• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-02 09:46:39    
ரஷிய மருத்துவச் சிகிச்சைக் குழுவைச் சேர்ந்த சீன இளைஞர்

cri
மே 12ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீனாவின் நட்பார்ந்த அண்டை நாடான ரஷியா சீனாவுக்கு உடனடியாக மீட்புதவிப் பொருட்களை வழங்கியது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புதவிக் குழுவையும் மருத்துவச் சிகிச்சைக் குழுவையும் அனுப்பியுள்ளது. ரஷிய மருத்துவச் சிகிச்சை குழுவில் கான் ஜுன் தா என்ற சீன இளைஞர் உள்ளார்.

சீனாவின் சுங் சிங் மாநகரில் பிறந்த கான் ஜுன் தா ரஷிய குடியுரிமை பெற்றவர். இவ்வாண்டு அவருக்கு வயது 25. 1990ஆம் ஆண்டில் அவர் அவரது பெற்றோருடன் இணைந்து ரஷியாவுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். ரஷியாவுக்குச் செல்லும் முன், கான் ஜுன் தாவின் தந்தை, சுங் சிங் சீனப் பாராம்பரிய மருத்துவ ஆய்வகத்தில் மூத்த பேராசிரியராக பணிபுரிந்தார். ரஷியாவுக்குச் சென்ற பின், கான் ஜுன் தா தனது தந்தையைப் பின்பற்றி, மருத்துவயியலைக் கற்றுக் கொண்டார்.

மே 12ஆம் நாள், சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது பற்றிய செய்தியை அறிந்த பின், மாஸ்கோவில் இருந்த கான் ஜுன் தாவின் குடும்பம் மிகவும் கவலைப்பட்டது. அப்போதுதான், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவியளிக்கும் மருத்துவச் சிகிச்சைப் பணியாளர்களைச் சேர்க்கும் ரஷிய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பை கான் ஜுன் தா பார்த்தார்.

"தாம் வளர்ந்த இடத்துக்கும் சீனாவுக்கும் பங்காற்றினால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன். இத்தகைய வாய்ப்பு கிடைத்தால் பெருமை தான்" என்றார் கான் ஜுன் தா.

பெற்றோரின் ஆதரவுடன், அவர் ரஷிய சுகாதார அமைச்சகத்துக்கு விரைந்து சென்று பெயரைப் பதிவு செய்தார். சீன மற்றும் ரஷிய மொழியில் சரளமாக பேசக் கூடிய அவர் மருத்துவயியலில் தேர்ச்சி பெற்றுள்ளதால், தொடர்பான தேர்வில் அவர் தடையின்றி வெற்றி பெற்றார்.

மே 20ஆம் நாள் ரஷிய மருத்துவச் சிகிச்சைக் குழு, சி ச்சுவான் மாநிலத்தின் செங் து நகரைச் சென்றடைந்தது. அடுத்த நாள்தான், பாதிக்கப்பட்ட பேங் சோ நகரில் ஒரு நடமாடும் மருத்துவமனையைக் கட்டியமைத்தது. மருத்துவச் சிகிச்சைப் பணியும் உடனுக்குடன் தொடங்கியது. சீன மற்றும் ரஷிய மொழியில் பேசக் கூடிய கான் ஜுன் தா, அந்த மருத்துவமனையில் மிகச் சுறுசுறுப்பான மருத்துவராக மாறினார். ஒரு புறம், மொழிபெயர்ப்பாளராக அவர் ரஷிய மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து காயமுற்றவரின் நிலைமையைக் கேட்டறிய வேண்டும். மறு புறம், நரம்பியல் மருத்துவரான அவர் தனிப்பட்ட முறையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். சில சமயம் அவர் இரவும் பகலும் வேலை செய்ய வேண்டியிருந்தது.

கான் ஜுன் தாவின் உதவியுடன், ரஷிய மருத்துவர்களுக்கும் காயமுற்ற சீனர்களுக்கும் இடையிலான பரிமாற்றத்தில் தடைகள் குறைந்தன.

ரஷிய மருத்துவச் சிகிச்சைக் குழுவுடனான தொடர்புக்குப் பொறுப்பான சீன தரப்பின் அதிகாரி சாங் சிங் துங், கான் ஜுன் தாவை வெகுவாக பாராட்டினார். "கான் ஜுன் தா ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது. முக்கிய அறுவை சிகிச்சைகளில் அவர் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். தவிரவும், முன்முயற்சியுடன் ரஷிய மருத்துவச் சிகிச்சைக் குழுவில் சேர்ந்து, சீனாவின் பேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்த அவர், தாய்நாட்டு மக்கள் மீது அன்புணர்வு கொண்டிருக்கிறார். அவரைக் கண்டு நாங்கள் ஆழமாக மனமுருகினோம். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சீன-ரஷிய நட்புறவுக்கும் பங்காற்றிய அவருக்கு நாங்கள் மனமார நன்றி தெரிவிக்க வேண்டும்" என்றார் சாங் சிங் துங்.