• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-08 11:17:08    
பாய்ச்சல் முன்னேற்றம் அடைந்த சீன அறிவியல் தொழில் நுட்பம்

cri
2007ம் ஆண்டு சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. சீனாவின் முதலாவது சந்திர ஆய்வு செயற்கைக் கோளான chang e-1இன் வெற்றி, சீன அறிவியல் தொழில் நுட்பத் துறையிலான பாய்ச்சல் முன்னேற்றங்களில் ஒரு முன் மாதிரியாகும்.

கடந்த அக்டோபர் திங்கள் 24ம் நாள், chang e-1 எனும் செயற்கைக் கோள் வெற்றிகரமாக சந்திரனுக்கு அனுப்பப்பட்டது.

கண்காணிப்பு தரவுகளின் படி, சந்திர மண்டலத்துக்கு அருகிலுள்ள முதலாவது வேகக் கட்டுப்பாடு சுமூகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. chang e-1 12 மணி நேர சந்திர சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதற்குப் பிந்திய பணி திட்டத்தின் படி மேற்கொள்ளப்படும்.

நவம்பர் திங்கள் 5ம் நாள் chang e-1, சீனாவின் முதலாவது சந்திர ஆய்வு செயற்கைக் கோளாக மாறியது.

சந்திரனுக்கு, நான் வருகின்றேன். சீனப் பழங்கதையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சாங் எர் சீமாட்டி நிலாவுக்குச் சென்றார். இன்று, chang e-1 என்ற நான், சீனாவின் வணக்கத்தைக் கொண்டு வருகின்றேன். சந்திரக் கோளுக்கு, வணக்கம். சந்திரனுக்கு வணக்கம்.

நவம்பர் திங்கள் 26ம் நாள், பூமிக்கு 4 இலட்சம் கிலோமீட்டர் அப்பாலிலுல்ள சந்திரனின் சுற்று வட்டப்பாதையிலிருந்து chang e-1 என்னும் செயற்கைக் கோள் திரும்ப அனுப்பிய ஒலி பதிவையும் சந்திரனின் முதலாவது படத்தையும் சீனா வெளியிட்டது.

chang e-1 செயற்கைக்கோள் மூலம், சீன மக்களின் பல்லாயிரம் ஆண்டு கால சந்திரப் பயணக் கனவு உண்மையாக மாறியுள்ளது. பூமியைத் தவிர்த்த மற்றொரு கோளுக்கு அருகில் சீனா ஆய்வு மேற்கொள்ள துவங்கியது. சீனாவின் இந்த முதலாவது சந்திர ஆய்வு பயணத் திட்டப்பணி, சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வரலாற்றில் பல முதல் முறைகளை உருவாக்கியுள்ளது. சீனத் தேசிய பாதுகாப்பு அறிவியல் தொழில் நுட்பத் தொழில் துறை ஆணையத்தின் தலைவர் zhang qing wei கூறியதாவது

குறுகிய 3 ஆண்டு காலத்தில், சீன அறிவியலாளர்கள், சுற்றுவட்டப் பாதையின் வடிவமைப்பு, பறத்தல் கட்டுப்பாடு, நெடுந்தூர கண்காணிப்பு மற்றும் செய்தித் தொடர்பு முதலிய முக்கிய தொழில் நுட்பங்களை ஆராய்ந்து, அதிக அறிவுகள் சொத்துரிமை கொண்ட மைய தொழில் நுட்பங்களைக் கைப்பற்றினர் என்றார் அவர்.

பூமிக்கு 4 இலட்சம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள chang e -1 ஐ சீராக கட்டுப்படுத்துவது, சீன அறிவியலாளர்கள் தீர்க்க வேண்டிய முதன்மையான பிரச்சினையாகும். இதற்கு முன், பூமிக்கு 70 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள செயற்கைக் கோளைக் கட்டுப்படுத்தும் அனுபவம் மட்டும் சீனாவுக்கு உண்டு. இந்தக் கடினமான பிரச்சினை குறித்து, chang e -1 செயற்கைக் கோளின் அளவீட்டு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிக்கு பணியாளர்கள் 3 வேறுபட்ட ரக இணையங்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக 10 இலட்சத்துக்கு அதிகமான வரிசைகள் கொண்ட அளவீட்டு மற்றும் கட்டுப்பாட்டுப் பயன்பாட்டு மென்பொருள் செய்நிரல்களைச் சிறப்பாக ஆராய்ந்து எழுதினர் என்று பெய்ஜிங் விண்வெளி பயணக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் zhu min cai கூறினார். அவர் கூறியதாவது

