• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-27 09:28:57    
Zuo Ya Juanனின் கனவு

cri
Si Yang மாவட்டத்தின் Wang Ji வட்டத்தில் உள்ள காய்கறி விளைவிக்கப்படும் தளத்தின் கூடாரங்களில் பசுமையான காய்கறிகள் காணப்படுகின்றன. மக்கள் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றனர். அறுவடை நெருங்கி வருகின்றது.
Zuo Ya Juan என்பவர் இக்காய்கறி தளத்தின் பெண் உரிமையாளர் ஆவார். அவருக்கு வயது 26. இவர் Su Qian ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றப் பின், அம்மாவட்டத்தின் Ai Yuan Cun பள்ளி மற்றும் Hua Xia இடைநிலைப் பள்ளியில் முறையே ஆசிரியராக பணி புரிந்தார். 2006ஆம் ஆண்டு துவக்கத்தில், வேளாண் துறையில் தமது இலட்சியத்தை வளர்த்து கொண்டு, அதனை நனவாக்கும் பொருட்டு, திங்களுக்கு 2300 யுவான் சம்பளத்தை அவர் கைவிட்டுவிட்டு, தமது ஊர் திரும்பினார். ஆய்வின் படி, காய்கறி பயிரிடுதலை அவர் இலட்சியத்தின் குறிக்கோளாக கொண்டு, மாவட்டத்தில் அல்லது நகரில் கூட இல்லாத அளவிற்கு மிக பெரிய பசுமை நிறைந்த காய்கறி தளத்தை உருவாக்குவதென முடிவு செய்தார்.

மாநிலத்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் வறுமை ஒழிப்புப் பணி அணியும், வட்ட அரசும் Zuo Ya Juanவின் திட்டத்துக்கு பெரிதும் ஆதரவளித்தன. வட்ட அரசு அவருக்கு 8 ஹெக்டர் பரப்பளவுடைய நிலத்தை வழங்கியது. அது மட்டுமல்ல, நிதி பிரச்சினையைத் தீர்க்க, உள்ளூரில் உத்தரவாதமின்றி கடன் வழங்கும் நிறுவனத்திலிருந்து கடன் பெறுவதற்கு வட்ட அரசு அவருக்கு உதவி செய்தது.
சந்தையின் தேவை மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் படி, தக்காளிகளை முக்கியமாக கொண்டு, சிறிதளவு மிளகாய் பயிரிடுவதென Zuo Ya Juan தீர்மானித்தார். விற்பனை மற்றும் இலாபம், பயிரிடும் காய்கறி வகைகளால் பொறுத்து அமைவதாக அவர் கருத்து தெரிவித்தார். விதை பயிருக்கு 2 யுவான் என்ற விலையில், இஸ்ரேலிய தக்காளி, காங்கோ மிளகாய் உள்ளிட்ட அரிய வெளிநாட்டு காய்கறி வகைகளை அவர் விளைவிக்க தொடங்கினார்.

முன்பு Zuo Ya Juan விளை நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டதில்லை. எனவே இந்தவகை அரிய வெளிநாட்டு காய்கறிகளைப் பயிரிடுவதில் அவருக்கு அதிகமாக இன்னல்கள் ஏற்பட்டன. காய்கறி பயிரிடும் நுட்பத்தை வெகுவிரைவில் ஆழமாக புரிந்து கொள்ளும் வகையில், Zuo Ya Juan பல புத்தகங்களைப் படித்து, பயிரிடுதல் பற்றிய நுட்பத்தை துல்லியமாகவும், தெளிவாகவும் கற்றுக்கொண்டார். இளங்கன்றுகளை வளர்ப்பது, இடம்பெயர்ப்பது, நீர் ஊற்றுவது, உரம் போடுவது உள்ளிட்ட பயிரிடும் முழு போக்கிலும் Zuo Ya Juan பங்கெடுத்து, அனைத்தையும் குறிப்புப்புத்தகத்தில் பதிவு செய்தார். சளையாத உழைப்பால், காய்கறி பயிரிட்டு வளர்த்தல், பயிரிடுதல் மேலாண்மை ஆகியவை பற்றிய தரவுகளை நேரடியாகவே அவர் திரட்டினார். தற்போது, தக்காளி மற்றும் மிளகாய் வளர்ச்சி உள்ளிட்ட அறிவுகளை பற்றி குறிப்பிடுகையில், Zuo Ya Juan ஒரு நிபுணருக்கு ஒத்த அறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

