• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-01 09:52:34    
சீனாவின் மாபெரும் கண்டுபிடிப்புகள் (வெடிமருந்து)

cri

வெடிமருந்து என்றதும் நமக்கு வெடிகுண்டுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த வெடிமருந்தின் கண்டுபிடிப்பு பண்டைய உருக்காலை தொழிலின் நுட்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்ற உண்மை நம்மில் பலருக்கு தெரியாது. அவ்வளவு ஏன் பில்லி சூனியம், மந்திரம், மாயாஜாலம் என்று மக்களை தன்வயப்படுத்தி ஆட்டிவைக்கும் நபர்களை நாம் அறிந்திருப்போம். இந்த மந்திரவாதிகளெனும் தந்திரவாதிகள்தான் வெடிமருந்து கண்டுபிடிப்பின் பின்னணியில் இருந்தவர்கள் என்றால் நம்பமுடிகிறதா என்ன. உருக்கியெடுத்தலின் போது மக்கள் பல்வகை உலொகங்கள் அல்லது கனிமங்களின் தன்மை பற்றியும், அவற்றின் வேதியியல் தன்மை பற்றியும் அறிந்துகொள்ள ஆரம்பித்தனர். இந்த அறிவைக்கொண்டு பண்டைய மந்திரவாதிகள் இறவாவ்ரம் தரும் அமிழ்தை சில வகை கனிம மூலப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களைக் கொண்டு தயாரிக்க முயன்றனர். தாங்கள் நாடிய இறவாவரம் தரும் அமிழ்தத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு கலவையை அவர்கள் கண்டறிந்தனர். கந்தகம், கரித்துண்டு, வெடியுப்பு எனப்படும் பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவை கலந்த ஒரு கலவையே கன்பவுடர் எனப்படும் வெடிமருந்தின் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக அமைந்தது. என்று, எப்போது இந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையெனினும், வரலாற்றில் சில பதிவுகளில் அவை பற்றிய குறிப்புகள் இல்லாமல் இல்லை. கிபி 300ம் ஆண்டு முதல் 650ம் ஆண்டு வரையான காலத்திலேயே தீப்பற்றக்கூடிய கலவைகளை பற்றி பலவகை தயாரிப்பு குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. 618 முதல் 907ம் ஆண்டு வரையான தங் வம்சக்காலத்தில் வெடிமருந்து முதன் முதலாக தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, சில வரலாற்றாசிரியர்கள், கிபி 850ம் ஆண்டில்தான் வெடிமருந்து தோன்றியதாக கூறுகின்றனர். தாவிச புத்தகமொன்றில் குறிப்பிட்ட மூன்று வகை மருந்து அல்லது அமிழ்து பற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த மூவகை மருந்துகளின் கலவைமுறை தயாரிக்க அல்லது சோதனை செய்து பார்க்க மிகவும் அபாயகரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம்.

தங் வம்சக்காலத்தில்தான் வெடிமருந்துகளின் ராணுவரீதியான பயன்பாடு முதலில் களமிறங்கியது.

போர்களில் வெடிமருந்து நிரப்பிய உருண்டைகள் கவணில் வைத்து எதிரிகளின் மீது வீச, அவை வெடித்துச் சிதறின. சுங் மற்றும் யுவான் வம்சக்காலங்களில் வெடிமருந்தின் ராணுவப்பயன்பாடு பரவலாக காணப்பட்டது. தீபீரங்கி, எறிகணை, ஏவுகணை, தீக்குண்டு முதலிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. 1279 முதல் 1368ம் ஆண்டு வரையான யுவான் வம்சக்காலத்தில் வெடிமருந்து தயாரிப்பு வழிமுறை அரபு உலகத்துக்கும் ஐரோப்பாவுக்கும் அறிமுகமானது. இதன் மூலம் ஆயுதத்தயாரிப்பு, ராணுவ உத்தி மற்றும் வீயூகம், போர்க்கள சூழ்ச்சி நகர்வுகள் முதலியவற்றில் பல தொடர் புரட்சிகள் அல்லது தொடர் மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தாலியிடமிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய வெடிமருந்து தயாரிப்பு வழிமுறை, 1350களில் செயலாக்கத்திறனுடைய ஒரு ஆயுதமாக போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் நிலையை உருவாக்கியது.