வரவு செலு திட்டத்திலான சீன நடுவண் அரிசின் திருத்தம்
cri
சீனாவின் சிச்சுவான் வெச்சுவான் நிலநடுக்கத்துக்கு பின் பேரிடர் நீக்க மீட்புதவியின் தேவைக்கேற்ப இவ்வாண்டுக்கான நடுவன் அரசின் வரவு செலவு திட்டம் சரிபடுத்தப்படும். நிலநடுக்கத்திற்கு பிந்திய புனரமைப்புக்கு 7000 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படும். உண்மையான நிலைக்கு ஏற்ப இந்த திட்டம் சரிப்படுத்தப்படும் என்று சீன மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி 26ம் நாள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானித்துள்ளது. இந்த நிதித் தொகையில் 6000 கோடி யுவான் மத்திய வரவு செலவை திட்டதின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். ஏனையவை வாகன வரி, குலுக்கல் மற்றும் அரசு மூலத் தனத்திலிருந்து திரட்டப்படும். இந்த தொகை முக்கியமாக பயணியர் வீடு கட்டியமைமைத்தல், பள்ளிகளில் வகுப்பறைறை மீட்பது, மருத்துவ மனைகள், போக்குவரத்து மீட்பு, மின்சார விவியோகம் முதலிய அடிப்படை தேவைகளில் பயன்படுத்தப்படும்.
|
|