
ஷிபோஃ கிராமம், சாங் சோ நகரப்பிரதேசத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. அது, தூய்மையான சுற்றுச்சூழலையும் அமைதியையும் கொண்டது. 2006ம் ஆண்டு ஏப்ரல் திங்கள், அமெரிக்காவில் வாழும் ஓவியர் ஹீவாங் கோ ரை முதன்முதலில் இங்கு தமது அலுவலகத்தை நிறுவினார். அவர், வீட்டின் வெளிச்சுவரை மஞ்சள் வண்ணமாக மாற்றி, அதன் மேல் பகுதியில் அலுவலகத்தைக் கட்டியமைத்தார். பிறகு, வாங் யீ திங், சூ சியேள ஷி உள்ளிட்ட கலைஞர்கள், அக்கட்டிடத்தின் மேல் பகுதியில் தமது அலுவலகங்களைக் கட்டியுள்ளனர்.

2006ம் ஆண்டின் மே திங்கள் 30ம் நாள், ஷிபோஃ என்னும் கலை சங்கமம் நிறுவப்பட்டது. ஓராண்டு காலத்தில், இக்கிராமத்தில் நூற்றுக்கு அதிகமான கலை அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஹெனான் மாநிலத்தில், கலை திறமைசாலிகள் அனைவரும் ஒன்று திரண்டுள்ள ஓரேயொரு கிராமாமாக இது மாறியுள்ளது.

|