• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-03 09:20:46    
மனிதம் தளைக்க

cri

சீனா சரியான நேரத்தில், செயல்பாடுகளை முடுக்கிவிட்டு அவசரமாய் செயல்பட, குழந்தை மருத்துவர் ஒருவரின் முக்கிய தகவல் உதவியுள்ளது. இருபது ஆண்டுகள் குழந்தை மருத்துவரக பணிபுரிந்துள்ள Liu Xiaolin என்பவர் தான் சரியான நேரத்தில் சில குழந்தைகளின் எதிர்பாராத இறப்பை உள்ளூர் சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். வேலை செய்கின்ற மருத்தவமனையின் புகழைவிட மானிட உயிர்கள் தான் முக்கியம் என்ற உறுதி EV-71 என்ற வைரஸால் குழந்தைகளுக்கு கை கால் வாய் நோய் பரவியுள்ளதை சுகாதார அதிகாரிகள் உடனடியாக கண்டறிய வழி செய்தது. எனவே அவசர சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி நிலைமையை மிக விரைவாக கட்டுபாட்டிற்குள் சீனாவால் கொண்டு வர முடிந்தது. அண்மையில் Fuyang நகரை சந்தித்த சுகாதார அமைச்சர் Chen Zhu, Liu வை 2003 ஆண்டு SARS நோய் எதிர்ப்பு கதாநாயகனாக புகழப்படும் Guangzhou மருத்துவர் Zhong Nanshan னுடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சேவை செய்து வருவதால் அதே நோயால் Liu Xiaolin னும் பாதிக்கப்பட்டுள்ளார். அது, சில சிவப்பு கெப்புளங்களை ஏற்படுத்தினாலும் தனது உடல் நலததை பாதிக்காது என்கிறார் கடமையுணர்வுடைய Liu. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்கும் இந்நோயை தடுக்க உலகில் இதுவரை தடுப்பூசியே இல்லை என்பது குறிப்பிடதக்கது.