• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-01 09:58:29    
நாங்கின் நகரிலுள்ள செஞ்சிலுவை மருத்துவமனை

cri
சீன ச்சியாங் சூ மாநிலத்தின் நாங்கிங் நகரில் ஒரு செஞ்சிலுவை மருத்துவமனை உள்ளது. மலிவான கட்டணம், முழுமையான சேவை முதலியவற்றால் இது வாழ்க்கையில் இன்னலுக்குள்ளாகிய குறைவான வருமானமுடைய மக்களிடையில் மிகப்வும் புகழ்பெற்றுள்ளது. பொது மக்களுக்கு நன்மை பயக்கும் மருத்துவனையாக இது அழைக்கப்படுகின்றது. நாங்கிங் நகர அரசு மருத்துவ கட்டமைப்பில் சீர்திருத்தம் மேற்கொண்டு, அனைவரையும் மருத்துவ சேவை அனுபவிக்க செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வ முயற்சி இதுவாகும்.

நாங்கிங் செஞ்சிலுவை மருத்துவமனை 2002ம் ஆண்டு நிறுவப்பட்டது. மருத்துவமனையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட luo yi ying என்ற மூதாட்டி வேதியியல் சிகிச்சை பெற்றார். தற்போது, ஒரு அறையில், அவர் நரம்பில் திரவ மருந்து செலுத்தப்பட்டவாறே தான் விரும்பும் இசை நாடக தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்து பார்க்கின்றார். அவருடைய மகள் zhou si bao கூறியதாவது

இங்கே நல்ல சூழ்நிலை இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம். நல்ல சேவை. செவிலியர்களும் மருத்துவர்களும் நோயாளிகளிடம் அன்புடன் நடந்து கொள்கின்றனர் என்றார் அவர்.

luo yi yingக்கு இவ்வாண்டு 73 வயதாகிறது. அவருக்கு 5 குழந்தைகள் உண்டு. ஆனால் அவர்கள் எல்லோரும் வேலை இழந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், அவர் நுகைஈகஸ் புற்று நோய்வாய்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. குடும்பம் பொருளாதரச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், Zhou si bao மிகவும் கவலைப்பட்டார். செஞ்சிலுவை மருத்துவமான அவரது கவலையை நீக்கியது. அவர் கூறியதாவது

நாங்கள் வேலை இழந்தோம். இந்த நிலைமையில் அம்மா நோய்வாய்பட்டார். பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குப் பல ஆயிரம் யுவான் தேவைப்படுகின்றது. சுமையை ஏற்க முடியவில்லை. தற்போது, அரசு பொது மக்களுக்கு நன்மை பயக்கும் மருத்துவமனையை நிறுவியுள்ளது. அதிக செலவு நீக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில், ஒரு குறிப்பிட்ட சிகிச்சை காலத்துக்கு ஈராயிரம் மூவாயிரம் யுவான் மட்டுமே தேவை. மிகக் குறைவான கட்டணம் எங்களைப் பொருத்த வரை, இது நற்செய்தி என்றார் அவர்.

பொது பணி துறை அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மிக வறிய நோயாளிகளுக்காக இந்த மருத்துவமனை 13 கட்டணங்களை நீக்குவது உள்ளிட்ட சலுகை கொள்கைகளை மேற்கொள்கின்றதுகடைபிடிக்கின்றது. மிகக் குறைவான வருமானம் உடையவர் என உறுதிப்படுத்தும் சான்றிதழை கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பெயர் பதிவு செய்தல், நேய் அறிதல் மற்றும் சிகிச்சை, அடிப்படை பராமரிப்பு முதலியற்றுக்கான கட்டணங்கள் நீக்கப்பட்டன. அதேவேளையில், படுக்கை, அறுவை சிகிச்சை, பரிசோதனை முதலியவற்றுக்கான கட்டணங்களும் பாதியளவு குறைக்கப்படுகின்றது.

வாழ்க்கை இன்னலுக்குளாகிய மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், 30 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையான மருத்துவ கட்டணம் குறைக்கப்படலாம். கடந்த 5 ஆண்டுகளில், 80 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகள் இங்கே சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கென 40 இலட்சம் யுவான் மதிப்புள்ள சிகிச்சை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை நாங்கிங் நகரில் வாழ்க்கை இன்னலுக்குளாகிய மக்கள் தொகையில் சுமார் 50 விழுக்காடாகும்.

