மாறாத திபெத்தின் வெளிநாட்டு திறப்பு கொள்கை
cri
சீனாவின் திபெத்தின் வெளிநாட்டு திறப்பு கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு சியென் சௌ 26ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மார்ச் 14 கடும் வன்செயல்கள் நிகழ்ந்த பின் திபெத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுற்றுலா துறை 25ம் நாள் அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டது. இது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் திபெத்தில் இயல்பு நிலை மீட்கப்பட்டமை திபெத் இன மக்கள் உள்ளிட்ட சீன மக்கள் அனைவரின் நலனுக்கு பொருந்தியது. இதுவும் சர்வதேச சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது. திபெத் நிலைமை நிதானமாகியுள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகள் திபெத்தில் சுற்றுலா செய்வது மிகவும் முக்கிய உற்சாகமான முன்னேற்றமாகும் என்றார் அவர்.
தற்போது திபெத்தின் நிலைமையில் இன்னும் சில எதிர்பாராத காரணிகள் இருக்கக் கூடும் என எண்ணும் நிலையில் வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்ளூர் அரசின் ஏற்பாட்டில் பணிப் பயணம் செய்யலாம் என்று லியு சியென் சௌ விருப்பம் தெரிவித்தார்.
|
|