ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களின் தலைவர்களான செங் யின்ச்சுவன், ஹெ ஹுவுகுவான் ஆகியோர் தத்தமது அரசு பிரதிநிதிக் குழுக்களுக்குத் தலைமை தாங்கி, நேற்று இரவு சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரான செங் தூ சென்றடைந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவானின் பிரதேசங்களுக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்து, சோதனை பயணம் மேற்கொள்வார்கள்.
இப்பயணத்தின் போது, அவர்கள் சிச்சுவானின் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய வாரியங்களுடன் உரையாடல் நடத்தி, சிறப்பு நிர்வாக பிரதேசங்கள் புனரமைப்புப் பணிகளில் பங்கெடுக்கும் அமைப்பு முறை மற்றும் தொடர்புடைய ஏற்பாடுகள் பற்றி விவாதிப்பார்கள்.
மே 12ம் நாள் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், ஹாங்காங்கின் பல்வேறு துறைகள் வழங்கிய நிதியுதவி 210கோடி ஹாங்காங் டாலரை தாண்டியது. ஹாங்காங்கின் அறக்கொடை நடவடிக்கை வரலாற்றில், இத்தொகை மிக உயர் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
|