இந்த சலுகை கொள்கைகளின் பயன் பற்றி, மருத்துவமனையின் இயக்குநர் li yuan huai கூறியதாவது

இக் கொள்கைகள் இன்னலுக்குள்ளாகிய மக்களின் இவை சில பிரச்சினைகளை பயன் தரும் முறையில் தீர்த்துள்ளன. தற்போது, மருத்துவ சிகிச்சை பெறுவது கடினம், சிகிச்சை செலவு அதிகம் உள்ளிட்ட பிரச்சினைகள் சமூகத்தில் முக்கிய முரண்பாடுகளாகிவிட்டன. மிகக்குறைவான வருமானம் உடையவர்களின் உணவு பிரச்சினை தீர்க்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய மருத்துவ சிகிச்சை பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மக்களுக்குச் சிறப்பான சலுகை கொள்கை மேற்கொள்வதுடன், நாங்கிங் நகரிலுள்ள ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பொருளாதார வசதியற்ற மக்களின் மருத்துவ உதவி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

நோயாளிகளின் மருத்துவ கட்டணம் குறைக்கப்பட்டது. மருத்துவமனையின் சேவை தரம் குறைக்கப்பட்டதா என்பது பற்றி சிலர் கவலைப்படுகின்றனர். இங்குள்ள மருத்துவ சேவை தரம் சிறப்பானது. மருத்துவர்களுக்கும் கண்டிப்பான சேவை கோரிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்று புற்று நோய் சிகிச்சைப் பிரிவின் தலைவர் li gui fang தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

நோயாளி அறைகளில் சிறந்த வசதிகள் உள்ளன. தொலைக்காட்சி வசதி, உயிர் வாயு வழங்கும் வசதி, அக இணைப்பு வசதி ஆகிய முன்னேறிய வசதிகள் உள்ளன. இது மட்டுமல்ல, நோயாளிகளுக்கு பொறுமையுடன் உணர்வுப்பூர்வமாக சேவை புரிய வேண்டும். நோயாளிகள் எங்களது சேவை மீது மனநிறைவு அடைகின்றனர் என்றார் அவர்.

நோயாளி லியு அம்மையார் கூறியதாவது

மருத்துவர்களும், செவிலியர்களும் நாள்தோறும் பல முறை வந்து பார்க்கின்றனர். நோய் நிலைமை பற்றி விவரமாக கேட்கின்றனர். இங்குள்ள சேவை சிறப்பானது என்றார் அவர்.

மேலும் மருத்துவமனையில், பலர் தன்னார்வத் தொண்டர் என்ற முறையில் பணி புரிந்து வருகின்றனர். தங்களுக்கென அவர்கள் வருமானம் ஏதும் கேட்கவில்லை. மருத்துவர் li gui fang பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன், நாங்கிங் நகரில் மற்றொரு மருத்துவமனையில் புற்று மற்றும் இரத்த நோய் பிரிவில் பேராசிரியர் என்ற உயர் நிலையில் பணி புரிந்திருந்தார். உயர் தொழில் நுட்ப அறிவு கொண்ட அவர், பல கடுமையான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தினார். இந்த துறையில், உயர் புகழ் பெற்றவர். ஓய்வு பெற்ற பின், பல மருத்துவமனைகள் அவரை அழைத்தன. ஆனால், அவர் இங்கே வந்து வறிய மக்களுக்குச் சேவை புரிவதை தேர்ந்தெடுத்தார். அவர் கூறியதாவது

சமூகத்துக்கு பங்காற்ற விரும்புகின்றேன். வருமானம் ஒன்றும் கேட்வில்லை. எனது பல பத்து ஆண்டு கால பணி அனுபவம் சமூகத்துக்கு பங்களிப்பது என் வாழ்க்கையின் ஆர்வம் என்றார் அவர்.

மலிவான கட்டணம், தரமான சேவை ஆகியவற்றினால், மக்களுக்கிடையில் செஞ்சிலுவை மருத்துவமனை பரந்த அளவில் புகழ் பெற்றது. இந்த புகழ் மருத்துவமனையின் வளர்ச்சியை முன்னேற்றுகின்றது.

நாங்கிங்கில் செஞ்சிலுவை மருத்துவமனை போன்ற மக்களுக்கு நன்மை பயக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 12 ஆகும். இத்தகைய மருத்துவமனைகளை அமைப்பது, மக்களின் மருத்துவ சேவை பிரச்சினையைத் தீர்க்க அரசு மேற்கொண்ட பல முயற்சிகளில் ஒன்றாகும் என்று தெரிய வருகின்றது.