• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-04 09:07:07    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள இலங்கையின் தூதர்களின் நல்வாழ்த்துக்கள் 2

cri
ஒலிம்பிக் வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை எட்டியமை அரசியல் காரணிகளின் பாதிப்பு காற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் எழுச்சி தொடரோட்டமாகும். பொதுவாக மனித குலத்தின் விருப்பமும் இதுவாகும் என்றார் அவர்.

உலக முதல் தரத்தை இலங்கை கிரிக்கெட் அணி கொண்டுள்ளது. கிரிக்கெட் உலக கோப்பையின் சாம்பியன பட்டத்தை இலங்கை வீரர்கள் பெற்றனர். இவ்வாண்டு பிப்ரவரி 26ம் நாள், விளையாட்டு பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றும் வகையில், இரு நாட்டு அரசு வாரியங்களுக்கிடையிலான ஒத்துழைப்புடன்படிக்கையில் சீனாவும் இலங்கையும் கையொப்பமிட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான விளையாட்டு பரிமாற்றத்தில் Amunugama பேரார்வம் கொண்டுள்ளார். தூராண்மை உறவை சீனாவும் இலங்கையும்

நிறுவிய 50வது ஆண்டாகவும் சீன-இலங்கை நட்பு ஆண்டாகவும் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. பண்டைக்காலம் தொட்டு, இரு நாடுகள் ஆழ்ந்த தூதாண்மை உறவைக் கொண்டன. இரு நாட்டு பரிமாற்றங்களில் விளையாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. விளையாட்டு துறையில் இரு நாட்டு அரசுகள் உடன்படிக்கையை உருவாக்குவது, இரு நாட்டு வீரர்களுக்கிடையிலான பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் என்றார் அவர்.
இலங்கை மக்கள் விளையாட்டில் மிகவும் ஆர்வமுள்ளவராய் விளங்குகின்றனர். எனவே, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவதை அவர்கள்

எதிர்பார்த்து காத்திருகின்றனர். சீன வானொலி நிலையம் நடத்திய பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய பொது அறிவு போட்டியில் இலங்கை நேயர்கள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்தனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு ஆதரவு அளித்து வருகின்ற கையெப்பமிடும் நடவடிக்கையை பல நேயர்கள் ஏற்பாடு செய்து மேற்கொண்டனர். இலங்கை மக்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு ஆதரவு அளித்து, அதில் சேர்ருகின்ற மாபெரும் ஊக்கத்தை இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்று Amunugama கூறினார்.