• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-09 10:12:00    
முதியவரும் பேய்களும்

cri
 லாங்யா என்ற இடத்தைச் சேர்ந்த முதியவர் ச்சின் ஜூபோவுக்கு வயது 60. ஒரு நாள் நன்றாக மது அருந்தியபின் முதியவர் ச்சின் ஜூபோ பெங்ஷான் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் தனக்கு எதிரே தனது இரண்டு பேரன்மார் வருவதை அவர் கண்டார். முதியவரை கண்ட பேரன்மார் அவரை இருபுறமும் பிடித்துக்கொண்டு கைத்தாங்காலாக அழைத்துச் சென்றனர். ஒரு 100 அடி அவரை அரவணைத்துச் சென்ற பேரன்மார் திடீரென் முதியவரின் கழுத்தை பிடித்து கீழே தள்ளினர்.
'கிழட்டு அடிமையே, அன்று எங்களை நீ அடித்தாய் அல்லவா, இன்று நாங்கள் இருவரும் உன்னை கொல்லப்போகிறோம்" என்றனர் அந்த பாசமான பேரப்பிள்ளைகள். சில நாட்களுக்கு முன் தான் தனது இந்த இரு பேரன்மாரையும் அடித்தது நினைவுக்கு வர, முதியவர் புத்திசாலித்தனமாக, எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல், இறந்துவிட்டது போல் தரையில் கிடந்தார். இதைக் கண்ட பேரன்மார், முதியவர் இறந்துவிட்டார் என்றெண்ணி, அங்கிருந்து சென்றனர். பிறகு சற்று நேரம் கழித்து முதியவர் கண்களை திறந்து பேரன்மார் சென்று விட்டதை உறுதிசெய்துகொண்டபின் எழும்பி, வீட்டுக்குச் சென்றார். வீடு சென்றதும் தன்னை கொல்லத்துணிந்த பேரன்மாரை தண்டிக்க எண்ணினார் முதியவர் ச்சின் ஜூபோ. பேரன்மாரிடம் சென்று அவர்கள் செய்ததை கூறி, கோபத்தை வெளிப்படுத்த பேரன்மார் இருவரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். இருவரும், தாத்தாவிடம் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரினர் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. தங்கள் தாத்தாவிடம் ' உங்கள் பேரப்பிள்ளைகளாகிய நாங்கள் எப்படி உங்களுக்கு அப்படி தீங்கிழைக்க முடியும்? அனேகமாக நீங்கள் வழியில் சந்தித்தது ஏதோ பேய்களாகத்தான் இருக்கவேண்டும். எங்களுடைய உருவத்தில் வந்து உங்களை கொல்ல நினைத்திருக்கவேண்டும். நீங்கள் வேண்டுமானால் ஒரு முறை மறுபடி சோதித்து பாருங்கள்" என்று கூறினர். முதியவர் ச்சின் ஜூபோவும் தனது பேரன்மார் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்தார். தனது பேரப்பிள்ளைகள் அப்படி செய்திருக்கமாட்டார்கள்தான் என்று தனக்கு தானே கூறிக்கொண்டார்.
சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் முதியவர், மதுகுடித்த போதையில் இருப்பது போல் நடித்தபடி, பெங்ஷான் கோயில் வழியாக சென்றார். இம்முறையும் தனது பேரன்மார் தன்னை இருபக்கமும் அணைத்தபடி கைத்தாங்கலாக அழைத்துச் செல்வதை கண்ட அவர், நிச்சயம் பேய்கள்தான் என்று உணர்ந்து, அவை தன்னை கழுத்தை பிடித்து கடந்த முறை கீழே தள்ளியபடி இம்முறையும் செய்வதற்கு முன்பாக, அவரே அந்த இரு பேய்களையும் வலுவாக பிடித்துக்கொண்டார். நேராக வீட்டுக்குச்சென்ற முதியவர், இந்த தனது பிடியில் வசமாக மாட்டியிருந்த தனது பேரன்மார் உருவிலிருந்த இரு பேய்களையும் முற்றத்தில் தீயிட்டு கொளுத்தினார். நெருப்பில் அவற்றின் உடல் பற்றி எரிந்து தீய்ந்துபோகும் வரை காத்திருந்து பின் அங்கிருந்து சென்றார். ஆனால் அன்றிரவு அந்த இரு பேய்களும் தப்பியோடி விட்டன. நடந்ததையெல்லாம் குடும்பத்தினர் அனைவரும் வியப்போடு பார்த்துகொண்டிருந்தனர்.
முதியவர் ச்சின் ஜுபோவுக்கு மட்டும் அந்த பேய்களை கொன்றழிக்கவில்லையே என்ற வருத்தமும், கோபமும் நீடித்தது. சில வாரங்கள் கழித்து, முதியவர் மீண்டும் மதுபோதையில் இருப்பது போல் நடித்தபடி அந்த கோயிலின் வழியாக சென்றார். இந்த முறை தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஒரு கூரிய வாளை தன்னோடு எடுத்துச் சென்றார் முதியவர். ச்சின் ஜூபோ பொழுது சாய்ந்து வெகு நேரமாகியும் வீடு திரும்பாததை கண்டபோது, அவரது பேரன்மார் இருவரும், ஒருவேளை அந்த பேய்கள் தமது தாத்தாவை பிடித்துக்கொண்டனவோ என்று அஞ்சி, இருவரும் தாத்தாவை தேடி புறப்பட்டனர். அந்தோ பரிதாபம், பேரன்மாரின் உருவத்திலிருந்த பேய்களை கொல்ல வெறியோடு காத்திருந்த ச்சின் ஜூபோவின் கண்களுக்கு, எதிரே தன்னை பாசத்துடன் தேடிக்கொண்டிருந்த பேரன்மாரை தெரியவில்லை, தான் கோபத்துடன் தேடிக்கொண்டிருந்த பேய்களே தெரிந்தன. மறைந்திருந்த ச்சின் ஜூபோ திடீரென வெளியே வந்து சடுதியில் தனது இரு பேரன்மாரையும் வெட்டிக்கொன்றான்.
நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம். எல்லாம் நமது பார்வையில்தான் இருக்கிறது.