இச் செயற்கைக் கோளின் சுற்று வட்டப்பாதையை 4 முறைகள் மாற்றி, ஒரு முறை சரிப்படுத்தினோம். தவிர, சந்திரனுக்கு அருகில் இதன் வேகத்தை 3 முறை கட்டுப்படுத்தினோம். ஒவ்வொரு முறையும் சீரான அளவீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. செயற்கைக் கோளின் சுற்று வட்டப்பாதையைக் கட்டுப்படுத்தும் பயன் வித்தியாசம் 1.7 விழுக்காட்டிலிருந்து 0.03 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது என்றார் அவர்.

திட்டவட்டமான அறிவியல் இலக்குகளை நிறைவேற்றும் வகையில், chang e -1 செயற்கைக் கோளில் 8 வகை முன்னேறிய சாதனங்கள் பொருத்தப்பட்டன. இவை, சீனாவில் ஏன் உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, பெய்ஜிங், குன் மிங் ஆகிய 2 நகரங்களில் சீனாவில் மிகப் பெரிய 2 தரவு கிண்ண அலைக்கம்பங்கள் கட்டியமைக்கப்பட்டன. சந்திர ஆய்வு தரவுகளை வாங்குவதோடு, இவை, எதிர்கால கோள் ஆய்வுக்கு அடிப்படையும் இட்டுள்ளன.

முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டுடன், சந்திரனின் மேற்பரப்பு பற்றி சீனா எடுத்த முதலாவது படத்தின் தரம் சீராக இருக்கின்றது. சந்திரனின் மேற்பரப்பில் வேறுபட்ட அளவுடைய குழிகள் படத்தில் தெளிவாகக் காணப்படுகின்றன.

பூமி செயற்கைக் கோள், ஆளுள்ள விண்வெளிப் பயணம் ஆகியவற்றை அடுத்து சந்திரப் பயணப் பணித்திட்டத்தின் வெற்றி, சீன விண்வெளிப் பயண துறையின் மற்றொரு மைல்கல்லாகும் என்று சீன அதிகார வட்டாரம் மதிப்பிடுகின்றது. சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றல் வலுப்படுவது, சுய புத்தாக்க திறன் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப தரம் இடைவிடாமல் உயர்வது ஆகியவற்றை இது முக்கியமாக வெளிப்படுத்துகின்றது.

2007ம் ஆண்டில், xin nuo 3 எனும் செய்தித் தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சீனாவின் 2வது கடல் செயற்கைக் கோள் பயன்படுத்தப்படத் துவங்கியது. சீனா ஆராய்ந்து தயாரித்த நைஜீரிய செய்தித் தொடர்பு செயற்கைக் கோள் 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுவது, சர்வதேச சந்தையில் சீன விண்வெளி பயண துறையின் இன்னொரு வெற்றியாகும்.

விண்வெளி பயணத் துறையைத் தவிர, அடிப்படை ஆய்வு, முன்னேறிய தொழில் நுட்ப ஆய்வு, சமூகப் பொது நலன் கொண்ட தொழில் நுட்ப ஆய்வு முதலிய துறைகளில் சீனாவின் சாதனைகள் சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப துறையின் பாராட்டைப் பெற்றுள்ளன.

மேலும், பெரிய ரக சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சீனா படிப்படியாக தலைமை பங்கு ஆற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மற்றும் புதிய எரியாற்றல் பற்றிய சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை சீன அரசு துவங்கியது. சீனத் துணை அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் cao jian lin இத்திட்டத்தில் அடங்கிய முன்னுரிமை ஒத்துழைப்பு துறை பற்றி எடுத்து கூறினார். அவர் கூறியதாவது

முன்னுரிமை துறை என்பது, சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதையும், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் கட்டுமானத்தையும் இணைப்பது, உயிர் வள எருக்களின் எரியாற்றல் மின்னாற்றல், காற்றாற்றல் மின்சாரம், hydrogen ஆற்றல் மின்கலம், இயற்கை hydrate ஆகியவற்றின் வளர்ச்சியை உள்ளடக்கியது என்றார் அவர்.

சர்வதேச அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனாவின் தகுநிலையும் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரித்ன. இந்தத் துறையில் சீனா வேகமான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தும் என்று இது காட்டுகின்றது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.