Jiuzhaigou வுக்குச் சென்றதும் அவருக்கு, அகத்தூண்டலும், உணர்ச்சியும் வரும். அவர் எப்பொழுதும் அங்கே ஊன்றியிருந்து பிறந்த ஊரைப் பாராட்ட விரும்புகிறார் என்று அவர் கூறினார்.
குழந்தைப் பருவத்திலிருந்து, கலையில் பெரும் ஆர்வம் கொண்ட அவர், 16வது வயதில் முதன் முறையாக அரங்கில் ஏறி பாடலைப் பாடினார். ஆசிரியர் பயிற்சி பள்ளியிலிருந்து பட்டதாரியான பின், அவர் இசையின் அடிப்படை அறிவுகளகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இசை இயற்ற முயற்சி செய்யத் தொடங்கினார். 1994ம் ஆண்டு முதல் இதுவரை, நூற்றுக்கு அதிகமான பாடல்களை இயற்றியுள்ளார். அவர் திபெத் இனத்தின் பாரம்பரிய இசையையும், சமகாலத்தின் பிரபலமான இசையையும் இணைத்து, இயற்றிய பாடல்கள் சீனாவில் மிக புகழ்பெற்றவை.
பின் வரும் <பீடபூமியின் சிவப்பு> என்னும் பாடல், ஒரு காதல் பாடலாகும். பீடபூமியின் சிவப்பு என்பது, பீடபூமியிலுள்ள நல்ல சூரிய வெளிச்சத்தால் செந்நிறமாக மாறிய திபெத் இன பெண்களின் கன்னத்தைக் குறிக்கிறது. முதல் காதலை நினைக்கும் இப்பாடலைக் கேட்போம்.
பீடபூமியின் சூரிய ஒளி, எப்பொழுதும்
என்னைக் கட்டித் தழுவுகிறது
பரந்த பனி மூடிய பீடபூமியில்
எங்கே உன்னைக் காண முடியும்?
பீடபூமியின் சிவப்பே
அழகான சிவப்பே
கொதித்து வருகின்ற வெண்ணெய் தேநீர்
அவ்வாண்டு போல, வாசனை மிக்கது என்று இப்பாடல் ஒலிக்கிறது.
|