• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-03 09:37:30    
திபெத் நேற்றும் இன்றும்

cri
கலை.........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தமிழன்பன்.........கலை நாம் இரு வாரங்கள் தொடர்ச்சியாக திபெத் பற்றி விளக்கி கூறினோம்.

கலை.........ஆமாம். திபெத் பற்றி மிகதெளிவாக விளக்கி கூறுவதற்கு இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் மூலம் விளக்கி கூறினால் போதாது.

தமிழன்பன்.........ஆமாம். ஆகவே நாம் இன்று மூன்றாவது முறையாக இன்றைய நிகழ்ச்சியில் திபெத் பற்றி விளக்கி கூறுகின்றோம்.

கலை.........இன்றைக்கு திபெத் நேற்றும் இன்றும் என்ற கண்காட்சியை பார்த்த பின் சுற்றுலா பயணம் மேற்கொண்ட மக்கள் சீனாவுக்கான வெளிநாட்டு தூதர்களின் கருத்துக்களை கேட்டு தெளிவுப்படுத்துகின்றோம்.

தமிழன்பன்.........ஏப்ரல் 30ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கிய இந்த கண்காட்சி பார்வையாளர்களுக்கு திபெத்தின் வளர்ச்சியை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

கலை.........ஆமாம். திபெத்தில் தலை கீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற வியப்பை சுமார் 100 நாடுகளிலிருந்து வந்த 170க்கும் அதிகமான தூதர்களும் துதாண்மை அதிகாரிகளும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

தமிழன்பன்.........திபெத்தின் நேற்றும் இன்றும் என்ற பெரிய ரக கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட 160 பொருட்களும் 400க்கும் அதிகமான நிழற்படங்களும் பார்வையாளர்களுக்கு திபெத்தின் பிங்தாங்கிய நிலை, தாழ்ந்து வளர்வது, நவ திபெத்தின் வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை முழுமையாக விளக்குகின்றன.

கலை.........தூதர்களும் தூதாண்மை அதிகாரிகளும் கண்காட்சியை பார்வையிட்ட பின் தங்களது மொழிகளில் தமது புரிந்துணர்வை குறிப்பு பதிவேட்டில் எழுதினார்கள்.

தமிழன்பன்.........அவர்களில் யார் எது பற்றிய கருத்துக்களை எழுதினார்கள்?

கலை.........சீனாவிலுள்ள உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் திபெத் பற்றிய மிக பல தகவல்களை பார்வையாளர்களுக்கு முழுமையாக வழங்கியதை திருபதியுடன் தெரிவித்தார்.

தமிழன்பன்.........அது மட்டுமல்ல கியூபா தூதர் காரோஸ் மிக்கர் பெரேஸ் குறிப்பேட்டில் கருத்து எழுதினார். திபெத் மக்கள் மேலும் மகத்தான சாதனைகளை பெறுக. சீன தேசத்தோடு ஒன்றுப்படுக என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

கலை.........இதற்கிடையில் மொல்தோவா தூதர் சீனாவின் திபெத்திற்கான வாழ்த்து எழுதினார். திபெத் மக்கள் மகத்தான நட்பார்ந்த பெரிய குடும்பத்தில் என்றுமே செழுமையடையும் என்று வாழ்த்தி எழுதினார்.

தமிழன்பன்.........நேபாள தூதர் டான்கா புலாசாட் கார்க்கி கருத்து எழுதி தெரிவித்தார். திபெத்தை ஒட்டிய அண்டை நாடான நேபாளம் திபெத்தின் நேற்றைய நிலையையும் இன்றைய நிலைமையையும் கண்களால் கண்டது. தலை கீழான மாற்றங்கள், பொருளாதார மற்றும் சமூகத்தின் விரைவான வளர்ச்சி ஆகியவை திபெத் மக்களுக்கு ஆக்கப்பூர்வமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன என்று தூதர் கார்க்கி கூறினார்.

கலை.........அண்டை நாட்டு தூதரின் கருத்தை கேட்ட பின் சைப்ரஸ் தூதர் யெரோமிடீஸ் கருத்து தெரிவித்தார். கண்காட்சியில் வைக்கபப்ட்ட மதிப்புக்குரிய தொல் பொருட்கள் திபெத்திற்கும் சீனாவின் இதர இடங்கள் மற்றும் பல்வேறு இனங்களுக்குமிடையிலான உறவை அறிந்து கொள்ள எனக்கு உதவி செய்துள்ளன. திபெத் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாக இந்த தொல் பொருட்கள் எடுத்துக் காட்டியுள்ளன என்றார் அவர்.

