• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-27 10:45:09    
ஷான் சி இடை நிலை பள்ளியிலுள்ள திபெத் மாணவர்கள்

cri

திபெத் பிரதேசத்தில் திறமைசாலிகளை பயிற்சி அளித்து உருவாக்க, சீன அரசு, 1985ம் ஆண்டு முதல், 19 உள்பிரதேச மாநிலங்கள் மற்றும் நகரங்களில், ஆசிரியர்கள் மற்றும் கல்வி வசதிகள் சிறப்பாக உள்ள சில இடை நிலை பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, திபெத் மாணவர் வகுப்புகளை நிறுவியுள்ளது. அத்தகைய வகுப்புகளில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும், திபெத் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். ஷான் சி மாநிலத்தின் தலைநகரான தை யுவான் நகரிலுள்ள ஷான் சி பல்கலைக்கழகத்துக்குரிய இடை நிலை பள்ளியில், 6 திபெத் வகுப்புகள் இடம்பெறுகின்றன. அவ்வகுப்புகளிலுள்ள அனைத்து 400 மாணவர்களும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். கடந்த இரண்டு ஆண்டுகளில், அப்பள்ளியில் கல்வி பயின்ற 165 பட்டதாரி மாணவர்கள், தேர்வில் தேறி, உள்பிரதேசங்களின் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.

நீங்கள், விளக்கு ஒளியின் கீழே, பணியில் விடா முயற்சி மேற்கொள்கின்றீர்கள். சொற்களை விட, உங்கள் சிறந்த அன்பு தான், நான் திறமைசாலியாக மாற உதவியுள்ளது. ஆசிரியரே, ஊரிலிருந்து புறப்பட்டாலும், நீங்கள், எங்களின் மிகுந்த அன்புக்குரியவர். நீங்கள், எங்கள் அம்மா.

குழந்தைகளின் மனதிலுள்ள இந்த அம்மா, வேறுயாருமல்ல திபெத் மாணவர் வகுப்பாசிரியர் Bai Donghong ஆவார். அவர், 30 ஆண்டுகளுக்கு மேல், கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறார். 1985ம் ஆண்டு, திபெத் மாணவர் வகுப்புகளை நிறுவுமாறு அரசவை ஷான் சி பல்கலைக்கழகத்திற்கு உரிய இடை நிலைப் பள்ளிக்கு அதிகாரத்தை வழங்கிய போது, அவர் திபெத் மாணவர் வகுப்பின் முதலாவது வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியராக மாறினார்.

தற்போது, அவர் தலைமை தாங்கிய வகுப்பில், 41 மாணவர்கள் இடம்பெறுகின்றனர். அவர், ஒவ்வொருவரும் வளர பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் கூறியதாவது,

இந்தத் திபெத் இன மாணவர்கள், எனது பிள்ளைகளைப் போல, அருமையாக இருக்கின்றனர். அவர்கள், பலவித திறமைகளை ஒருங்கே கொண்டிருக்கின்றனர். எமது வகுப்பு, குழுப் பாடல், நடனம் முதலிய நடவடிக்கைகளிலும், முதலிடம் பெற்றுள்ளது என்றார் அவர்.

அந்த மாணவர்கள், தங்களது படிப்பை தங்கு தடையின்றி முடிப்பதற்கு, பொருளாதார ரீதியில் அவர்களது குடும்பங்களின் பொருளாதார நிர்ப்பந்தத்தை இயன்ற அளவில் குறைக்க உதவி செய்வதற்காக, ஷான் சி மாநிலத்தின் அரசு, திங்கள் தோறும், அவர்களது உணவுக்காக 300 யுவான் உதவி வருகிறது. அவர்கள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மருத்துவச் சிகிச்சைக் காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஷான் சி பல்கலைக்கழகத்துக்குரிய இடை நிலை பள்ளியில் சேர்ந்து, உள்பிரதேசத்தின் தரமிக்க கல்வியை அனுபவிக்க முடிவதால், அந்தத் திபெத் குழந்தைகள், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அவர்களது பெற்றோரும், பெருமை அடைகின்றனர். ஒரு குழந்தை, அத்தகைய பள்ளிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் வந்து வழி அனுப்பிவைக்கின்றனர். திபெத் நாள் காட்டியின்படி அதன் புத்தாண்டை விட, அக்கம்பீரமான காட்சி, சிறப்பாக இருக்கிறது. ஆசிரியர் Baiயின் வகுப்பில், ஏறகுறைய அனைத்து மாணவர்களும் இத்தகைய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். வகுப்பு தலைவர் cirenlongzhu கூறியதாவது,

