நடைபெறவிருக்கும் பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஒலிம்பிக் எழுச்சியை பரவல் செய்கின்ற பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவில் 56 தேசிய இனங்கள் உள்ளன. எனவே அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட பெய்சிங் பயணத்தில் 56 தேசிய இனங்களின் பிரதிநிதிகளான 56 சிறுவர்கள் கலந்து கொண்டனர். பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் அமைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயணத்தின் போது ஒலிம்பிக் திடல்கள் அதன் ஏற்பாட்டு பணிகள் ஆகிய அறிவை வெளிப்படுத்தப்பட்டன. ஒலிம்பிக் தகவல்களை சிறுவர்கள் மூலம் அவர்கள் தம் இனங்களுக்கு பரப்புவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும். எனவே இந்த பயணத்திற்கு வருகை தந்த தேசிய இனங்களின் பிரதிநிதிகளான சிறுவர்களை தூதர்கள் என்று அழைக்கலாம் தானே. அந்த 56 சிறுவர் தூதர்களின் பெய்சிங் பயணத்தை பற்றி, இந்நிகழ்ச்சியில் தருகின்றேன்.
அண்மையில், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் அழைப்பின் பேரில் வருகை தந்த 56 தேசிய சிறுவர் தூதர்களின் பெய்சிங் பயணம் நிறைவடைந்தது.
அவர்களில் 15 வயதிலிருந்து 8 வயது வரையான சிறுவர்கள் இடம்பெற்றனர். சீனாவின் சிச்சுவான், திபெத், சிங்கியாங் உள்ளிட்ட பல்வேறு இடங்களிருந்து வந்த 56 சிறுவர்களில் 49 பேர் ஊனமுற்றோர் ஆவர். அவர்களில் பெரும்பாலோர், பெய்சிங்குக்கு முதல்முறையாக வருகை தந்துள்ளனர். சிறுவர் தூதர்களில் இருவர் சிச்சுவான் நிலநடுக்கப் பகுதியை சேர்ந்த a ba சோவின் qiang இனக் சிறுவர்கள் ஆவர். மே திங்கள் 12ம் நாள் சிச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தில் அவர்களது வீடுகள் இடிந்தன. ஆனால், நம்பிக்கையும், துணிவும் அவர்கள் இன்னும் கொண்டிருப்பதை வெளிப்படுத்தினர். சிச்சுவான் qiang இனத்திலிருந்து வருந்திருந்த சிறுவர் தூதரில் ஒருவரான chen gulu கூறியதாவது
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நாட்களில் பெய்சிங் செல்லாத குழந்தைகளும் நானும், இங்கு வந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை கண்டுகளிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார். தேசிய அரங்கான பறவை கூடு நீச்சல் போட்டி மையமான நீர் கன சதுரம் ஆகியவை தவிர, பெய்சிங்கின் சீன ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு மேலாண்மை மையத்துக்குச் சென்று, பரிமாற்றத்தையும் ஆய்வையும் சிறுவர்களான இத்தூதர்கள் மேற்கொண்டுள்ளனர். ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் பயிற்சித் தளத்தின் பரந்த விளையாட்டுத் திடலில் சுறுசுறுப்பாக இயங்கிய அவர்கள் விளையாட்டின் மீதான தங்களின் மிகுந்த ஆவலை வெளிகாட்டினர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தங்களை தயார் செய்து வரும் செவிப்புலனற்ற மற்றும் பேசும் திறனற்ற கால் பந்து விளையாட்டு வீரர்கள், அவர்களுடன், நட்பு கால்பந்து போட்டியாட்டம் மேற்கொண்டனர். சிச்சுவான் yiஇனத்தைச் சேர்ந்த சிறுவர் தூதர் yang xiaohua மகிழ்ச்சியுடன் விளையாடினார். அவர் கூறியதாவது
இது போன்ற கால்பந்து விளையாட்டு திடல், எங்களுக்கு இல்லை. எனவே, இன்று இங்கு வந்து விளையாடியதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
பல சிறுவர்களுக்கு பல உடலுறுப்பு சவால்கள் இருந்த போதிலும், அவை அவர்கள் மனத்திற்கு பிடித்த விளையாட்டுகளை விளையாட தடையாக இருக்கவில்லை. Uighur இனத்தைச் சேர்ந்த சிறுவன் da ni ya erக்கு கண்புரை நோய் இருந்தபோதிலும், எந்த விளையாட்டு விளையாட நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அவர் கூறியதாவது
|