• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-01 11:01:45    
ஹோங் லுவோ கோயில் (ஆ)

cri

ஹோங் லுவோ கோயிலின் இயற்கைச் சுற்றுச்சூழல், தலைசிறந்ததாக இருக்கிறது. அதன் பின்புறத்தில் ஹோங் லுவோ மலையும், தெற்குப் பகுதியில் ஹோங் லுவோ ஏரியும் உள்ளது. அங்குள்ள பழங்கால மரங்கள் தழைத்தோங்கி வளர்ந்து வானளவு உயர்ந்துள்ளன.

அதன் சுற்றுப்புறத்தில், 600 வகைகளுக்கு மேலான மரங்களும், 60 வகைகளுக்கு மேலான தாவரங்களும் வளர்ந்துள்ளன. வனத்தில், பல்வகை பறவைகள் மற்றும் காட்டு விலங்குகள் பெருகி வாழ்ந்து வருகின்றன.

அதன் பிரதேசத்தில், பல்வகை மரங்களின் எண்ணிக்கை, 10 கோடிக்கு மேலாகும். காடு வளர்ப்புப் பரவல் விகிதம், 90 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்று வனத்தொழில் வாரியங்களின் புள்ளிவிபரம் காட்டுகிறது. இக்கோயிலின் கிழக்குப் பகுதியிலான லுவோ ஹான் கோவ் என்ற தோட்டத்தில், வளர்ந்த பழங்கால தேவதாரு மரங்களின் பரப்பளவு, 66 ஹெக்டர் ஆகும். நூறு ஆண்டுகளுக்கு மேலான மரங்களின் எண்ணிக்கை மட்டும், பத்து ஆயிரமாகும். அது, பெய்ஜிங் மாநகரின் மிக முக்கிய பழங்கால மரத் தோட்டங்களில் ஒன்றாகும். 12 நிலவுலக கிளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 விலங்குகளின் கற் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சராசரி மனிதர் உயரம் கொண்ட, நீலநிறக் கற்களால் செதுக்கப்பட்ட 500 லுவோ ஹான் சிற்பங்களும் காணப்படலாம்.

ஹோங் லுவோ கோயிலின் வடக்குப் பகுதியிலான ஹோங் லுவோ மலையின் தெற்கில், அமைந்துள்ள மலைப் பாதையின் மூலம், பயணிகள் இந்த மலையின் சிகரத்தை எளிதாக அடையலாம்.

இம்மலை, சைப்பிரஸ் மரப் பிரதேசம், தேவதாரு மரப் பிரதேசம், சென் இலை மரப் பிரதேசம் ஆகிய மூன்று பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகிறது.