• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-30 09:32:38    
சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வ நாள்

cri

 

ஜூன் திங்கள் 14ம் நாள், சீனாவின் மூன்றாவது பண்பாட்டு மரபுச் செல்வ நாளாகும். ஆண்டுதோறும், இப்பண்பாட்டு மரபுச் செல்வ நாளின் போது, சீனாவின் பண்பாட்டு அமைச்சகமும் பல்வேறு பண்பாட்டு வாரியங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம், பாரம்பரிய பண்பாடுகளை பொது மக்கள் அறிந்துகொண்டு அதை பரவல் செய்யும் கடமைக்கு பொறுப்பேற்க ஊக்கம் அளிக்கப்படுவர்.

இவ்வாண்டு, நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தின் கலைஞர்கள் பெய்ஜிங்கில் சிறப்பு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இந்நிகழ்ச்சிகளின் மூலம், மக்களின் இடர்களைச் சமாளிக்கும் எழுச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் பண்டைக்கால முக்கிய வரலாற்றுப் பண்பாட்டு மரபுச் செல்வங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நணபர்கள் அறிந்துகொள்ளுமாறு, நூற்றுக்கணக்கான கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், உரைகள் போன்ற நடவடிக்கைகளை பெய்ஜிங் மாநகரம் ஏற்பாடு செய்துள்ளது.


சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வ நாள், 2006ம் ஆண்டு நிறுவப்பட்டது. பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும், ஜூன் திங்கள் இரண்டாவது சனிக்கிழமையை பண்பாட்டு மரபுச் செல்வ நாளாக சீன அரசு விதித்தது. 2006ம் ஆண்டின் முதலாவது மரபுச் செல்வ நாள் முதல், பல்வேறு நிலை அரசாங்கங்கள் பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


மே திங்கள் 12ம் நாள், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் கடுமையான நிலநடுக்கத்தால், மாபெரும் உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்பட்டது. தவிரவும், பல பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கு முன்கண்டிராத சேதங்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிச்சுவான், ஷான்சி, கான்சு முதலிய பிரதேசங்களில் கணிசமான பண்பாட்டு மரபுச் செல்வங்கள் காணப்படுகின்றன.


நண்பர்களே, சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வ நாள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.