• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-30 09:42:43    
ஹய்னான் மாநிலத்தின் Yangpu வளர்ச்சி மண்டலம்
Yangpu வளர்ச்சி மண்டலம், ஹய்னான் மாநிலத்தின் வடமேற்கு பகுதியின்Yangpu தீபகற்கத்தில் அமைந்துள்ளது. இது, சிங்கப்பூர்-ஹாங்காங்-ஷாங்காய்-ஓசாகா என்ற முக்கிய சர்வதேச கப்பல் போக்குவரத்து நெறியில் இருக்கிறது.

cri
Yangpu வளர்ச்சி மண்டலம், ஹய்னான் மாநிலத்தின் வடமேற்கு பகுதியின்Yangpu தீபகற்கத்தில் அமைந்துள்ளது. இது, சிங்கப்பூர்-ஹாங்காங்-ஷாங்காய்-ஓசாகா என்ற முக்கிய சர்வதேச கப்பல் போக்குவரத்து நெறியில் இருக்கிறது. இது, தென்கிழக்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிரதேசங்களை, சீனாவுடன் இணைக்கின்ற மையப் பகுதியாகும்.

சிறந்த துறைமுக மேம்பாட்டினால், Yangpu, ஹய்னான் மாநிலத்தின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணியின் முக்கிய சதுரங்க காயாக மாறியது.

கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளில், புதிதாக நிறுவப்பட்ட ஹய்னான் மாநிலத்தில், வீடு மற்றும் நில உடைமைத் துறை விரைவாக வளர்ந்தது. 1993ம் ஆண்டு ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு கொள்கை வெளியிடப்பட்ட பின், இத்துறையின் பொலிவான வளர்ச்சி தகர்க்கப்பட்டது. Yangpuஇன் வளர்ச்சி, 10 ஆண்டுகாலம் நின்று போதாது. அப்போதைய நிலைமை, Yangpu வளர்ச்சி மண்டலத்தின் நிர்வாகப் பணியகத்தின் கட்டுமான மற்றும் நிலப் பிரிவின் தலைவர் Zhangjinஇன் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது,

அப்போது, வளர்ச்சிப் பணி நடைபெற்ற போதிலும், போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. வெளிநாட்டு வணிகர்கள் இங்குள்ள அனைத்து முதலீட்டு நடவடிக்கைகளையும் நிறுத்தினர். சாலையில் மக்களும் வாகனங்களும் காண்பது குறைவு. ஆடு மாடுகள் எங்கும் காணப்பட்டன.

அதற்குப் பிந்திய 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், இங்குள்ள வளர்ச்சி, மிகக் குறைவே. ஆனால் ஹய்னான் மாநிலம் இதைக் கைவிட்டுவிடவில்லை. 2002ம் ஆண்டிற்குப் பின், அரசின் வழிகாட்டலில் Yangpuயை வளர்ச்சி முறையை ஹய்னான் மாநிலம் நிர்ணயித்தது. பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் திட்டப்பணிகளைப் பயன்படுத்தி, Yangpuவின் வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற உத்தியை, ஹய்னான் மாநிலம் முன்வைத்தது. சலுகையுடன் கூடிய பல்வகை கொள்கைகளைப் பயன்படுத்தி முதலீட்டை ஈர்ப்பதன் மூலம், இந்த மண்டலம் மீண்டும் உயிராற்றல் பெற்றது. Zhangjin, இங்குள்ள பெரும் மாற்றங்களை நேரடியாக கண்டவர். அவர் கூறியதாவது,.

முந்தைய குழப்பமான தடைகள் குறைந்தன. பொருளாயத நிலைமை சீராக மேம்பட்டது. தவிர, பொருளாதார குறிக்கோள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

Yangpu மண்டலத்தின் உற்பத்தி தொகை, 2004ம் ஆண்டில் இருந்த 190 கோடி யுவானிலிருந்து தற்போதைய 740 கோடி யுவானுக்கு அதிகரித்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொகை, 47 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 400 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்தது.

