
சந்திர நாட்காட்டியின் படி மார்ச் திங்கள் முதல் நாளன்று, லீங் சான் கோயில் பாரம்பரிய கோயில் கூட்டம் நடத்துகிறது. அதன்போது மலைச் சாலையில் பயணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.

இக்கோயிலில் ஒரு கிணறு உள்ளது. இனிமையான நீரை கொண்டதால், இது புனித கிணறு என்று அழைக்கப்படுகிறது. பரம்பரைக்கதையின் படி, இக்கிணற்றிலுள்ள ஊற்று, கோயிலின் பிந்திய மாளிகையிலுள்ள புத்தர் சிலையின் அடித்தளத்திலிருந்து உருவானது. கோயிலில் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடைய பண்டைக்கால தேவதாரு மரம் ஒன்றும் உள்ளது. லீங் சான் கோயிலில், நீலமான ஏரி, நீர் தெளிவான வானம், அழகான இயற்கைக் காட்சி ஆகியவை, பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளன.
|