• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-27 10:22:57    
சாட்சியளிக்காத ஒப்பந்தம்

cri
கலை......வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்........இந்நிகழ்ச்சி மூலம் உங்களுக்கு சேவை புரிவதில் மிக்க மகிழ்ச்சி.

கலை......கடந்த நிகழ்ச்சியில் திபெத் சீனாவைச் சேர்ந்த பகுதி என்பதை நிரூபிக்கும் தொல் பொருட்களை எடுத்துக்காட்டி விளக்கிக் கூறினோம்.

தமிழன்பன்........ஆமாம். திபெத் பிரச்சினை பற்றி மேலை நாட்டு செய்தியேடுகள் தவறாக தகவல் பரப்பியதால் உலகில் பல பல மக்கள் திபெத் சீனாவை சேராதது என்ற கருத்தை கொண்டுள்ளனர்.

கலை......சரி தான். ஆகவே உண்மையை மக்களின் கண்முன் கொண்டு வந்து பல தகவல்களை கொண்டு விலாவாரியாக விளக்க வேண்டும். இது பொறுமையோடு முயற்சிக்க வேண்டிய செயல்பாடு கூட.

தமிழன்பன்........பரவாயில்லை. இதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

கலை......ஆமாம். ஆகவே இன்றைய நிகழ்ச்சியில் மேலை நாட்டு செய்தியேடுகள் கருத்திலுள்ள லாசா ஒப்பந்தம் பற்றி விளக்கி கூறுகின்றோம்.

தமிழன்பன்........மேலை நாட்டு செய்தியேடுகள் லாசா ஒப்பந்தம் பற்றி பிரச்சாரம் செய்வதன் மூலம் திபெத் சீனாவை சேராதது என்ற கருத்தை பரப்ப முயற்சிதுள்ளன. அப்படியிருந்தால் லாசா ஒப்பந்தம் எதை பற்றியது?இது பற்றி நாம் நேயர்களுக்கு விளக்கி தெளிவுப்படுத்த வேண்டும்.

கலை......நீங்கள் சொன்னது சரிதான். இதுவும் எங்கள் கடமை.

தமிழன்பன்........லாசா ஒப்பந்தம் எந்த நிலையில் உருவாக்கப்பட்டது?

கலை..... அது பிரிட்டன் படையினர் சீனாவின் உரிமை பிரதேசத்தை ஊடுருவிய போது ஏற்படுத்தப்பட்டது. அதில் கையொப்பமிட்ட இருதரப்புக்கும் ஒப்பந்தம் உருவாக்குவதற்கு தேவையான தகுநிலை ிருக்கவில்லை. ஒப்பந்தம் ஏற்படுத்திய வழிமுறையும் சட்டத்தை மீறியது. அது பிரிட்டன் திபெத்தை ஆக்கிரமித்த உண்மையை நிரூபிப்பதை உறுதிப்படுத்துவதின்றி வேறு எதுவும் அல்ல.

தமிழன்பன்........இது பற்றி நிபுணர்களின் கருத்து என்ன?

கலை......இது பற்றி சீனாவின் திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் லியன் சியாங் மின் கருத்து தெரிவித்துள்ளார். பொதுவாக கூறினால் அரசுரிமை கொண்ட நாடுகள் ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் சர்ச்சையை தீர்க்கும் வழிமுறையாகும். சர்வதேச சமூகம் அதன் சட்டபூர்வ தன்மையையும் பயனையும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் இந்த விதி லாசா ஒப்பந்தத்துக்கு பொருந்தியதல்ல. ஏனென்றால்

தமிழன்பன்........லாசா ஒப்பந்தம் எந்த நிலைமையில் உருவாக்கப்பட்டது என்பதை முதலில் கருத்தில் கொள்ளாமல் இருக்கின்ற மேலை நாட்டு செய்தியேடுகள் சட்டபூர்வமற்ற விதியில் லாசா ஒப்பந்தத்தை சேர்த்துள்ளன. குறிப்பாக உடன்படிக்கையை உருவாக்குவதற்கு தேவையான இருதரப்பின் தகுநிலையை பார்க்க வில்லை. இது தான் லாசா ஒப்பந்தத்தை தவறாக புரிந்து கொள்வதற்கான முக்கிய காரணமாகும். அதன் விளைவாக திபெத் அப்போதே சுந்திரமானது என்ற தவறான கருத்து உருவாயிற்று என்றார் அவர்.

கலை......அதாவது நாடளவில் ஒப்பந்தம் உருவாக்குவதற்கு அதற்கு தகுந்த உயர் நிலையிலுள்ள ஆட்சியாளர்கள் அல்லது அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தனியாரோ குழுவோ ிருக்க வேண்டும்.

தமிழன்பன்.......அப்படியா. லாசா ஒப்பந்தம் எப்போது உருவானது?

கலை......இந்த ஒப்பந்தம் 1903ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் Young hus band பிரிட்டன் மற்றும் இந்திய கான்சரர்களின் சார்பில் சீன நடுவண் அரசுடன் திபெத்துக்கும் சிக்கிங்குமிடையிலான எல்லை பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மன நிறைவு பெறாத நிலையில் ஏறக்குறைய 3000 பிரிட்டன் படையினர் Young hus bandஇன் தலைமையில் அவ்வாண்டின் டிசம்பர் திங்களில் திபெத்தை ஆக்கிரமித்தனர். இது பற்றி லியன் சியாங் மின் கூறியதாவது.