கடந்த ஆண்டு இந்த மண்டலத்தின் தொழில்துறை உற்பத்தித் தொகை, முழு மாநிலத்தில் 40 விழுக்காடு வகித்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொகை, 60 விழுக்காடு வகிக்கிறது என்று Yangpuவளர்ச்சி பணியகத்தின் நிர்வாகப் பிரிவின் தலைவர் ding shangqing அறிமுகப்படுத்தினார். Yangpu, முழு மாநிலத்தின் தொழில்துறையில் தலைமை பங்கு ஆற்றியுள்ளது. பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் பங்கு, பூர்வாங்க ரீதியில் தோன்றியது என்பதை இது காட்டுகிறது. அவர் மேலும் கூறியதாவது,

மாநிலத்தின் ஆயிரத்தில் ஒரு பகுதியான நிலம் கொண்டYangpu, சுமார் 40 விழுக்காட்டு தொழில்துறை உற்பத்தித் தொகையை நிறைவேற்றியது. இத்தொகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து, 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பின், முழு மாநிலத்தில் 70 அல்லது 80 விழுக்காட்டை எட்டும்.

வளர்ச்சிப் பணி தொடங்கிய பின், சாலை, நீர் வினியோகத் திட்டப்பணி, துறைமுகக் கட்டுமானம் முதலிய அடிப்படை வசதிகளின் கட்டுமானங்களில், Yangpu 680 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது. அதனால், முழுமையான அடிப்படை வசதிகளும் இணைப்புச் சேவைகளும், முதலீட்டை ஈர்க்கின்ற முக்கிய காரணங்களாக மாறியுள்ளன என்றார் Ding shangqing.

கடந்த ஆண்டின் செப்டம்பர் திங்கள், Yangpu பொருளாதார வளர்ச்சி மண்டலம், சீனாவின் ஷாங்காய், தியன்ஜின், தாலியன் ஆகிய நகரங்களுக்குப் பிந்திய 4வது வரி விலக்கு துறைமுகமாக நிர்ணயிக்கப்பட்டது. இது, வளர்ந்து வருகின்றYangpu மண்டலத்திற்கு, மேலதிக வலிமையை அளித்தது. இந்த மண்டலம், இன்னொரு வசந்தத்தில் நுழைந்தது என்று Ding shangqing கூறினார்.

உண்மையில் இங்கு உற்சாகம் நிறைந்தது. வரி விலக்கு துறைமுகம் நிறுவப்பட்ட அரை ஆண்டில், முதலீட்டை ஈர்க்கும் போக்கு வலிமையானது. சர்வதேசச் செல்வாக்கும் உயர்ந்து வருகிறது.

வரி விலக்கு துறைமுகம் என்பது, பொருட்களின் புழக்கம், பதனீடு முதலிய செயல்திறன்களை கொண்ட சுங்கத் துறையின் சிறப்பு கண்காணிப்பு மற்றும் மேலாண்மையிலான மண்டலமாகும். பல சலுகைகளுடன் கூடிய வரி மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை கொள்கைகள் இங்கு இருக்கின்றன. வரி விலக்கு துறைமுகமாக மாறியதால், Yangpu மண்டலம் மேலும் அதிகமான வெளிநாட்டு வணிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தென் கிழக்காசிய உணவுப்பொருள் முனையம் தவிர, மத்திய கிழக்கு வேதியியல் தொழிற்துறை பூங்கா, சர்வதேச ரப்பர் வர்த்தக மையம் முதலிய திட்டப்பணிகளும், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Yangpuஐ,எண்ணெய், வேதியியல் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட, கப்பல் போக்குவரத்து மற்றும் பொருட்களின் புழக்க மையமாக, வளர்ச்சி மேலாண்மை பணியகம் மாற்றும். Yangpuஇன் எதிர்காலத்தின் மீது ding shangqing நிறைந்த நம்பிக்கை உண்டு.

தற்போது, Yangpu வளர்ச்சி, மிகச் சிறைந்த காலக்கட்டத்தில் நுழைந்தது மட்டுமல்ல, சிறந்த வாய்ப்பையும் எதிர்நோக்கியுள்ளது வருகிறது. இங்கு வாழ்பவராக, எங்களுக்குYangpu மீது நிறைந்த நம்பிக்கை உண்டு. 3 அல்லது 5 ஆண்டுகால முயற்சி மூலம், Yangpu, ஹய்னான் மாநில தொழில் துறையின் தலைமை பிரதேசமாக மாறும். ஹய்னான் மாநிலத்தின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணியின் மாதிரியாகவும் மாறும் என்று நம்புகிறேன்.