• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-01 09:29:16    
நேயர்களின் கேள்வி

cri

கலை: உங்கள் எண்ணக் குவியலின் வண்ணத்தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து எங்களுக்கு அன்பும் ஆதரவும் காட்டி ஊக்கமூட்டி வரும் நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்.
..........முதலில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் முன்னேறிய நேயர் மற்றும் முன்னேறிய பணியாளர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஜுன் 21ம் நாஷ் ஒலிபரப்பப்பட்ட பின் பல நேயர்கள் ஊக்கமளித்து பாராட்டை தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து மணமேடு எம் தேவராஜா மற்றும் கோவை மாவட்ட தெபொன்முடி தே னா மனிகந்தனின் கருத்தை கேளுங்கள்.


தேவராஜாவின் உரை......
மனிகந்தனின் உரை.....
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி எம். ஏ. எம். அத்னான் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. சீன வானொலி மேலும் புகழ் பெற வேண்டும், மேலும் அதிக மக்கள் பயனடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கலை: நீலகிரி கீழ்குந்தா நேயர் கே. கே. போஜன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில், சிச்சுவான் நிலநடுக்கத்தில் 158 பள்ளி மாணவர்களோடு புதையுண்டு பலியான இளம் ஆசிரியர் பற்றி கூறக் கேட்டேன். திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் பலியான அவரையும், ஒரே வாரத்தில் விதவையாக்கப்பட்ட அவரது இளம் மனைவியையும் நினைத்து மனம் கனத்து, தூக்கம் இழந்தேன். கணவனை இழந்த அந்தப் பெண்ணுக்கும், இன்னும் உறவுகளை இழந்த மற்ற மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொள்கிறேன்.
......தொடர்ந்து நிலநடுக்க பேரிடர் நீக்கத்தில் சீன மக்கள் காட்டியுள்ள துணிவை பாராட்டும் மீனாட்சி பாளையம் க. அருனின் கருத்தை கேளுங்கள்.
க்ளீட்டஸ்: மண்ணச்சநல்லூர் ந. சண்முகம் எழுதிய கடிதம். மே 12 வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகள், உயிர் மற்றும் உடைமை இழப்புகள், எங்களையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டன. பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு, மன வேதனையில் வாடும் மக்களுக்கு எங்கள் ஆறுதலையும், அன்பையும் பகிர்ந்துகொள்கிறோம். மீண்டும் புதுப் பொலிவுடன் அனைவரும் வாழ்க்கையை தொடர இறை மன்றாடுகிறேன்.
கலை: சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி பாத்திகாரன்பட்டி பி. எஸ். சுகுணாபாய் எழுதிய கடிதம். உய்னான் நகரிலுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் பற்றிய சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி கேட்டேன். சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை பற்றியும், கடந்த 20 ஆண்டுகளில் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் விரிவாக அறிந்துகொண்டோம்.