உடல் நலத்துக்கு சாதகமான காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்ற மக்களின் புதிய எதிர்பார்ப்புக்கிணங்க, நவீன வேளாண்மையின் வரையறை படி, காய்கறி பயிரிடுதல் போக்கில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத நுட்பத்தைப் பயன்படுத்தி, பயிரிடும் காய்கறிகளிலான நிறைவான வைட்டமின் சத்துக்களை அவர் உத்தரவாதம் செய்கின்றார். அதனால் Zuo Ya Juan முயற்சிகள் மேற்கொண்டு, அதிக கனிகளைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில், அவருடைய கூடாரங்களில் பயிரிடப்பட்ட தக்காளிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மிளகாய், Chang Zhou, Wu Xi உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றிச்செல்லப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளின் ஆண்டு விளைச்சல், 450 டன் ஆகியது. அதிலிருந்து பெற்ற வருமானம், 13 இலட்சம் யுவானை எட்டியது. நிகர வருமானம், 6 இலட்சத்து 50 ஆயிரம் யுவானாகும்.
காய்கறி தளம், Zuo Ya Juanவுக்கு மாபெரும் இலாபத்தை தந்த அதே வேளையில், உள்ளூர் மக்களுக்கும் அதிக நலன்களை அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டின் மார்ச் திங்கள் முதல் இது வரை, நாள்தோறும் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து சுமார் 40 பேர் இத்தளத்தில் உழைக்கின்றனர். ஒவ்வொருவரும் திங்களுக்கு 750 யுவானுக்கு மேலான ஊதியம் பெறுகின்றனர். "நான் ஊர் திரும்பி, காய்கறிகளை பயிரிடுவதில் ஈடுபடுவது என்பது, பணம் ஈட்டுவதற்கானது மட்டுமல்ல. ஊர் மக்களுக்கு ஒரு முன்மாதிரியை வழங்குவது மேலும் முக்கியமானது. பயன்மிக்க வேளாண்மையை வளர்ப்பதில்

அவர்களுக்கு தலைமை தாங்கி, மேலதிக மக்கள் அதன் மூலம் நலனை பெறச்செய்வது, எனது கடமையாகும்" என்று Zuo Ya Juan கூறினார். Zuo Ya Juanவின் உதவியுடன், தற்போது கிராமவாசிகள் பலர் காய்கறி கூடாரங்களை உருவாக்கியுள்ளனர்.
கூடாரங்களில் பயிரிடும் காய்கறிகளைக் கண்டு, Zuo Ya Juan மகிழ்ச்சியோடு பேசுகையில், இவ்வாண்டு கூடுதலாக 100 Mou (சுமார் 6.6 ஹெக்டர்)பரப்பளவுடைய காய்கறி கூடாரங்களை அமைக்க உள்ளதாகவும், அதன் மூலம் 200க்கு அதிகமான கிராமவாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றும் தெரிவித்தார். கிராமவாசிகளின் கவலையை நீக்கும் பொருட்டு, அவர்களால் பயிரிடப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய Zuo Ya Juan திட்டமிட்டுள்ளார்.
தாம் பெற்றுள்ள சாதனையினால் கிராமவாசிகளின் நம்பிக்கை மற்றும் பாராட்டை Zuo Ya Juan வென்றெடுத்துள்ளார். காய்கறிகளைப் பயிரிட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பது என்ற அவரது கனவு நிறைவேறியுள்ளது.