கனவை ஒப்படைக்கும் தாவாயாங்சுங்
cri
1990ஆம் ஆண்டில் 14 வயதான திபெத் இனச் சிறுமி ஒருவர், தாங்குலா மலையின் நுழைவாயிலில், 11வது பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏற்றினார். இந்த எதிர்பாராத அனுபவத்தினால், சாதாரண இந்தச் சிறுமி மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவருக்கும் விளையாட்டுக்கும் இடையில் பிரிக்கப்பட முடியாத ஒரு தொடர்பு உருவாகியது. 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தற்போது, பெருமை நிறைந்த ஆசிரியராக அந்தச் சிறுமி மாறியுள்ளார். திபெத் பல்கலைக்கழகத்தின்
கம்யூனிஸ இளைஞர் லீக்கில் பணிபுரியும் அவர், Lenovo நிறுவனம் பரிந்துரைத்த தீபம் ஏந்தும் நபராக, திபெத்தில் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியி்ன் தீபத் தொட்டரோட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தான் திபெத் மக்களுக்கு பெருமை தரும் தாவாயாங்சுங் அம்மையார். 18 ஆண்டுகள் கழிந்து இன்று அவரது கண்களுக்கு கீழே சுருக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவரது கண்கள் இன்னமும் தெளிவாக காணப்படுகின்றன. 11வது பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றி அவர் கூறியதாவது— "ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றி அப்போது எனக்கு தெரியாது. தீபம் பெறுவதக்கான முக்கியத்துவம் பற்றியும் தெரியாது.
லாசாவிலுள்ள இடைநிலைப் பள்ளிகளிலும் விளையாட்டுப் பள்ளிகளிலும், நான் கல்வி பயின்ற திபெத் கலைப் பள்ளியிலும் அதற்கான தெரிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மட்டுமே என் நினைவில் இருக்கிறது. அப்போது சக மாணவியர் சிலருடன் இணைந்து இருந்தேன். ஒருவர் என் பெயரை கேட்டார். தெரிவுக்காக அவருடன் சேர்ந்து திபெத் உணவு விடுதிக்கு செல்ல என்னை அழைத்தார்" என்றார் அவர். அப்போதைய நினைவுகளை மீண்டும் புரட்டுகையில் தாவாயாங்சுங் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாங் சியோங் என்ற இடத்தில் தீபத்தை ஏற்றிய போக்கை அவர் அனுபவித்தார். பின்னர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது, வெற்றியின் பொருள் பற்றி தாவாயாங்சுங் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
எளிமையான குணாதிசயத்தினால், காட்சியில் தாம் தேவதை போல் அழகாக இருந்ததாக அவர் உணர்ந்தார். இவ்வாண்டு மார்ச் 24ஆம் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம் கிரேக்கத்தில் ஏற்றப்பட்டது. அந்த நிகழ்ச்சியை தாவாயாங்சுங் முழுமையாக பார்த்தார். "அந்த பெண் குரு, 1990ஆம் ஆண்டில் நான் ஏற்ற பாத்திரத்தைப் போலவே இருந்தார் என்று நிகழ்ச்சியைப் பார்த்தவுடன் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். 'அப்போதைய உனது பங்கேற்பு முக்கியமானதே' என என் தாய் கூறினார்" என்றார் தாவாயாங்சுங். பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபம் பெற்ற பின், தாவாயாங்சுங்கின் வாழ்க்கை விளையாட்டுடன் பிரிக்கப்படவில்லை. பெய்ஜிங் நடனக் கழகத்தில் மேற்படிப்புக்காக 2 ஆண்டுகள் கல்வி பயன்ற பின், சொந்த ஊருக்கு அவர் தயக்கமின்றி திரும்பினார். திபெத் இன ரத்தமான, சிங்ஹாய்-திபெத் பீடபூமிக்கு பெருமை தரும் அவர், விளையாட்டுத் துறைக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும்
முழுமூச்சுடன் பங்காற்றி வருகிறார். 2004ஆம் ஆண்டில் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம் ஏந்துபவராக, பெய்ஜிங்கில் ஒலிம்பிக் பற்றிய கனவை அவர் ஒப்படைத்தார். கடந்த ஆண்டில் லாசாவிலுள்ள போதலா மாளிகையின் சதுக்கத்தில் Lenovo நிறுவனம் நடத்திய பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபக் காட்சியில் அவர் கலந்து கொண்டு, Lenovo நிறுவனம் பரிந்துரைத்த தீபம் ஏந்தும் நபராக மாறினார். இவ்வாண்டில், மறுபடியும் ஒலிம்பிக் தீபம் ஏந்துபவரான அவர், மங்கலமான மேகப் படம் கொண்ட தீபத்தை உயர்வாக ஏந்தி, லாசாவின் வீதியில் ஓடினார். தனக்கும் தீபத்துக்கும் இடையில் முன்வினைத் தொடர்பு நிலவுகிறது என்று தாவாயாங்சுங் கூறினார்.
|
|