க்ளீட்டஸ்: பெரியகாலாப்பட்டு பெ. சந்திரசேகரன் உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். கங்கா யான்சி நேயர் மன்றத்தினர் தயாரித்த நிகழ்ச்சியை கலைமகள் தொகுத்தளிக்க கேட்டு மகிழ்ந்தேன். பல்வேறு மாவட்டங்களிலுள்ள சீன வானொலி நேயர் மன்றங்களின் பணிகள் பற்றி உங்கள் குரல் நிகழ்ச்சி மூலம் அறிய முடிகிறது. என்றாலும் கருத்துக்களை கூறும்போது மற்றவர்களின் மனதில் வருத்தம் ஏற்படுத்தாத விதத்தில் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.
கலை: காத்தான்குடி முஹமத் இஸ்மாயில் எஸ். நவாசா, எழுதிய கடிதம். சில நாட்கள் மின்சாரத் தடையால் நிகழ்ச்சிகளை கேட்காதபோது மிகவும் வருத்தமாக இருந்தது. மின்சாரத் தடை நீங்கியதும் சீன வானொலியை கேட்டபோது மீண்டும் மகிழ்ச்சி அடைந்தேன். நானும் எனது தங்கையும் தமிழ் மூலம் சீனம் புத்தகத்திலுள்ள பாடங்களை படித்துக்கொண்டிருக்கிறோம். சீன வானொலியை எனது குடும்பத்திலுள்ள அனைவரும் கேட்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
க்ளீட்டஸ்: முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் எழுதிய கடிதம். செய்திகளில் சீனாவின் திபெத் பிரதேசத்தில் உயிரின வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த செய்யப்படும் முயற்சிகளை பற்றி கூறப்பட்டது. முழுமையான தூய எரியாற்றலை மக்களுக்கு தருவதன் மூலம், சுற்றுச்சூழல் நலம் காக்கப்பட்டு, உயிரின வாழ்க்கைச் சூழல் மேம்படுத்தப்படுவதற்கான நலப்பணிகள், மனித சமுதாயத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளாகும்.
கலை: இசை நிகழ்ச்சி பற்றி தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். திபெத் இனப் பாடகரின் தாய்நாட்டு பற்று பற்றிய பாடலை, அழகாக தமிழில் விளக்கி பின் பாடலை ஒலிபரப்புவது, தமிழ்ப்பாடலை கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இசைக்கு மொழி ஒரு தடையல்ல.


மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்,
சூன் திங்கள் 12 ஆம் நாள் இடம்பெற்ற •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் •இத்திங்கள் வரலாற்றில் நுழைவது• என்ற கட்டுரையைக் கேட்டேன். இன்றுடன், சிசுவான் நிலநடுக்கம் ஏற்பட்டு சரியாக ஒரு திங்கள் காலம் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, மீட்பு மற்றும் புணரமைப்புப் பணிகளை மீளாய்வு செய்த விதம் நன்றாக இருந்தது. 69149 பேரை பலிகொண்ட இந்நிலநடுக்க அதிர்ச்சி, மக்களின் மனங்களிலிருந்து விரைவில் அகன்று, ஒலிம்பிக்கை எதிர்நோக்கும் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும். இக்கட்டான நேரத்தில் வீரதீரத்துடன் பணியாற்றிய விடுதலைப் படையினர், ஆயுதப் படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரின் பணி மிகவும் போற்றத் தக்கது. இதில் அரிய முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு சீன அரசு விருதுகளை வழங்கி கௌரவிக்க வேண்டும்.
ஊட்டி, எஸ்.நித்தியா
நான்கு நாட்கள் நீடித்த பெருஞ்சுவர் -5 என்ற தேசிய நிலை பயங்கரவாத தாக்குதல் தடுப்பு பயிற்சி பெய்சிங்கில் நிறைவடைந்ததை அறிந்தேன். இப்பயிற்சி பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நிகழக் கூடிய பயங்கரவாத சம்பவங்களைச் சமாளிக்கும் திட்டங்களையும் செயல்முறையையும் பரிசோதனை செய்து வெற்றி பெற்றுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்காக‌ த‌யார் நிலையிலுல்ல‌ சீன‌ அர‌சுக்கும்,சீன‌ ம‌க்க‌ளுக்கும் பெய்சிங் ஒலிம்பிக் போட்டி ம‌க‌த்தான‌ வெற்றி பெற‌ என‌து வாழ்த்துக்க‌ள்.
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
தைவானின் முக்கிய ஏடுகளின் கட்டுரைகளில், தைவான் நீரிணை பரிமாற்ற நிதியத்துக்கும் இருகரை உறவு சங்கத்துக்கும் இடையிலான கலந்தாய்வின் மீட்பு மற்றும் சாதனையை பாராட்டி எழுதியுள்ளது வரவேற்க வேண்டியதே! மிக முக்கியமான, ஆழமான, நடைமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இருகரைகளின் வார இறுதி சிறப்பு விமான போக்குவரத்து, பெருநிலப்பகுதியின் மக்கள், தைவானுக்கு சுற்றுலா மேற்கொள்வது ஆகியவை உள்ளிட்ட இருகரை அமைதி, இணக்க மற்றும் ஒத்துழைப்பு என்ற சூழ்நிலையை இக் கலந்தாய்வு உருவாக்கியுள்ளது. இதை நாம் அனைவரும் நிச்சயம் வரவேற்க வேண்டும்.
ஊட்டி, S.K.சுரேந்திரன்
பெய்ஜிங்கில் தைவான் நீரிணையின் இரு கரை விமானப் போக்குவரத்து பற்றிய பேச்சுவார்த்தைக் குறிப்பாணை மற்றும் பெருநிலப்பகுதி மக்கள் தைவானிலான சுற்றுலா உடன்படிக்கை பற்றி அறிந்தேன். ஜீலைத் திங்கள் 4ம் நாள் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையிலிருந்து திங்கட்கிழமை வரையான 4 நாட்களில் வார இறுதியில் இரு கரைகளுக்கிடையிலான சிறப்பு விமானப் போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இரு கரை வான் வழி உறவு, இரு கரை புதிய சகோதரத்துவ ரத்தத்தை பாய்ச்சும் என்பதில் அய்யமேதுமில்லை.
அமெரிக்காவிலிருந்து ஆல்ப‌ர்ட்
பதனீட்டுத் தொழிலில் ஈடுபடும் Ye Mei Yu அம்மையார் அவ‌ர்க‌ளின் ப‌ணி மிக‌ப் பெரிது. கைத்தொழில் ஒன்றைக் க‌ற்றுக்கொண்டால் அது உன்னை எப்போதும் கைவிடாது என்ப‌த‌ற்கேற்ப, வண்ண விளக்கு பதனீட்டுப் பணியிலும், பிரம்பு நாற்காலிகளை உற்பத்தி செய்யும் தொழிலிலும் வ‌ருவாய் ஈட்ட‌முடியும் என்ப‌த‌ற்கு இவ‌ர் ஒரு ந‌ல்ல‌ எடுத்துக்காட்டு. இந்த‌ நிக‌ழ்ச்சி பெண்க‌ளின் மனதில் சுய‌ தொழில் ந‌ம்பிக்கையை விதைக்கும். சுய‌மாக‌ வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்க‌வும் வைக்கும். Ye Mei Yu அம்மையாருக்கு என் நெஞ்சார்ந்த‌ பாராட்டுக‌ள்!

சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
ஜுன் திங்கள் 16ம் நாள் அன்று இடம் பெற்ற இணையதளத்தில் பதிப்புரிமை சட்டத்தை மீறும் நடவடிக்கையினை ஒடுக்குவது என்ற செய்தித்தொகுப்பை கேட்டேன். அதன் மூலம் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக்போட்டிகளின் ஒலி,ஒளிபரப்பு மற்றும் செய்திகளை முறையான அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டுமே மக்களுக்கு தங்களின் பங்களிப்பினைக் அளிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டேன் இந்த பதிப்புரிமைச்சட்டம் போன்ற சீரிய நடவடிக்கை, திருட்டுத்தனமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் இணைய தள நிறுவனங்களுக்கு சரியான கடிவாளமாகும்.
பாண்டிச்சேரி, என். வசந்தி
14.6.2008 சனிக்கிழமை அன்று ஒலிபரப்பான •கேள்வியும் பதிலும்• நிகழ்ச்சியின் மூலமாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை புரிந்து கொண்டேன். பெய்ஜிங்கில் நடைபெற்ற •திபெத் நேற்றும் இன்றும்• என்ற தலைப்பிலான கண்காட்சி, மகத்தான உண்மைகள் பலவற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் தூதர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டதன் மூலம், திபெத்தின் உண்மையான மாற்றம் பல்வேறு நாடுகளுக்கு புரிந்திருக்கும்.