சிச்சுவானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு பணிகளில், ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்கள் பங்கெடுக்கும் என்று இப்பிரதேசங்களின் தலைவர்களான செங் யின்ச்சுவன், ஹெ ஹுவுகுவான் ஆகியோர் தெரிவித்தனர்.
நேற்று அவர்கள் பிரதிநிதிக் குழுக்களுக்கு தலைமை தாங்கி, சிச்சுவான் மாநிலத்தின் தலைவர்களுடன் உரையாடல் நடத்தி, தொடர்புடைய புனரமைப்புப் பணியை கலந்தாய்ந்தனர். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பெங்சோ மற்றும் தூ சியாங் யானில் சோதனை பயணம் மேற்கொண்டனர்.
செங் தூ நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய செங் யின்ச்சுவன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் புள்ளிகள் மருத்துவமனைகள் போன்ற பொது வசதிகளையும், பாதைகள், பாலங்கள் முதலிய போக்குவரத்து வசதிகளையும் செப்பனிடுவதற்கு ஹாங்காங் உதவி வழங்கும் என்று தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில், மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேச அரசு தனது நிதி வரவு செலவு திட்டத்தில் புனரமைப்புப் பணிக்கான சிறப்பு தொகையை வகுத்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மருத்துவ மற்றும் சுகாதாரம், புள்ளி, விளையாட்டு வசதிகள் ஆகியவற்றுக்கு முக்கியமாக ஆதரவு அளிக்கும் என்று ஹெ ஹுவுகுவான் கூறினார்.
|