19வது சர்வதேச சீன ஹார்பின் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பொருட்காட்சி அண்மையில் சீனாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Heilongjiang மாநிலத்தின் ஹார்பின் நகரில் நிறைவடைந்தது. வட கிழக்காசிய பிரதேசத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சியில், சீனா, ரஷியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் வணிகர்கள் கலந்துகொண்டனர். ரஷியாவின் மேல் தங்கள் கவனங்களை முக்கியமாகக் கொள்வது என்ற அடிப்படையில், வட கிழக்காசிய பிரதேசத்தின் வலுமையான பொருளாதார நாடுகளான ஜப்பான், தென் கொரியா இரு நாடுகளும் இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் அளவை விரிவாக்கியுள்ளன.
ரஷியா, சீனாவின் வட கிழக்குப் பிரதேசத்துக்கு மிக அருகில் இருக்கிறது. இதனால்தான், சீனாவின் வட கிழக்கு மாநிலங்களுடன் ரஷியா பொருளாதார வர்த்தகத் தொடர்பு கொண்டு வருகிறது. ஹார்பின் பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சி, இரு நாடுகளின் வணிகர்களுக்கு பரிமாற்றத்திற்கான தொடர்பு மேடையை வழங்குகிறது. எனவே, ரஷிய வணிகத் துறை இப்பொருட்காட்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இப்பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சியில் கலந்துகொண்ட ஏறக்குறைய 12 ஆயிரம் வணிகர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் ரஷியாவிலிருந்து வந்திருந்தனர். இவ்வாண்டு, இப்பொருட்காட்சி நடைபெற்ற போது, ரஷியாவின் யூதத் தன்னாட்சி பிரதேசம், பிரிமோர்ஸ்கி கிராய், சபாங்கல்ஸ்கி கிராய் ஆகிய பிரதேசங்கள் சிறப்புப் பரவல் தன்மை வாய்ந்த பொருட்காட்சிகளை நடத்தின.
ரஷிய சபாங்கல்ஸ்கி கிராய் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ரவில் ஃபரிடோவிச் ஜெனியாடுலின் மற்றும் அவரது பிரதிநிதிக் குழு, ஹார்பின் பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சியில் 10 முறை கலந்துள்ளனர். அவர் கூறியதாவது:
ஒவ்வொரு முறையும் நாங்கள் இப்பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சியில் கலந்துகொள்வதோடு, நாங்கள் அதிகமான கனிகளைப் பெறுகின்றோம். வட கிழக்காசிய பிரதேசத்தின் பொருளாதார வர்த்தகத் தொடர்புக்கான முக்கிய மேடையாக ஹார்பின் பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சி மாறியுள்ளது. சீனாவின் தென் முனை பகுதியிலுள்ள பொருளாதாரத்தில் வளர்ந்த சில மாநிலங்களின் வணிகர்களும் இப்பொருட்காட்சியில் கலந்து வருகின்றனர். தவிர, ஜப்பான் போன்ற இதர நாடுகளின் வணிகர்களும் இப்பொருட்காட்சியில் பங்குகொள்கின்றனர் என்றார் அவர்.
இது வரை, சீனாவின் 7வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக ரஷியா இருந்து வருகின்றது. 2007ம் ஆண்டு, இரு நாடுகளின் வர்த்தகத் தொகை 4 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. சீன-ரஷிய பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பில் மாபெரும் எதிர்கால வாய்ப்பு நிலவி வருகிறது என்று ரவில் ஃபரிடோவிச் ஜெனியாடுலின் கருத்து தெரிவித்தார்.
2010ம் ஆண்டு, இரு நாடுகளின் வர்த்தகத் தொகை 6 ஆயிரம் அமெரிக்க டாலரை எட்டுவது என்ற குறிக்கோளை, இவ்வாண்டு ரஷிய அரசுத் தலைவர் திமித்ரி மெட்வதேவ் சீனாவில் பயணம் மேற்கொண்டபோது ரஷிய-சீனத் தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார். இக்குறிக்கோள், திட்டப்படி நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இக்குறிக்கோளை நனவாக்குவதற்கு சபாய்கல்ஸ்கி கிராய் பிரதேசம் பங்காற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
2002ம் ஆண்டு, சபாய்கல்ஸ்கி கிராய் பிரதேசத்துக்கும் சீனாவுக்குமிடையிலான வர்த்தகத் தொகை 10 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. ஆனால், அடுத்த ஆண்டு அல்லது 2010ம் ஆண்டுக்குள், இரு தரப்பின் வர்த்தக தொகை 100 கோடி அமெரிக்க டாலர் எட்டுவதாக மதிப்பிடப்படுள்ளது என்று அவர் கூறினார்.
சீன-ரஷிய பொருளாதார வர்த்தகம் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்வது மட்டுமல்ல, இரு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா வணிகத் தொடர்புகளை மென்மேலும் நெருக்கமாக்கி வருகிறது. இரு நாடுகளின் தொழில் நிறுவனப் பொருளாதார வர்த்தகத்தில் தொடர்ந்து வளரும் முன்னேற்றப் போக்கு நிலவுகிறது.
இந்த ஹார்பின் பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சியில் ரஷிய வணிக நாளின் போது, சீன-ரஷியாவின் பல தொழில் நிறுவனங்கள், கலந்தாய்வின் மூலம் ஒத்துழைப்புக்கான 18 உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன. அதன் தொகை 130 கோடி அமெரிக்க டாலரை எட்டின. உயிரினங்களின் எரியாற்றல் திட்டப்பணிகள், எண்ணெய் இயற்கை எரிவாயு அகழ்வு, ஆடை ஏற்றுமதி இறக்குமதி, கட்டிடத் திட்டப்பணிகள் முதலியவை இந்த உடன்படிக்கைகளில் அடங்குகின்றன.
இந்த ஹார்பின் பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சியில், சிறப்பு வணிக நடவடிக்கைகளை ஜப்பான், தென் கொரியா, பின்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் மேற்கொண்டன. வட கிழக்காசிய பிரதேசத்தின் முக்கிய பொருளாதார நாடுகளான ஜப்பான், தென் கொரியா இப்பொருட்காட்சியில் பெரிய காட்சி இடங்களுக்கு ஆயத்தம் செய்துள்ளன. பொருட்காட்சியில் கலந்துகொண்ட வணிகர்களிடம் சொந்த வர்த்தகத் திட்டப்பணிகளை அவை அறிமுகப்படுத்தின என்று ஹார்பின் பொருளாதார வர்த்தக பொருட்காட்சி அலுவலகத்தின் இயக்குநர் chendianyun தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் காட்சி இடங்கள், இப்பொருட்காட்சியில் ஏற்பாடு செய்யப்படுவதால், இந்நாடுகள் பெரிதும் ஈர்க்கப்பட்டன என்று அவர் கூறினார்.
ஹார்பின் வர்த்தகப் பொருட்காட்சி, ஜப்பானில் வலுமையான செல்வாக்கை மென்மேலும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது, ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் பல இவ்வர்த்தகப் பொருட்காட்சியில் மிகுந்த ஆர்வம் கொள்கின்றன என்று ஜப்பானிய யாமகாடா மாவட்டப் பிரதிநிதிக் குழுவின் பொறுப்பாளர் அட்சுஷி சுசூசி தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இந்த முறை, யாமகாடா மாவட்டத்தின் சில தொழில் நிறுவனங்களை முக்கியமாக அறிமுகப்படுத்த வேண்டும். சீனாவின் Heilongjiang மாநிலத்தில் ஒத்துழைப்பு வாய்ப்பை தேட வேண்டும். வேளாண், பார்வையிடல் மற்றும் சுற்றூலாத் துறைகளில் ஒத்துழைப்பைத் தேடுவது என்பது அவை இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் முக்கிய குறிக்கோள்களாகும். தற்போது, கிழக்கு பட்டுப் பாதை என்ற சீன-ஜப்பானிய ஒத்துழைப்புத் திட்டப்பணி ஏற்கனவே ஹார்பின் நகரில் துவங்கியுள்ளது என்றார் அவர்.
இப்பொருட்காட்சியின் தொடர்புடைய புள்ளிவிபரங்களின் படி, இந்த ஹார்பின் வர்த்தகப் பொருட்காட்சியின் போது, மொத்தமாக ஆயிரத்து 60 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உடன்படிக்கைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. இது, கடந்த பொருட்காட்சியை விட, 3.5 விழுக்காடு அதிகமாகும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஹார்பின் பொருளாதார வர்த்தகப் பொருட்காட்சி, சீனா, ரஷியா, ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகள் தொடர்புகொள்ளும் முக்கிய பாலமாக மாறியுள்ளது.
|