தமிழன்பன்........அப்போது பிரிட்டன் முன்னேறிய ஆயுதங்களை கொண்டிருந்தன. சீனா நிலபிரபுத்துவ சமூகத்தில் இருந்தது. திபெத் சீனாவின் எல்லைப்புறப் பிரதேசத்தில் அமைந்ததால் அது மிகவும் பின்தாங்கிய நிலையில் இருந்தது. பிரிட்டன் ஆக்கிரமிப்புப் படையினர் லாசாவில் நுழைந்த பின் திபெத்தின் நாட்டுபற்றுடைய மத துறவிகள் மற்றும் மக்களால் எதிர்க்கப்பட்டனர். பிரிவினை, ஏமாற்றுவது, படு கொலை போன்ற முறைகளை கொண்டு பிரிட்டன் படையினர் திபெத் மக்களின் உரிமைகளை காலால் மிதித்தனர்.

கலை......இப்போது மக்கள் கடந்தகால வரலாற்றை மறக்க கூடாது. சில பிரிவினையாளர்கள் திபெத் மக்களின் வீரமான துணிவை பிரச்சாரம் செய்து ஆக்கிரமிப்புப் படையை கண்டிப்பதற்கு பதிலாக லாசா ஒப்பந்தத்தை பயன்படுத்தி திபெத் சுதந்திரமாக இருப்பதை பிரச்சாரம் செய்தனர். இது வெட்டக் கேடானது.

தமிழன்பன்........பிரிட்டன் படையினர்கள் 1904ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 3ம் நாள் லாசாவை கைப்பற்றிய போது அப்போதைய 13வது தலாய்லாமா எங்கே இருந்தார்?

கலை......அப்போது அவர் படைக்கு பயந்து பெரு நிலப் பகுதிக்கு தப்பி ஓடினார். அத்துடன் காங்தன் கோயிலின் புத்த மத பெரியார் லொசான் சியென்ச்சானை ஆட்சிபுரியுமாறு அவர் நியமித்தார். செப்டம்பர் 7ம் நாள் பொட்டலா மாளிகையில் Young hus band பிரிட்டன் சார்பில் லொசா சியென்ச்சான் திபெத் உள்ளூர் அதிகாரிகளின் சார்பில் லாசா ஒப்பந்தத்தை உருவாக்கினர்.

தமிழன்பன்........அந்த ஒப்பந்தத்தில் என்ன அம்சங்கள் உள்ளன?

கலை......பிரிட்டனின் அனுமதி பெறாத நிலையில் திபெத்திலான நிலம் சாலைகள் தாதுக்கள் முதலியவை இதர நாடுகளுக்கு வழங்கப்படக் கூடாது. திபெத்தில் வணிக சந்தை நிறுவினால் பிரிட்டன் அதன் அதிகாரிகளை அனுப்பலாம். பிரிட்டனுக்கு இராணுவ கப்பம் கட்ட வேண்டும் என்பன இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.

தமிழன்பன்........இதை கேட்டால் இந்த ஒப்பந்தம் சீனாவின் உரிமைக்கு கடுமையாக தீங்குவிளைவித்திருக்குமே.

கலை......நிர்பந்தத்தின் பேரிலும் திபெத்திற்கு சிங் வம்ச ஆட்சியின் நடுவண் அரசு அனுப்பிய அமைச்சர் ஒருவர் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வில்லை.

தமிழன்பன்........அப்போது 13வது தலாய்லாமா இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாரா?

கலை......இல்லை. இது பற்றி லியன் சியாங் மின் கூறியதாவது.

.................உரை 4......................

தமிழன்பன்........லாசா ஒப்பந்தம் பிரிட்டன் ஆக்கிரமிபாளர்கள் சீனாவின் திபெத்தை ஆக்கிரமித்த போது உருவாக்கப்பட்டது. அப்போதைய திபெத் உள்ளூர் அரசின் அதிகாரி அதாவது 13வது தலாய்லாமாவும் திபெதிற்கான சின் வம்சகால அரசின் அமைச்சரும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. 13வது தலாயாலாமா இவ்வொந்தத்தில் கையொப்பமிடுமாறு பிற பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை வழங்கவுமில்லை. ஆகவே இந்த ஒப்பந்தம் சட்டபூர்வமானதல்ல. ஏனவே இதுவும் திபெத் சுதந்திர நாடு என்பதை உறுதிப்படுத்த முடியாது.

கலை......அப்போது சீனா மிக பலவீனமானக இருந்தது. மிக பின்தங்கி இருந்த நேரத்தில் கூட சீனா திபெத்தை அதனிடமிலிருந்து பிரித்து விட வில்லை. இன்று திபெத்தை தாய்நாட்டிலிருந்து பிரிப்பதென்ற சூழ்ச்சி நிறைவேற வாய்பபேயில்லை என்று ஆய்வாளர் லியன் சியாங் மின் சுட்டிக்காட்டினார்.

தமிழன்பன்........சரி நண்பர்களே லாசா ஒப்பந்தம் பற்றிய பின்னணியை விளக்கி கூறினோம்.

கலை......அடுத்த வாரம் திபெத் பற்றிய நேற்றும் இன்றும் என்பதென்ற கண்காட்சியை விளக்கி கூறுவோம்.

தமிழன்பன்........கேட்க தவறாதீர்கள். பல உண்மைகளை கேட்டறிந்தபின் திபெத் சீனாவை சேர்ந்தது என்பது பற்றி மேலும் தெளிவாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

கலை......நிகழ்ச்சியை கேட்டு கருத்து தெரிவியுங்கள். அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

தமிழன்பன்........வணக்கம் நேயர்களே.