• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-26 09:37:55    
ஹெ நான் மாநிலத்தின் ஷிபோஃ என்னும் கிராமம்

cri
சீனாவின் பல பெரிய நகரங்களில், படைப்பாளர்கள் மற்றும் ஓவியர்கள் நிறைந்த பிரதேசங்கள் உள்ளன. பெய்ஜிங்கின் 958 தொழிற்சாலை, ஷாங்காயின் சூசோ ஆற்றங் கரையிலுள்ள கலை பிரதேசம் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. இன்று, ஹெ நான் மாநிலத்தின் சாங்சோ நகரிலுள்ள ஷிபோஃ என்னும் கலைகளின் சங்கமத்தை அறிமுகப்படுத்துகின்றோம்.

சாங் சோ நகரப்பிரதேசத்தின் வடமேற்கில் அமைந்துள்ள, ஷிபோஃ கிராமம், தூய்மையான சுற்றுச்சூழலையும் அமைதியையும் கொண்டது. 2006ம் ஆண்டு ஏப்ரல் திங்கள், அமெரிக்காவில் வாழும் ஓவியர் ஹுவாங் கோ ரை முதன்முதலில் இங்கு தமது அலுவலகத்தை நிறுவினார். அவர், வீட்டின் வெளிச்சுவரை மஞ்சள் வண்ணமாக மாற்றி, அதன் மேல் பகுதியில் அலுவலகத்தைக் கட்டியமைத்தார். பிறகு, வாங் யீ திங், சூ சியேள ஷி உள்ளிட்ட கலைஞர்கள், கட்டிடத்தின் மேல் பகுதியில் தமது அலுவலகங்களைக் கட்டியுள்ளனர். 2006ம் ஆண்டின் மே திங்கள் 30ம் நாள், ஷிபோஃ என்னும் கலை சங்கமம், நிறுவப்பட்டது.

ஓராண்டு காலத்தில், இக்கிராமத்தில் நூற்றுக்கு அதிகமான கலை அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஹெனான் மாநிலத்தில், கலை திறமைசாலிகள் அனைவரும் ஒன்று திரண்டுள்ள ஓரேயொரு கிராமாமாக இது மாறியுள்ளது.
ஷிபோஃ கிராமத்தில் செல்லும் போது, அதன் பாதையின் பக்க சுவர்களில் நிறைந்துள்ள ஓவியங்களைப் பார்க்கலாம். ஓவியர் ஹுவாங் கோ ரை எமது செய்தியாளரிடம் பேசுகையில், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களிலுள்ள கலைஞர்களின் அலுவலகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தூய்மையான அமைதியான சுற்றுச்சூழல், குறைவான வாடகை ஆகியவை, ஷிபோஃ என்னும் கலை சங்கமத்தின் மேம்பாட்டிற்கு காரணங்களாகும். அதனால், மேலும் அதிகமான

கலைஞர்கள் ஈர்க்கப்பட்டனர் என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
ஷிபோஃ என்னும் கலை சங்கமம் நிறுவப்பட்ட துவக்கத்தில், நான் ஒருவன் மட்டுமே அலுவலகம் ஒன்றை கட்டியிருந்தேன். அதன் ஓராண்டு நினைவு கண்காட்சியில், சுமார் 30 கலைஞர்கள் கலந்துகொண்டனர். இப்பொழுது, இக்கிராமத்தில் வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ள கலைஞர்கள் நூற்றுக்கு அதிகமானோர். எண்ணெய் ஓவியம், பாரம்பரிய சீன ஓவியம், நேர்த்தியான சீனக் கையெழுத்து, கலைச் சிற்பம், புகைப்படக்கலை, மட்பாண்ட கலை முதலிய துறைகளில் ஈடுபடுகின்ற கலைஞர்கள் இதில் இடம்பெறுகின்றனர்

என்றார் அவர்.
ஷிபோஃ என்னும் கலை சங்கமம் நிறுவப்பட்ட பின் இதுவரை, இக்கிராமத்தில், நான்கு கண்காட்சிகளை நடத்தியுள்ளது. இவ்வாண்டின் துவக்கத்தில், நியூயார்க்கிலுள்ள SOHO 456 என்னும் ஓவியவிறைந்தாயில், கண்காட்சியை நடத்தியது. அதன் மூலம், கலைஞர்களின் படைப்புகள், நியூயார்க் பார்வையாளர்களின் மனதில் குறிப்பிடத்தக்க விதமாக ஆழப்பதிந்துள்ளன.