• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-09 10:07:27    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீனாவிலுள்ள ரஷிய தூதர்களின் நல்வாழ்த்துக்கள் 1

cri
29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஆகஸ்டு திங்கள் பெய்சிங்கில் நடைபெற உள்ளது. முழு உலகத்தின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முழு உலகின் முக்கிய விழாவாக மாறுவது உறுதி. சீனாவிலுள்ள ரஷிய தூதர் செர்கெய் ராசோவ் பெய்சிங்கில், நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார்.

2005ம் ஆண்டில், சீனாவுக்கு வந்த பின், கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தை ராசோவ் கண்டுள்ளார். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவது என்பது சரியான தேர்வாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து வலுப்பட்டு வரும் நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலுடன், உயர் தரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் திறமை சீனாவுக்கு உண்டு.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி உயர் நிலை விளையாட்டு போட்டியாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அரசியலின் தலையீட்டை நீக்கும். முழு உலகின் பிரமாண்டமான விளையாட்டு விழா இதுவாகும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன் என்றார் அவர்.

இளைஞர்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிப்பதில் அவர் ஈடுபட்டுள்ளார். எனவே, ஓர் உலகம், ஒரு கனவு என்ற பெய்சிங் ஒலிம்பிக் விளாயாட்டுப் போட்டியின் முழுக்கத்துக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த முழுக்கம் மூலம், இளைஞர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அமைதி மற்றும் நட்புஆற்றலை நேரடியாக உணர்ந்து கொள்ள முடியும். அவர்களுக்கு பரஸ்பர பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வுக்கான வாய்ப்பை ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வழங்கும் என்று அவர் கூறினார்.

விளையாட்டு, இளைஞர்களுக்கிடையிலான நட்பை அதிகரிக்கும் முக்கிய வழிமுறையாகும். இளைஞர்கள் அமைதியாக பழகி, பரஸ்பரம் புரிந்து கொண்டு, ஒத்துழைப்பை உருவாக்கினால், முழு உலகில் மக்களின் வாழ்க்கை மேலும் பாதுகாப்பாகவும் அருமையாகவும் மாறும். எனவே, இளைஞர்களுக்கிடையிலான நட்பையும் பரஸ்பர புரிந்துணர்வையும் அதிகரிப்பது என்பது நமது பொதுக் கடமையாகும் என்றார் அவர்.