• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-25 09:43:50    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டுக்கு சீனாவிலுள்ள தாய்லந்தின் தூதரின் நல்வாழ்த்துக்கள்

cri
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீனா நடத்துவது என்பது சீனா உள்ளிட்ட முழு உலகின் முக்கிய விழாவாகும். ஆசிய நாடுகளைப் பொறுத்த வரை, இது முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவிலுள்ள தாய்லாந்தின் தூதர் Manathat, பெய்சிங்கில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். அனைத்து ஆசிய மக்கள் மற்றும் நாடுகளையும் பொறுத்த வரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆசிய நாடுகளின் பிரதிநிதி என்ற முறையில் சீனா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்துகின்றது. சீனா மீது எதிர்பார்ப்பை பல்வேறு ஆசிய நாடுகள் கொண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெற விரும்புகின்றன என்றார் அவர்.

பெய்சிங் ஒலிம்பி்க் விளையாட்டு போட்டியின் துவக்க விழா மீது Manathat எதிர்பார்ப்பு கொண்டு வருகின்றார். தேசிய விளையாட்டரங்கான பறவை கூடு கட்டிட அற்புதம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றமாகும். பறவை கூட்டில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழா நடைபெறுவது உலகத்துக்கு ஆத்திர்ச்சியை வழங்குவது உறுதி என்று அவர் கருதுகின்றார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில், சீன

எழுச்சியையும் ஒலிம்பிக் எழுச்சியையும் சுவைஞர்கள் பார்க்க நான் விரும்புகின்றேன். முதலாவதாக, சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேங்களின் பண்பாட்டு தனிச்சிறப்பு வெளிப்படுத்தப்படும். உலகத்துக்கு ஒற்றுமையான சீன தேசம் காணப்படும். இரண்டாவதாக, பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டு தனிச்சிறப்பு வெளிப்படுத்தப்படும். உலக இணக்கம் மற்றும் ஒருமைப்பாடு காணப்படும் என்றார் அவர்.
சீன அரசு மற்றும் மக்கள் இன்னலைச் சமாளிப்பது உறுதி. அருமையான தாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று Manathat நம்பிக்கை தெரிவித்தார். பேரிடர் நீக்க

பணிகளில், சீன அரசு முயற்சி மேற்கொள்வதற்கு அவர் மதிப்பு தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்குமுன், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், பேரிடர் நீக்க பணியை சீனா மேற்கொள்வதோடு, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பல்வேறு ஆயத்த பணிகள் சுமுகமாக நிறைவேற்றி வருகின்றது. சீனத் தலைவர்கள், அரசு மற்றும் மக்களின் பொது முயற்சியில், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடத்த நான் உளமார வாழ்த்துகின்றேன் என்றார் அவர்.