இன்று சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள நிங் சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்தில் பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
முதல் நாள் தீபத் தொடரோட்டம் இப்பிரதேசத்தின் சோங் வெய் நகரில் நடைபெற்றது. இதன் முழு நீளம் 17.96கிலோமீட்டர். மொத்தம் 208 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
நாளை முதல் ஜுலை முதல் நாள் வரை, தீபத் தொடரோட்டம் இத்தன்னாட்சி பிரதேசத்தின் வூ சோங் நகரில் நடைபெறும்.
|