• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-25 11:20:39    
குடிபோதை

cri

முன்பொரு காலத்தில் ஷுங்ஷான் என்ற இடத்தில் வாழ்ந்த தி ஷி என்பவன் மதுபானம் தயாரிப்பதில் பெயர் பெற்றவன். நன்றாக குடிக்கக்கூடிய ஒருவர் கூட அவனது மதுவை கொஞ்சம் குடித்தாலும் போதை தலைக்கேறி மயங்கி விழுந்துவிடுவார். அவனது மது ஒருவரை ஆயிரம் நாட்களுக்கு போதையாக்கக் கூடியது என்று மக்களிடையே பரவலாக புகழ்பெற்றது.
அந்த பகுதியில் தி ஷி எப்பது தனது மதுவுக்காக பெயர் பெற்றவனாக இருந்தானோ, அதேபோல லியு ஷுவான்ஷுவும் பெருங்குடி குடிப்பதற்காக பெயர் பெற்றவன்.
ஒருமுறை பெருங்குடிகார லியு ஷுவான்ஷு மதுபானப் புகழ் தி ஷியிடம் சென்று கொஞ்சம் மது கேட்டான். அப்போதுதான் புதிதாக மதுவை தயாரித்து முடித்த தி ஷி இன்னும் மது பதமாகவில்லை, எனவே நான் அதை உனக்கு தர முடியாது என்றான்.
அட புதிய மதுவாக இருந்தால் என்ன? ஒரு கோப்பை கூட தரமாட்டாயா? கொஞ்சம் கொடுக்கலாமே என்று கெஞ்சினான் லியு.


மன்றாடி கேட்கும் லியுவை கண்டு மனமிறங்கிய தி ஷி ஒரு கோப்பை மது கொடுத்தான். அதை வாங்கிக் குடித்த லியு " அடடே. அபாரம். சிரந்த சுவை. இன்னும் ஒரு கோப்பை கொடு" என்று கேட்டான். அதற்கு தி ஷி, போதும் போதும். முதலில் நீ விட்டுக்கு செல். மறுபடி பிறிதொரு நாள் வா தருகிறேன். இப்போது நீ குடித்த ஒரு கோப்பை மதுவின் போதை தெளியவே ஆயிரம் நாட்களாகும் என்று புன்சிரிப்புடன் மறுத்து அவனை அனுப்பினான்.
இன்னொரு கோப்பை கிடைக்காத வருத்தமும் கோபமும் போதையுமாக வீடு திரும்பிய லியு, வீட்டில் நுழைந்த சில நிமிடங்களில் தன் நினைவற்றவனாய் மயங்கி விழுந்தான். உணர்வற்றுக்கிடந்த அவனை சுற்றி நின்ற அவனது குடும்பத்தினர், அவன் கதை முடிந்தது என்றெண்ணி அழுது புலம்பி பின் அவனை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இது நடந்து ஏறக்குறைய மூன்றாண்டுகள் ஆனது. ஒரு நாள் தி ஷி லியுவின் நினைவு வர அனேகமாக அவனுக்கு ஆயிரம் நாள் போதை தெளிந்திருக்கும், போய் பார்க்கலாம் என்றெண்ணி அவன் வீட்டுக்கு போனான்.பியு ஷுவான்ஷுவின் வீட்டுக்கு சென்று எங்கே அவன் என்று தி ஷி விசாரித்தபோது, ஒன்றும் விளங்காமல் விழித்த லியு குடும்பத்தினர் அவன் இறந்து மூன்றாண்டுகள் துக்கமும் அனுசரித்து முடித்த கதையை சொல்ல, தி ஷி அதிர்ச்சிய்டைந்தான். பின். அடடே நான் கொடுத்த மதுவின் வீரியம் அவனை நினைவற்றவனாக்கி, உணர்வில்லாமல் செய்திருக்கும். என்னுடைய தரமான மது அவனுக்கு ஆயிரம் நாட்களுக்கு நல்ல உறக்கம் தந்திருக்கும். ஆனால் இப்போது அவன் அனேகமாக விழித்தெழும் நேரமாகியிருக்கும் என்று கூறி அவன் அடக்கம் செய்த இடத்தை தோண்டுமாறு கோரினான்.


அதன்படியே, அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தோண்டி அவனது உடல் வைக்கப்பட்ட பெட்டியை திறந்தபோது, கொட்டாவி விட்டவனாய் துயில் நீங்கி கண்விழித்தான் லியு ஷுவான்ஷு. கண் விழித்து அடடே, அற்புதம். இதுவரை இப்படியொரு போதை தரும் மதுவை உண்டு நான் களித்ததில்லை. ஒரு கோப்பையிலேயே இப்படியொரு போதை தந்த உன் மதுவின் மகத்துவத்திற்கான ரகசியம் என்ன? இப்போது என்ன மணி ஆகிரது என்று கூறியவனாக தனக்கு நடந்த எதையும் அறியாதவனாய் படபடவென பேசினான் லியு ஷுவான்ஷு.
அவனை சுற்றியிருந்த அனைவரும், லியு ஷுவான்ஷு மதுவின் போதையில் மயங்கி, இறந்தவன் போல் உணர்வற்றுக்கிடந்து, அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் கண்விழித்து நின்ற வேடிக்கையை கண்டு கலகலவென்று சிரித்தனர். அது மட்டுமல்ல, இறந்தவனாய் கிடந்து போதை தெளிந்து எழுந்த லியு ஷுவான்ஷுவின் கொட்டாவியில் வீசிய மதுவின் வாடையை நுகர்ந்த சிலர் மூன்று திங்கள் காலம் தாங்களும் போதையாகி கிடந்தார்களாம்.