• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-04 15:06:21    
சீனாவின் தாதார் இனம்

cri

சீனாவின் தாதார் இன மக்கள், முக்கியமாக சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் yining,tacheng,wulumuqi முதலிய நகரங்களில் வாழ்கின்றனர். பழங்காலத்தில், அவர்கள் dada என்றழைக்கப்பட்டனர். தாதார் என்றால், குடிசை என்று பொருள். இதன் மக்கள் தொகை, 5000க்கு மேலாகும்.

தாதார் இன மொழி, Altic மொழி குடும்பத்தைச் சேர்ந்தது. தற்போது, உய்கூர் மொழியையும் ஹசாக் மொழியையும் பயன்படுத்துகின்றனர். தாதார் இன மக்கள், பொதுவாக, வணிக துறையிலும் கை தொழிலிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள், இஸ்லாம் மத நம்பிக்கை கொண்டவர்கள். சப்பான் விழா, தாதார் இனத்தின் சிறப்பான விழாவாகும். ஒவ்வொரு ஜூன் திங்களில் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்.

தாதார் இன பெண்மணிகள் தங்கள், சிறந்த சமையற்கலையினால் புகழ் பெற்றனர். அவர்கள், பல்வகை சிற்றுண்டிகளை சமைப்பதில் வல்லவர்கள். சப்பிடும் போது, குடும்பத்தினர் அனைவரும், சுற்றி உட்காருவர். மேசையிஅ நடுவில் துணி ஒன்று வைக்கப்படும். சீனர்கள் சாப்பிடப் பயன்படுத்தும் உணவுகுச்சிகளுக்குப் பதிலாக, அவர்கள் கரண்டி, கத்தி, முள்கரண்டி ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

சாப்பிடும் போது, மூத்தவர் தொடங்கி இளையவர் வரை வயதின்படி ஒருவருக்கு பின் ஒருவர், உணவுகளை வழங்குகின்றனர். சாப்பிட்டு முடிந்த பின், இறைவேண்டல் செய்தால் தான், சாப்பாடு முடிந்ததாக எண்ணப்படும்.

தாதார் இனத்தின் விழாக்கள், உய்கூர், ஹசாக் முதலிய இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட இனங்களின் விழாக்களைப் போல் இருக்கின்றன. அவற்றில், saban விழா, வசந்த காலத்தில் அருமையான இயற்கை காட்சி உடைய இடங்களில் கொண்டாடப்படுகிறது.

பாடல் ஆடல்களைத் தவிர, மற்போர், குதிரையேற்றப் போட்டி முதலிய பல விளையாட்டுகளும் நடத்தப்படும். அவற்றில் மிக அதிக வரவேற்பு பெறுவ, ஓட்ட போட்டியாகும். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள், ஒரு முட்டை வைக்கப்பட்ட கரண்டியை வாயில் ஏந்திக்கொண்டு ஓட வேண்டும். ஓடும் போது, முட்டை நிலத்தில் விழ கூடாது. ஓட்ட நெறியை ஓடி முடித்து முதலில் வந்து சேர்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.