தமிழன்பன்.........மேற்கூறிய 170க்கும் அதிகமான தூதர்கள் தூதாண்மை அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளில் பலர் திபெத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வில்லை. ஆகவே கண்காட்சியை பார்த்த பின் அங்கே சுற்று பயணம் செய்யும் மனஉறுதி மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கலை.........இவர்களில் ச்சாட் தூதர் சுஞ்சியே கருத்து தெரிவித்தார். இது வரை திபெத்தில் பயணம் மேற்கொள்ள வில்லை. இருந்தபோதிலும் திபெத்தின் வரலாறு, அதன் தற்போதைய நிலைமை, திபெத்தின் அருமையான காட்சிதலங்கள் ஆகிவற்றை கண்காட்சியின் நிழற்படங்களின் மூலம் கண்டறிந்தேன் என்று அவர் கூறினார். அத்துடன் தானே திபெத்தில் சுற்றுப் பயணம் செய்யும் விருப்பத்தை அவர் தெரிவித்தார்.

............இசை..............

தமிழன்பன்.........இப்போது வெளிநாட்டு தூதர்கள், தூதாண்மை அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் நிபதிநிதிகளின் கருத்தை விளக்கி கூறினோம்.

கலை.........ஆமாம். சீனாவின் சாதாரண மக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்ட பின் என்ன கருத்து தெரிவித்தார்கள் என்பதை பார்க்கலாமா!

தமிழன்பன்.........நாம் இன்று விளக்கி கூறுவதற்கு 74 வயதான ச்சுவாங் பின் சங் என்பவரின் கூற்றே தேர்ந்தெடுத்துள்ளோம்.

கலை.........அவருடைய பின்னணி பற்றி நீங்கள் விவரியுங்கள்.

தமிழன்பன்.........மகிழ்ச்சி. ஏப்ரல் 30ம் நாள் இந்த கண்காட்சி துவங்கியது. அவர் மே 2ம் நாள் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தார். 9 மணிக்கு திறக்கப்படுவதற்கு முன் கூட்டியே 8 மணிக்கு வந்துவிட்டார்.

கலை.........அவர் மருத்துவ சிகிச்சை கருவிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் என்று கேட்டறிந்தேன்.

தமிழன்பன்.........ஆமாம். அவர் இப்போது ஓய்வு பெற்றார். ஆனால் 1959ம் ஆண்டில் அப்போது திபெத் இளைஞர்களை தொழிலாளர்களாக நியமிக்கப்பட்ட விடயம் தெளிவாக அவருடைய நினைவில் பதிந்துள்ளது. அப்போது தொழில் நுட்ப வல்லுனர்கள் தங்களுக்கு தெரிந்த நுட்பம் முழுவதையும் திபெத் இளைஞர்களுக்கு சொல்லி தந்தனர். திபெத் பெற்றுள்ள வளர்ச்சியில் அந்த தொழிலாளர்களின் பங்கு உள்ளது. ஆகவே திபெத்தை பிளவு செய்வதை கண்டு கோபமடைந்து துன்பபடட்டேன் என்று முதியவரான ச்சுவான் பிங் சன் கூறினார்.

கலை.........பெருநில பகுதியினர்களின் உணர்வை மட்டுமல்ல திபெத் இன மாணவர் ச்சாசி அவர்தம் உளமார்ந்த கருத்தை தெரிவிக்கிறார். கண்காட்சியை பார்த்த பின் எங்கள் ஊரான திபெத் முன்னேற்றமடைந்த வளர்ச்சி போக்கை அறிந்து கொண்டேன். நாட்டின் ஒன்றிணைப்பு கண்டிப்பாக தேவை. நாம் நன்றாக படித்து கல்வியறிவை கொண்டு தாய்நாட்டுக்கு சேவை புரிய வேண்டும். தாய்நாடு செழுமையடைய வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று ச்சாசி கூறினார்.

கலை.......அடுத்து சில தொகுதி புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு பார்க்கிறோம்.

தமிழன்பன்.........திபெத் இன மாணவர்கள் பலர் இப்போது சீனாவின் பல்வேறு மாநகரங்களில் உயர் நிலை கல்வி பயின்று வருகின்றனர்.

கலை.........திபெத்தில் துக்க மற்றும் இடை நிலை பள்ளிகள் பரவலாக்கப்பட்டுள்ளன. உயர் நிலை கல்வி நிலையங்களும் படிப்படியாக வளர்ந்துள்ளன.

