குட்டி பெறும் திபெத் மறிமான்
cri
இவ்வாண்டு சீனாவின் கெகெசிலி அரசு நிலை இயற்கைப் பாதுகாப்பிடத்தில் வளரும் திபெத் புள்ளிமான்ங்கள் ஒரு வாரதிற்கு முன்கூட்டியே குட்டிகளை பெற்றெடுத்தன என்று பாதுகாப்பிடத்தின் நிர்வாக ஆணையம் வழங்கிய தகவல் அறிவித்தது. ஜுன் 23ம் நாள் முற்பகல் முதலாவது குட்டி மறிமான் பாதுகாப்பாக பிறந்தது. திபெத் புள்ளிமான்ங்கள் குட்டியிடும் நேரம் துவங்கியதை இது எடுத்துகாட்டுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக திபெத் மறிமான்களை வேடையாடுவதை தடுக்கும் பணி ஆழமாக நடைபெற்றுவருகின்றது. அதன் மூலம் அமைதியான சூழ்நிலையில் புள்ளிமான்ங்கள் வளர்வதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. குளிர் காலம் வரும் போது குட்டிபோடும் அளவுக்கு வளர்ந்த புள்ளிமான்களின் இனப்பெருக்கம் முன்கூட்டியே தொடங்கியது. ஆகவே புள்ளிமான்களின் பேறுகாலம் முன்கூட்டியே தொடங்கி விட்டது என்று நிர்வாக ஆணையத்தின் தலைவர் ஸெக்கா கூறினார்.
|
|