• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-08 09:07:27    
வான் ஃபோ கோயில்

cri

வான் ஃபோ தாங் கோயில், பெய்ஜிங் ஃபாங் ஷான் பிரதேசத்திலுள்ள ச்சி சியா வூவின் தென் பகுதியில் இருக்கிறது. இது, தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. முன்பு, அக்கோயில் லோங் ச்சுவான் கோயில் என அழைக்கப்பட்டது. பின்னர், அது தா லி சான் கோயில் என்று பெயர் மாறியது. வான் ஃபோ லோங் ச்சுவான் பௌ தியான் எனவும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

வான் ஃபோ தாங் கோயில், மலையில் கட்டியமைக்கப்பட்டது. இக்கோயிலில், மூன்று மண்டபங்கள் உள்ளன. தன் சுவற்றில், தாங் வம்சக்காலத்தில் செதுக்கப்பட்ட மாபெரும் சிற்பத்தை காணலாம். அதன் நீளம், 23.08 மீட்டர், உயரம் 2.47 மீட்டராகும். வான் பூ சா ஃபா ஹுய் படம் என்ற பெயர் கொண்ட இந்தச் சிற்பம், 31 வெளண் சலவை கற்களால் செதுக்கப்பட்டது. இதில் இடம்பெறும் நபர்களின் முக பாவாங்கள், வேறுபட்டு, உண்மை உருவங்கள் போல் இருக்கின்றன. அது, தாங் வம்சக்காலத்தில் செதுக்கப்பட்ட, நம் நாட்டின் ஒரு அரிய சிற்பக்கலைப் பொருளாகும்.

வான் ஃபோ தாங் கோயிலின் கீழே, இயற்கையாக உருவான சுண்ணாம்பு கற் குகை இருக்கிறது. அதன் பெயர் "கொங் ஷுய் தொங்". இதில் ஊற்று நீர் உண்டு. இக்கற்குகையின் சுவரில், சூய் மற்றும் தாங் வம்சக்காலங்களில் செதுக்கப்பட்ட திருமறை அமர்ந்த நிலையிலான கல் புத்தர் சிற்பங்கள் உள்ளன.

இக்கோயின் நடுவில், அமர்ந்த நிலையிலான சாக்யமுனி உருவ சிலை இருக்கிறது. அதன் இரு பக்கங்களில், வேறு பல புத்தர்களின் சிலைகள் காணப்படலாம். அவற்றின் நிலைகள் வேறுபடுகின்றன.

இக்கோயிலின் மலரின் இதழ்கள் போல் அடுக்காக அமைந்த கோபுரம், கி.பி. 1070ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. அதன் உயரம், 24 மீட்டராகும். அது, சீனாவின் மிகப் பழங்கால மலர் கோபுரமாகும். அத்துடன், அது பெய்ஜிங்கிலுள்ள இரு மலர் கோபுரங்களில் ஒன்றாகும்.