• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-09 14:07:49    
Xu Zhou நகரின் Xi Yang Hong கலைக் குழு

cri

சீனாவின் Xu Zhou நகரில் Xi Yang Hong என்னும் கலைக் குழு இருக்கின்றது. 1995ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், இக்குழு நிறுவப்பட்டது. ஆடல் அணி, மேள அணி மற்றும் குழுப்பாடல் அணி ஆகியவை இக்குழுவில் இடம்பெறுகின்றன. இது வரை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற சுமார் நூறு முதியோர் இக்குழுவில் சேர்ந்துள்ளனர். சாதாரண நாட்களில், குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆடி பாடுகின்றனர். தவிர, நடுத்தரவயதினர் மற்றும் முதியோரின் வாழ்க்கையை செழிப்பாக்கி, அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், குழு உறுப்பினர்கள் அடிக்கடி குடியிருப்புப் பிரதேசங்களில் அரங்கேற்றங்களை நடத்துகின்றனர். இக்குழுவை நிறுவிய Xu Xue Mei அம்மையார் கூறியதாவது:

"நடுத்தரவயதினர் மற்றும் முதியோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கை நடத்துவதை ஊக்குவிப்பது எங்கள் நோக்கமாகும்" என்றார், அவர்.

நாள்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரை குழு உறுப்பினர்களின் பயிற்சி நேரம் ஆகும். அவர்கள் ஓய்வு நேர ஆர்வலராக இருந்த போதிலும், பயிற்சியில் மிகவும் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் நாள்தோறும் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்கின்றனர். கலைக் குழுவின் உறுப்பினர் Yu Hui Chun கூறியதாவது:

"நாங்கள் தொழில்முறை பாடகர்கள் அல்ல என்ற போதிலும், எங்கள் பாடல்கள் மூலம், தாய்நாடு, எங்கள் அருமையான வாழ்க்கை, ஓய்வு பெற்றோரின் மகிழ்ச்சி ஆகியவற்றைப் பாராட்ட விரும்புகின்றோம்" என்றார், அவர்.

Xu Xue Mei அம்மையார், இக்கலைக் குழுவை நிறுவினார். சாதாரண நாட்களில் ஓய்வு பெற்ற முதியோர் காய்கறிகளை வாங்கி, பேரக்குழந்தைகளை பராமரித்து, சீட்டு விளையாடுவது வழக்கம். சமூக நடவடிக்கைகளில் கலந்து கொள்வது குறைவு என்பதை Xu Xue Mei கண்டறிந்தார். முதியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து, சமூகத்துக்கு பங்காற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார். எனவே, சிறு வயதிலிருந்தே கலையை நேசிக்கும் Xu Xue Mei அம்மையார், Xu Zhou நகரின் முதலாவது முதியோர் மேள அணியை உருவாக்கினார். இந்த அணியில், கலையை நேசிக்கும் முதியோர் பலர் சேர்ந்துள்ளனர். அணி உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. பின்னர், இந்த அணி, Xu Zhou நகரின் Xi Yang Hong கலைக் குழுவாக வளர்ந்துள்ளது. இக்கலைக் குழு நிறுவப்பட்டது முதல் இது வரையான பத்து ஆண்டுகளில், குடியிருப்புப் பிரதேசம், சதுக்கம் ஆகிய இடங்களில் ஆயிரத்துக்கு அதிகமான அரங்கேற்றங்களை இக்குழு நடத்தியுள்ளது. சமூகத்தில் இக்கலைக் குழு பாராட்டப்பட்டுள்ளது. Xu Xue Mei அம்மையார் கூறியதாவது:

"சமூகத்துக்கு பங்காற்றி வருகின்றோம். Xu Zhou நகரில் உள்ள பல்வேறு இயற்கை காட்சித் தலங்களில் அரங்கேற்றங்களை நடத்தியுள்ளோம். தொடர் வண்டிகளில் பணி புரியும் பணியாளர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், இருப்புப்பாதையின் நெடுகிலும் உள்ள இடங்களுக்கு சென்று அரங்கேற்றியுள்ளோம்" என்றார், அவர்.

