• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-24 14:53:58    
பேரிடர் நீக்க மீட்புதவி பொருட்களின் நிர்வாகம்

cri

மே 12ம் நாள் சீனாவின் சிச்சுவான் வெச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் உடனடியாக பேரிடர் நீக்க உதவி தொகை மற்றும் பொருட்களை திரட்டியுள்ளன. சமூகத்தின் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நன்கொடையாக உதவி தொகையையும் பொருட்களையும் உற்சாகத்துடன் வழங்கியுள்ளன. கண்காணிப்பு மற்றும் தணிக்கை நிலைமையை பார்த்தால் இந்த உதவி தொகை மற்றும் பொருட்கள் பற்றிய நிர்வாகத்திலும் பயன்பாட்டிலும் பெரிய பிரச்சினைகள் ஏதும் கண்டறியப்பட வில்லை என்று சீன அதிகாரி ஒருவர் 23ம் நாள் தெரிவித்தார்.
புள்ளிவிபரங்களின் படி மொத்தம் 5430 கோடி யுவான் பேரிடர் நீக்க மீட்புதவி தொகையாக சீனாவின் பல்வேறு நிலை நிதி வாரியங்களால் வழங்கப்பட்டது. 5250 கோடி யுவான் மதிப்புள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவித் தொகையும் பொருட்களும் பெறப்பட்டுள்ளன. பேரிடர் நீக்க நிதி தொகை மற்றும் பொருட்களை விநியோகிப்பதற்கு பொறுப்பான பொது துறை அமைச்சகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இந்த பொருட்களை விநியோகிக்கும் அதேவேளை அவற்றுக்கான நிர்வாகமும் பயன்பாடும் கண்டிப்பான முறையில் இருப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று சீனப் பொது துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் சியான் லி அம்மையார் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.

பேரிடர் நீக்கத்திற்கு தேவையான நடுவண் அரசின் உதவித் தொகை, நிதி மற்றும் பொது துறை அமைச்சகங்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் அவை அரசு தணிக்கை பணியகத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்ட்ட மாநில நிதி மற்றும் பொது துறை வாரியங்கள் விநியோகத்திற்கு பொறுப்பேற்க தொடர்புடைய வாரியங்களை திரட்டின. பெறப்பட்ட நன்கொடை தொகையை பதிவு செய்வது, அதை நிர்வகிப்பது, சரியான செலவு கணக்குகளை பதிவு செய்வது என்பவை தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்படுகின்றது. தவிரவும் நிதி அமைச்சகம் நன்கொடை வழங்குவோருக்கு அத்தொகை பதிவு பெறப்பட்டதற்கான பற்றுச் சீட்டை வழங்கியுள்ளது. நன்கொடை வழங்கியோரின் விருப்பத்தின் படி உதவி தொகையும் பொருட்களும் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்று அவர் கூறினார். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் உணவு மற்றும் உடை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
சமூக கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் பொது துறை அமைச்சகம் நாள்தோறும் செய்தி ஊடகங்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களின் புள்ளிவிபர தகவலை அறிவித்துள்ளது. அவற்றை ஏற்றுக் கொண்டு விநியோகிக்கும் தகவல் பயன்பாடு மற்றும் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை சீனக் கண்காணிப்பு மற்றும் தணிக்கை வாரியங்கள் பேரிடர் நீக்க உதவித் தொகை மற்றும் பொருட்களை ஏற்றுக் கொள்வது மற்றும் பயன்பாடு பற்றி சோதனை செய்துள்ளன. எடுத்து காட்டாக அரசின் தணிக்கை பணியகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் பேரிடர் நீக்க உதவித் தொகையின் திரட்டல், நிர்வாகம், விநியோகம், மற்றும் பயன்பாட்டை முழுமையாக பின்பற்றி கொள்வதற்காக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தணிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 ஆயிரம் வாரியங்கள் தணிக்கையின் கீழ் உள்ளன. 2890 கோடி யுவான் பேரிடர் நீக்க உதவித் தொகை தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
நடுவண் அரசு பேரிடர் நீக்க உதவி மற்றும் பொருட்களை கண்காணித்து நிர்வகிப்பது தவிர, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களும் நகரங்களும் கண்டிப்பான முறையில் அவற்றை பயன்படுத்துவது பற்றிய நிர்வாக விதிகளை வகுத்துள்ளன. சிச்சுவான் மாநிலத்தின் பெய்ச்சுவான் பேரிடர் நீக்க ஆணைய பகுதியின் பொருட்களின் நிர்வாகக் குழுத் தலைவர் ச்சோ மீங் கூறியதாவது.
 

எங்கள் பொருட்களின் நிர்வாகக் குழுவை கண்காணிப்பதன் பயனை உத்தரவாதம் செய்யும் வகையில் நாம் பெய்ச்சுவான் மாவட்ட மக்கள் பேரவையின் துணைத் தலைவரை குழுவில் கலந்து கொள்ளுமாறு அழைத்தோம். அதேவேளை பேரிடர் நீக்க பணி நடைபெறும் இடத்திலிருந்து தொண்டர் ஒருவரை தேர்வு செய்தோம். இவர் தனியாக தொழில் நடத்துகிறார். நமது பொருட்களின் விநியோகத்தை கண்காணிப்பதில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று அவர் விளக்கினார்.
இதுவரை பேரிடர் நீக்க உதவி மற்றும் பொருட்களின் நிர்வாகம் வரையறுக்கப்பட்ட முறையில் நடைபெறுகின்றது. அண்மையில் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரிடர் நீக்க உதவித் தொகை மற்றும் பொருட்களின் நிர்வாகம் அதன் பயன்பாட்டை வலுப்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது.