள்ளை முள்ளங்கி, கேரட், வெங்காயத்தழை ஆகியவற்றை ஒரு குழிப்பாத்திரத்தில் கொட்ட வேண்டும். இதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். பாத்திரத்தில் 2 சிறிய தேக்கரண்டி உப்பை சேருங்கள். பிறகு பாத்திரத்திலுள்ள எல்லாவற்றையும் நன்றாக கலக்கும் படி கிளறுங்கள். அப்படியே 5 நிமிடங்கள் வையுங்கள்.
க்ளீட்டஸ் – இந்த போக்கில், பாத்திரத்திலுள்ள முள்ளங்கி கலப்பிலிருந்து சிறிதளவு சாறு வெளியேறும். வாணி – இதைச் தீர்க்கு வகையில், கோதுமை மாவை இதில் சேர்க்கலாம். க்ளீட்டஸ் – எவ்வளவு மாவு தேவைப்படும். வாணி – முள்ளங்கி கலப்பின் 4 பகுதியில் ஒரு பங்கு அளவிலான கோதுவை மாவு சேர்க்கப்படலாம். க்ளீட்டஸ் – மேலும், பாத்திரத்தில் எல்லாவற்றையும் நன்றாக கிளற வேண்டும். வாணி – இப்போது, வாணலியை அடுப்பின் மீது வைக்கலாம். இதில் சமையல் எண்ணெயை ஊற்றவும். முள்ளங்கி மாவு கலப்பை தேக்கரண்டியின் உதவியுடன் சிறிய பந்துகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். க்ளீட்டஸ் – முள்ளங்கி பந்துகளை எண்ணெயில் தனித்தனியாக வைத்து, மிதமான சூட்டில், அவற்றை பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும். வாணி – பொன்னிறமாகியதுடனே, அவற்றை வாணலியிலிருந்து வெளியே எடுத்து, தட்டில் வைக்கலாம்.
க்ளீட்டஸ் – இன்றைய சுண்டல் தயார். வாணி – சிறிய குறிப்புகள். முள்ளங்கியில் சாறு உள்ளது. உப்பு சேர்க்கப்பட்ட பின், இந்த சாறு வெளியேறும். ஆகையால், கோதுவை மாவு சேர்க்கப்பட்ட பின்னர் தான், இந்த மாவு சாறு உறிஞ்சிக் கொள்ளும். க்ளீட்டஸ் – மேலும், தயாரிக்கும் போது அதிக சூட்டை தவிர்க்க வேண்டும். வாணி – சொந்த விருப்பத்தின் படி, மக்காச்சோள மாவுடன் இதை தயாரித்து சாப்பிடலாம்.
|