• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-27 08:54:38    
சீனாவின் பாவ்ஆன் இனம்

cri
சீனாவின் பாவ்ஆன் இன மக்களின் நடையுடைபாவனைகள், அவர்கள் இஸ்லாம் மதத்தை நம்புவதால், உள்ளூர் ஹய் இன மக்களிடம் உள்ளது போலவே காணப்படுகின்றன. அதனால், அவர்கள் பாவ்ஆன் ஹய் இன மக்கள் என்றும் கூறப்படுகின்றனர். அவர்கள், சீன வடமேற்கு பகுதியின் gansu மாநிலத்தின் jishi மலையின் துங்சியாங் மற்றும் சாலா இனத் தன்னாட்சி மாவட்டத்தில் வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள் தொகை, 12 ஆயிரமாகும்.

பாவ்ஆன் இன மொழி, Altic மொழி குடும்பத்தின் மங்கோலிய கிளையைச் சேர்ந்தது. பாவ்ஆன் இன மக்கள், இஸ்லாம் மத நம்பிக்கை கொண்டவர்கள்.

வணிகத் தொழில், பாவ்ஆன் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றுகிறது. நூற்றுக்கு மேலான ஆண்டுகால வரலாறு கொண்ட தாஹோசியா சந்தை, இன்றும் மிகப் பிரமாண்டமானது. இது, ச்சிங்காய், gansu முதலிய இடங்களை இணைக்கின்ற மையமாகும். புகழ் பெற்ற பாவ்ஆன் இடுப்பு கத்திக்கு, நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. 30 வகைகள் கொண்ட இந்த கத்தி, வடமேற்கு சீனாவில், குறிப்பாக, திபெத்தில் அதிகமாக விற்கப்படுகிறது.

அலைந்து திரியும் ஆயர் மேய்ச்சல் இனமான மங்கோலிய மக்களின் மற்போர், குதிரை ஏறி அம்பு எய்தல் ஆகியவற்றை போன்ற விளையாட்டுகளை, பாவ்ஆன் இன மக்கள் நிலைநிறுத்தினர். உணவுப்பொருட்களில், கோதுமையும் அரிசியும் அவர்கள் முக்கியமாக சாப்பிடுகின்றனர். ஆடு மாடு இறைச்சிகளையும் சாப்பிடுகின்றனர். ஆனால், பன்றி, குதிரை, கழுதை, நாய் முதலிய விலங்குகளை அவர்கள் சாப்பிடுவதில்லை.

பாவ்ஆன் இன மக்களின் திருமணம், இஸ்லாமிய நாட்காட்டியின்படி வெள்ளிக்கிழமையில், மணப்பெணின் வீட்டில் நடைபெறுவது வழக்கம். நோன்பு முடிவு விழா, குர்பான் விழா, கடவுளை வழிபடும் விழா முதலியவை, பாவ்ஆன் இனத்தின் முக்கிய விழாக்களாகும். விழாவின் போது, சுவையான உணவுகளைத் தவிர, தலைசிறந்த தேநீரையும் பருகுகின்றனர். தவிரவும், தேநீர் கெண்டிகளும், கோப்பைகளும் தலைசிறந்ததாக இருக்க வேண்டும்.