• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-27 09:29:29    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டுக்குசீனாவிலுள்ள பிரிட்டன் தூதரின் நல்வாழ்த்துக்கள்

cri
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை முன்னிட்டு சீன மக்கள் பங்கெடுத்து வரும் உற்சாகத்தை கண்டு சீனாவிலுள்ள பிரிட்டன் தூதர் William மனமுருகுவதாக தெரிவித்தார். அவர் பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் சீன மக்கள் பங்கொடுத்து வரும் உற்சாகத்தைப் பார்க்கும் போது நான் மனமுருகுகின்றேன். ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்களில் அதிக மக்கள் சேர்வது எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றார் அவர்.
அடுத்த கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை இலண்டன் நடத்தும். இதே போல பிரிட்டன் மக்கள் மாபெரும் உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று William விருப்பம் தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவுக்கு முன், பிரிட்டன் தலைமை அமைச்சர் Brown பெய்சிங்கிற்கு வருகை தருவார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை அவர் கண்டு களிப்பதோடு, நிறைவு விழாவில் நடைபெறும் ஒலிம்பிக் கொடி ஒப்படைப்பு விழாவிலும் கலந்துகொள்வார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் புதிய முன்னேற்றத்தைப் பெற பிரிட்டன் விரும்புகின்றது என்று William வெளிப்படுத்தினார்.

2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், பதக்க வரிசையில் 4வது இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம். ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், பதக்க வரிசையில் 10வது இடம் பெற்றோம். எனவே, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் மேலும் நல்ல சாதனைகளை பெற நாங்கள் விரும்புகின்றோம் என்றார் அவர்.