தமிழன்பன்.........பழைய திபெத்தில் நவீன முக்கியத்துவம் வாய்ந்த பள்ளி ஒன்றும் கூட இல்லை. கல்வி பெறும் குழந்தைகளில் 2 விழுக்காட்டவர் மட்டும் பள்ளியில் கல்வி பயின்றன. இளைஞர்களிடையில் 95 விழுக்காட்டினர் படிக்க எழுத தெரியாதவர்களாவர்.

கலை.........ஆனால் இப்போது திபெத்தின் 73 மாவட்டங்களில் துவக்க பள்ளியில் கல்வி பெறும் மாணவர்களின் விகிதம் 98.2 விழுக்காட்டை எட்டியது. இடைநிலை பள்ளியில் பயில்கின்ற மாணவர்களின் விகிதம் 90.7 விழுக்காடாகும். உயர் நிலை கல்வி பெறுவோரின் விகிதம் 17.4 விழுக்காட்டை எட்டியது. இளைஞர்களிடையில் படிக்க எழுத தெரியாதவர்களின் விகிதம் 4.76 விழுக்காடாக குறைந்தது.

தமிழன்பன்.........அருமை. இது எவ்வளவு தெளிவான ஒப்பிடாக உள்ளது.

கலை.........போக்குவரத்து, அஞ்சல் தொடர்பு, தொலை தொடர்பு ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தமிழன்பன்.........ஆமாம். பழைய திபெத்தில் நெடுஞ்சாலை ஒன்று கூட கிடைக்காது. திபெத் சுதந்திரமடைந்த பின் 2007ம் ஆண்டு வரை 48 ஆயிரத்து 611 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு திறக்கப்படப்பட்டுள்ளது.

கலை.........பழைய திபெத்தில் நவீன தன்மை வாய்ந்த தொலை தொடர்பு வசதி இல்லை. ஆனால் 2007ம் ஆண்டின் இறுதி வரை திபெத்தில் 14 இலட்சத்து 42 ஆயிரத்து 900 குடும்பங்களில் தொலை பேசி வசதி பொருத்தப்பட்டுள்ளது. நூறு பேருக்கு 52 செல்லிட பேசிகள் என்ற விதிதத்தில் வசதிகள் மேம்பட்டுள்ளன.

தமிழன்பன்.........தொல் பொருட்களின் பாதுகாப்பு நிலைமையை பார்த்தால் 1400 மத நடவடிக்கை இடங்களை செப்பனிடுப்படுத்துவதற்கு நடுவண் அரசு 70 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது.

கலை.........இவ்வாண்டு நடுவண் அரசு 22 தொல் பொருளான கட்டிடங்களை செப்பனிடுவதற்கு 57 கோடி யுவானை ஒத்துகீடு செய்யும்.

தமிழன்பன்.........தற்போது பண்பாட்டு மற்றும் கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 4000க்கும் மேலாகும். இவர்களில் 90 விழுக்காட்டினர் திபெத் இனத்தை சேர்ந்தவராவர்.

கலை.........இது திபெத் சுதந்திரமடைவதற்கு முன் நினைக்கவே முடியாத அளவுக்கு அரிதானது.

தமிழன்பன்.........ஆகவே நாட்டின் ஒன்றிணைப்பு என்பது மக்கள் வளர்ச்சியை பொருத்தவரை முக்கிய விடயமாகும்.

கலை.........பல்வேறு தேசிய இனங்கள் சமமான நிலையில் வாழ்ந்து தாய்நாட்டை கூட்டாக வளர்க்க வேண்டும்.

தமிழன்பன்.........ஆகவே தலாய்லாமா வெகுவிரைவில் நாட்டுக்கு திரும்பி நடுவண் அரசுடன் நன்றாக ஒத்துழைத்தால் தான் அவர் புத்த மதத் துறையில் மதிப்புக்குரிய துறவியாக கருத்தப்பட வாய்ப்பு உள்ளது.

கலை.........நேயர்களே திபெத் பற்றி நாம் மூன்று நிகழ்ச்சிகளில் விளக்கி கூறினோம்.

தமிழன்பன்......... திபெத் பற்றி நீங்கள் குறிப்பிட்ட அளவு அறிந்து கொண்டுருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

கலை......இனிமேல் திபெத் சுதந்திரம் பற்றியும் சுதந்திரவாதிகள் சீனாவை பிளவுபடுத்துவதை அறிந்து கொண்டதையும் அனைவருக்கும் பிரச்சாரம் செய்யுங்கள்.

தமிழன்பன்,.......நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்பதற்கு மிக்க நன்றி.

கலை......வணக்கம் நேயர்களே.