• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-08 09:20:40    
சீன ஹெர் நான் மாநிலத்தின் உணவு வகை ஒன்று

cri
க்ளீட்டஸ் –  சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்டு, சீன உணவு வகைகளைத் தயாரிப்பதன் மூலம், சீன உணவு பண்பாடு பற்றி அறிந்து கொள்ளலாம். வாருங்கள். வாணி, இன்று எந்த வகை சீன உணவு பற்றி எடுத்து கூறுகின்றோம்?
வாணி – இன்று சீன ஹெர் நான் மாநிலத்தின் உணவு வகை ஒன்று பற்றி கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் – சரி.

வாணி – ஹெர் நான் மாநிலம் சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. லோ யாங் நகரம் அதன் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகும். ஒவ்வொரு வசந்த காலமும் peony எனும் மலரைப் பார்த்து இரசிக்க பலர் அங்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
க்ளீட்டஸ் –அதை பற்றி அறிந்திருக்கின்றேன். சீன மக்கள் peony மலரை மிகவும் விரும்புகின்றனர்.


வாணி – ஆமாம். மேலும் லோ யாங் நகரில் shui xi விருந்தும் மிகவும் புகழ்பெற்றது. இன்றைய உணவுப அரங்கம் நிகழ்ச்சியில் நாம் சமைக்க இருப்பது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு வகைகளில் ஒன்றாகும். தமிழ் நண்பர்களுக்கேற்றார் போல் நாம் அதன் தயாரிப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றோம்.
க்ளீட்டஸ் – அப்படி என்றால், நேயர்கள் வீட்டில் எளிதாக இதை தயாரிக்கலாம். அப்படித்தானே!
வாணி – ஆமாம், அதற்கு தேவையான பொருட்களை கூறுகின்றேன்.


கோழி இறைச்சி 200 கிராம் காளான் 100 கிராம்
தக்காளி பழம் 1
பட்டாணி 50 கிராம்
கொத்த மல்லி சிறிதளவு ஒரு முட்டையின் வெள்ளை பகுதி
மாவு கரைசல் 2 தேக்கரண்டி
காடி 1 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் 10 கிராம்
உப்பு 5 கிராம் சமையல் எண்ணெய் 200 மில்லி லிட்டர்
தண்ணீர் ஒரு லிட்டர்