நான் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து என்னைச் சந்தித்தனர். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம். எமது திபெத் பாரி மது, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி முதலியவை மேசைக்குக் கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. வயிறார சாப்பிட்டு விட்டு, வாய் வலிக்க பாடல்கள் பாடிய பின், அனைவரும் வட்டமாக, தேசிய நடனம் ஆடினோம் என்றார் அவர்.

Dawazhuoma, இந்தத் திபெத் மாணவர் வகுப்பிலேயே அதிக குரல்வளம் கொண்ட மாணவராவாள். ஆசிரியர்களும் சகமாணவர்களும் ஊக்குவித்ததால், அவள் சுய நம்பிக்கையை அதிகரித்தாள். முன்பு யாருக்கும் தன்னை வெளிப்படுத்தாத அவள், இப்பொழுது திறந்த மனம் கொண்டவளாக இருக்கிறாள். கலை, அறிவியல் தொழில் நுட்பம், ஆங்கில மொழி முதலிய விழாக்களுக்காக, அப்பள்ளி ஏற்பாடு செய்த பல்வேறு நடவடிக்கைகளில், அவள் சுறுசுறுப்பாகக் கலந்து கொண்டுள்ளாள். அவற்றில், அவளது துணிச்சல் புடம் போடப்பட்டது மட்டுமல்ல, வாழ்க்கை மீதான அக்கறை செழுமைப்படுத்தப்பட்டு, அறிவும் பெருகியுள்ளது. 10 தலைசிறந்த பாடகர்களுக்கான தெரிவுப் போட்டியில் கலந்து கொண்ட காட்சி, அவளது மனதை மிகவும் நெகிழச் செய்தது.

நான், முதல் முறை அரங்கில் ஏறினேன். அது பதற்ற உணர்வை ஏற்படுத்தியது. எமது திபெத் மாணவர் வகுப்பிலுள்ள அனைவரும் வந்து, கைதட்டிப் பாராட்டினர். அந்தக் காட்சி, என் மனதை நெகிழச் செய்தது. அதை நான் உண்மையாக மறக்கவே முடியாது என்று Dawazhuoma கூறினார்.

பலதொகுதி திபெத் மாணவர்கள், திபெத் மாணவர் வகுப்பு என்ற பெரிய குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் வளர்ந்து வருகின்றனர். 23 ஆண்டுகள் கடந்துள்ளதால், ஆசிரியர் Baiயால் பயிற்றுவிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அதிகமாக இருக்கின்றனர். முன்பு பட்டம் பெற்ற திபெத் மாணவர் வகுப்புகளின் மாணவர்களில், பெரும்பாலோர் பல்வேறு துறைகளின் முதுகெலும்பினராக மாறியுள்ளனர். சிலர், தலைவர்களாக மாறியுள்ளனர். சிலர் திருமணமாகி, தாய் தந்தையாகியுள்ளனர்.

23 ஆண்டுகளாக, ஷான் சி பல்கலைக்கழகத்துக்குரிய இடை நிலை பள்ளி, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கு 1600 இடை நிலை மற்றும் மேனிலை பள்ளி மாணவர்களைப் பயிற்றுவித்துள்ளது. சுமார் ஆயிரம் மாணவர்கள், திபெத்துக்குத் திரும்பி, வேலை செய்கின்றனர்.

இது சீனாவின் உள்பிரதேசத்தில் வாழ்ந்து, படித்த திபெத் குழந்தைகளின் பார்வையை விரிவாக்கி, அறிவுத் திறனை மென்மேலும் அதிகமாக்கியுவுள்ளது. அவர்கள் சுறுசுறுப்பாக வளர்ந்து, எதிர்காலத்தில் தங்கள் பிரதேசத்திற்கு பங்காற்றத் தயாராக இருக்கிறார்கள்.