• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-08 09:23:24    
நிகழ்ச்சிகளை கேட்டு தெவிர்த்த உளமார்ந்த கருத்துக்கள்

cri

  கலை: வணக்கம் நேயர்களே. உங்கள் எண்ண அலைகளின் இனிய சங்கமமான நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்னும் ஒரு திங்களில் 45வது ஆண்டு நிறைவை சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு மகிழ்வோடு கொண்டாடவுள்ளது.
க்ளீட்டஸ்: 46வது ஆண்டின் புகுமுகத்தில் நின்றபடி, கடந்த காலத்தில் நேயர்களாகிய நீங்கள் அளித்த ஆதரவையும், ஊக்கத்தையும் நன்றியோடு நினைக்கிறோம்.
கலை: மேலும், தொடரும் உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி கூறி இன்றைய நிகழ்ச்சிக்குள் நுழைகிறோம்.
க்ளீட்டஸ்: பாத்திகாரன்பட்டி பால சரஸ்வதி எழுதிய கடிதம். சீன வானொலி தேர்வு செய்த சிறந்த பணியாளர்களில், அனைத்து மொழிப்பிரிவுகளிலிருந்து தமிழ்ப்பிரிவின் தலைவர் தி. கலையரசி அவர்கள் சிறந்த பணியாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து நாங்கள் பெருமையடைகிறோம். அதே போன்று அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் எஸ். செல்வம் தலைசிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டதற்கும் பெருமைகொள்கிறோம். பாராட்டுக்கள்.

கலை: அடுத்து விழுப்புரம் எஸ். சிவக்குமார் எழுதிய கடிதம். சீன தேசிய பேரவை பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை கேட்டேன். எரியாற்றல் சிக்கனம், பசுங்கூட வாயயு வெளியேற்றம் பற்றிய கருத்துக்கள் அருமை. 130 சிறிய நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்பட்டன, வாரந்தோறும் ஒரு நாள் மக்கள் கார் ஓட்டாமல் தவிர்க்கலாம் என்பது போன்ற தகவல்களை கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி நேயர் எம். ஒய். ஃபாத்திமா இசாமா எழுதிய கடிதம். பள்ளி மாணவியாகிய எனக்கு சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்பது பயனுள்ளதாய் அமைகிறது. செய்திகள், மலர்ச்சோலை, விளையாட்டுச் செய்திகள், கேள்வியும் பதிலும் போன்ற நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை. நட்பை வளர்க்கும் நற்பணியை நோக்கமாய் கொண்ட சீன வானொலியால் உலகம் பயன்பெற வாழ்த்துகிறேன்.
கலை: சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி தாசப்ப கவுண்டன்புதூர் எஸ். சுதர்ஷன் எழுதிய கடிதம். சீனாவில் தங்கி உள்ளூர் மாணவர்களுக்கு, ஆங்கில மொழியை கற்பித்து வரும் இந்திய இளைஞர் கிரிதர் பற்றிய சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியை கேட்டோம். குங்ஃபூ போர்க்கலையின் ப்ரூஸ் லியின் ரசிகரான கிரிதர், சீன மொழியையும், குங்ஃபூ கலையையும் கற்றுவருவதை அறிந்துகொண்டோம். சீனாவில் வாழ்வது சொந்த நாட்டில் வாழ்வது போன்றே மகிழ்ச்சியாகவுள்ளது என்று அவர் கூறிய கருத்து அருமை.
க்ளீட்டஸ்: கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார் எழுதிய கடிதம். மார்ச் திங்கள் 22ம் நாள் நிகழ்ச்சியில் வானிலை நாள் பற்றி அறியத் தந்தீர்கள். மேலும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கடந்த ஈராண்டுகளில் சீன இந்திய உறவு சீரடைந்துள்ளது என்றும் கடந்த 2006 நவம்பர் திங்களில் சீனத் தலைவர் ஹூ சிந்தாவ் இந்தியப் பயணம் மேற்கொண்டபோது 21 ஆம் நூற்றாண்டின் எதிர்பார்ப்பு என்ற ஒப்பந்தத்தில் சீன இந்திய தலைவர்கள் கையெழுத்திட்டது உள்ளிட்ட மேலும் பல தகவல்களையும் அறிய முடிந்தது.


மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்
சூன் திங்கள் 21 ஆம் நாள் இடம்பெற்ற •கேள்வியும் பதிலும்• நிகழ்ச்சியைக் கேட்டேன். நிகழ்ச்சியில் தமக்கு முன்னேறிய பணியாளர் என்ற விருது வழங்கப்பட்டதன் பின்னணியை தி.கலையரசி அவர்கள் விவரமாக எடுத்துக் கூறினார். சீன வானொலி ஆண்டுதோறும் பெறும் மொத்தக் கடிதத்தில் 25 விழுக்காட்டு கடிதங்கள் தமிழ்ப்பிரிவுக்கானவை என்பதை அறியும்போது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. மற்ற மொழிகளுக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. தமிழ்மொழி உலகின் பண்டைய ஐந்து மொழிகளுள் ஒன்றாக கருதப்பட்டாலும், ஒரு நாட்டின் முக்கிய அல்லது தனி மொழியாக அது இல்லை. சில நாடுகளில் ஒரு பகுதியினரால் மட்டுமே தமிழ் மொழி பேசப்படுகிறது. ஆனால், சீன வானொலியின் மற்ற மொழிப் பிரிவுகள் ஒரு முழு நாட்டிற்கும் சொந்தமானவை. இந்த இக்கட்டான சவாலையும் எதிர்கொண்டு, நாம் அனைவரும் கூட்டாக பாடுபட்டு, இச்சசாதனையை உருவாக்கியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். நமது சாதனைகள் தொடரட்டும்.
அமெரிக்கா, ஆல்பர்ட்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஹு சிந்தாவ், "மக்கள்" என்ற இணையத்தின் மூலம், இணைய பயன்பாட்டாளர்களுடன் தொடர்பு பரிமாற்றம் நடத்தினார், என்ற‌ இனிய‌ செய்தி செவிக‌ளில் தேனாய்ப் பாய்ந்த‌து.
இணைய‌ப் ப‌ய‌ன்பாட்டின் தாக்க‌த்தில் த‌ம்மைச் சுற்றியுள்ள‌ அதிகாரிக‌ள் தரும் த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே ந‌ம்பியிராம‌ல்பொதும‌க்க‌ளோடு க‌ருத்துப் ப‌ரிமாற்ற‌ம் செய்வ‌து உண்மையில் நாட்டும‌க்க‌ள் ந‌ல‌னில் அக்கறையுள்ள‌ ஒரு த‌லைவ‌ர் ஹு சிந்தாவ் என்ப‌தை உறுதிப்படுத்துகிறது. அந்த‌க்கால‌த்தில் ம‌ன்ன‌ன் மாறுவேட‌த்தில் ந‌க‌ர் சோத‌னைக்குச் செல்வ‌துபோல‌ இந்த‌க்கால‌த்தில் இணையத்தின் மூல‌ம் இருந்த‌ இட‌த்திலேயே இருந்து பொதும‌க்க‌ள் க‌ருத்த‌றிவ‌தில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கத் துவ‌ங்கிவிட்ட‌து. அனேக‌மாக‌ உல‌கிலேயே ம‌க்க‌ள் க‌ருத்த‌றிய‌, குறைக‌ள் தெரிந்துகொள்ள‌ இணைய‌த்தைப்
ப‌ய‌ன்ப‌டுத்திய‌ முத‌ல் அர‌சுத்த‌லைவ‌ர் மாண்புமிகு ஹு சிந்தாவ் அவ‌ர்க‌ள் ஒருவ‌ராக‌த்தான் இருக்க‌ வேண்டும். அவ‌ர்க‌ளுக்கு என் பாராட்டும்,வாழ்த்தும்!
பாண்டிச்சேரி, ஜி. ராஜகோபால்

செய்திகளின் மூலமாக பல பயனுள்ள தகவல்களை தினமும் அறிந்து கொள்ள முடிகின்றது. சீனா மற்றும் அதன் உட்பிரதேசங்களில் நடக்கின்ற தகவல்களையும், பல வெளிநாட்டு செய்திகளையும் உடனுக்குடன் நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சீன வானொலிக்கு நிகர் சீன வானொலிதான். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்புப் பணியில் குறிப்பிட்ட முன்னேற்றம் காணப்பட்டு வருவதை கேட்டு ரசித்தேன். அண்மையில் சீன அரசு வெளியிட்ட 510 தேசிய நிலை பொருள்சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் இரண்டாவது தொகுதி பெயர்பட்டியலையும், 147 தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் விரிவாக்க பெயர் பட்டியல் பற்றியும் அறிந்து கொண்டேன். பண்பாட்டு மரபுச் செல்வம் பற்றிய கணக்கெடுப்புப் பணியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்துள்ளமை பாராட்டுக்குறியது.
……காளியப்பம்பாளையம் க. ராகம் பழனியப்பன்……
பல்லவி பரமசிவம் அவர்களின் நேருக்கு நேர் நிகழ்ச்சி பேட்டி கேட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது அவர் மூத்த நேயர். பல புதிய நேயர்களை உருவாக்கியவர் .சீன வானொலி பரிசுப் பொருள் கண்காட்சியை பல முறை பெருந்துறையில் நடத்தயுள்ளார். அவரின் தொடரும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.