இக்கலைக் குழுவின் அரங்கேற்றங்கள் மூலம், மேலதிக நடுத்தரவயதினர் மற்றும் முதியோர் உடல் பயிற்சி செய்து, மகிழ்ச்சியை நாடி, இன்பமான வாழ்க்கை நடத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என Xu Xue Mei விரும்புகின்றார். ஒலியியல் சாதனங்கள், குறுந்தகடுகள், ஆடைகள் ஆகியவற்றை வாங்க, அதிக பணம் தேவைப்படுகின்றது. குழு உறுப்பினர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். சிலரின் குடும்பங்கள் வறுமையானவை. இவற்றைக் கருத்தில் கொண்டு, Xu Xue Mei அம்மையார் தனது அனைத்து பண சேமிப்புகளையும் வழங்கினார். ஆனால் அவரும் ஓய்வு பெற்றவர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, அவர் தமது சேமிப்பு அனைத்தையும் செலவிட்டு விட்டார். ஆனால், குழு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையும் போது தான், தமக்கும் மகிழ்ச்சி என்று அவர் கருதுகின்றார்.

முன்பு Xu Xue Mei இக்குழுவை நிறுவுவதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது Xu Xue Mei இக்கலைக் குழுவின் பணியை இவ்வளவு நேசிப்பதை புரிந்து கொண்டு, Xu Xue Meiக்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர். Xu Xue Meiவின் கணவர் Wu Yi Min இக்குழுவில் சேர்ந்திருக்கின்றார். கலைக் குழுவின் மேடை பயன்பாட்டு பொருட்களை தயாரிப்பதற்கு அவர் பொறுப்பேற்கின்றார். அவர் கூறியதாவது:

"Xu Xue Meiஉம் அனைத்து முதியோரும் மகிழ்ச்சியாக இருக்க, இக்குழுவுக்கு பாடுபட விரும்புகின்றேன். மேலதிக முதியோர் இக்குழுவில் சேர வேண்டும் என விரும்புகின்றேன்"என்றார், அவர்.

தமது கணவரின் ஆதரவுடன், கலைக்குழுவின் வளர்ச்சிக்காக Xu Xue Mei அம்மையார் மேலும் பாடுபட்டு வருகிறார். இக்கலைக் குழு நிறுவப்பட்டதற்கு, நாடு முழுவதிலும் நடைபெற்ற அதிக போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளைப் பெற்றுள்ளது. சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் "Xing Guang Da Dao" என்ற நிகழ்ச்சி, தத்தமது கலைத் திறனை வெளிப்படுத்தும் மேடையை மக்களுக்கு வழங்குகின்றது. இந்நிகழ்ச்சியில் திறமைமிக்க இளம் ஆர்வலர்கள் பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர். முதியோரின் சார்பில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தத்தமது திறனை வெளிப்படுத்த இந்த கலைக்குழுவினர் விரும்பினர். இதனால், கலைக்குழு உறுப்பினர்களிலிருந்து 8 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, Xue Mei என்னும் குழுவை உருவாக்கினர். இறுதியில் Xue Mei குழு Xing Guang Da Dao என்ற நிகழ்ச்சியில் அரங்கேற்றியது. Yu Hui Chun கூறியதாவது:

"இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம், முதியோரின் உயிராற்றலைக் காட்ட விரும்புகின்றோம்" என்றார், அவர்.

Xue Mei என்ற குழுவின் அரங்கேற்றம், சீனாவின் பார்வையாளர்களின் மதிப்பையும், பாராட்டையும் வென்றெடுத்துள்ளது. இக்குழுவின் மூலம், நவீன சமூகத்தில் முதியோரின் ஆக்கப்பூர்வமான, நம்பிக்கை ஆர்வமுடைய வாழ்க்கை மனப்பான்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.