• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-10 14:46:18    
பண்டைகாலம் தொட்டு சீனாவைச் சேர்ந்த திபெத்

cri

கலை........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்........இந்நிகழ்ச்சி மூலம் உங்களை மீண்டும் சந்திப்பாதில் மிக்க மகிழ்ச்சி.

கலை........ஆமாம். சென்ற நிகழ்ச்சியில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்பட்ட பொது சுற்றுச் சூழல் பிரச்சினையை சீன மக்கள் கையாளும் முயற்சி பற்றி அறிமுகப்படுத்தினோம்.

தமிழன்பன்....... உண்மை தான். நெகிழி பை பயன்பாட்டை குறைக்கும் புரட்சியில் சீன மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது.

கலை........உங்கள் பாராட்டை கேட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

தமிழன்பன்.......இன்றைய நிகழ்ச்சியில் திபெத் பிரச்சினை பற்றி வளவனூர் புதுப் பாளையம் எஸ் செல்வம், மணமேடு எம் தேவராஜா, மதுரை என் இராமசாமி முதலிய நேயர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க விரும்புகின்றோம்.

கலை........ஆமாம். அவர்கள் மட்டுமல்ல விகடன் என்னும் வார இதழில் திபெத் பற்றி நீளமான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதை படித்த பின் திபெத் பற்றி நாம் சிறப்பாக ஒன்று இரண்டு நிகழ்ச்சிகளின் மூலம் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

தமிழன்பன்.......ஆமாம். பல ஆண்டுகளாக திபெத் பற்றி மேலை நாட்டு செய்தி ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக அறிவித்து வருகின்றன.

கலை........அவை மக்களுக்கு முழுவதும் தவறாக வழிகாட்டியுள்ளன. ஆகவே உண்மைகளை வெளி கொர்ந்து உலக மக்களுக்கு விளக்கம் அளிப்பது மிகவும் தேவையாகியுள்ளது.

தமிழன்பன்.......அப்படியிருந்தால் நாம் வரலாற்று பதிவுகளிலிருந்து திபெத் உருவாக்கம் பற்றி விளக்கம் கொடுக்கலாம்.

கலை.......இது நல்ல யோசனை. தொல் பொருட்கள். பல திபெத் பண்டைகாலம் தொட்டே சீனாவைச் சேர்ந்திருந்ததை நிரூபித்துள்ளன.

தமிழன்பன்.......உதாரணங்களை எடுத்து கூறி நமது நண்பர்களுக்கு விளக்கம் செய்வோமா.

கலை........திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரில் முபான்சான் மலைக் குன்றில் அமைந்துள்ள குவான் டி தேவன் வணங்கப்பட்ட கோயிலில் "ஏன்றுமே நிற்பது" என்ற எழுத்துக்கள் செதுக்கப்பட்ட கல் தூபி உள்ளது.

தமிழன்பன்....... 1792ம் ஆண்டில் திபெத்தை ஊடுருவி ஆக்கிரமித்த லார்க்க காரர்களை விரட்டியடிக்கும் வகையில் சிங் வம்ச காலத்தின் நடுவண் அரசு படையை அனுப்பியது. கடைசியாக லார்க்க ஆக்கிரமிப்பாளர்கள் திபெத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்த தூபிபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலை........ஞெக்செ பிரதேசத்தில் டாதான் தூதர் இந்தியாவுக்கு பயணம் செய்த வரலாறு சீன மொழியில் கல் தூபியின் மேல் செதுக்கப்பட்டுள்ளது. கி.பி.658ம் ஆண்டில் டாதான் தூதர் பல்வேறு இன்னல்களை கடந்து தியான் ச்சு என அழைக்கப்பட்ட அப்போதைய இந்தியாவில் பயணம் செய்த நிகழ்வு இந்த கல் தூபி மூலம் அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழன்பன்.......சீனாவின் தான் வம்சகாலத்தில் திபெத் மற்றும் ஹென் இன மக்களுக்கிடையில் திருமண உறவு நிலவியது. மன்னர்களின் குடும்பங்களுக்கிடையிலான திருமண உறவு மூலம் நாட்டின் ஒன்றிணைப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தது.

கலை........தமிழன்பன் இதை ஒட்டிய அருமையான நிகழ்வு ஒன்று உங்களுக்கு தெரியுமா?

தமிழன்பன்.......தெரியாதே. தயவு செய்து அது பற்றி எனக்கும் நேயர் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.

கலை........மகிழ்ச்சி. சீன மக்களிடையில் இன்றும் அருமையான பாராட்டத்தக்க நிகழ்வு ஒன்று பரவியுள்ளது. தான் வம்ச மன்னர் குடும்பத்தில் வளர்ந்த இளவரசி வென் சன்னும் திபெத் மன்னரின் இளவரசர் சுன்சாகேம்பும் திருமணம் செய்தனர்.

தமிழன்பன்.......அந்த திருமண உறவின் அடிப்படையில் திபெத்தும் அப்போதைய தான் வம்ச ஆட்சி காலமும் ஒன்றிணைந்தது.

கலை........ஆமாம். அவர்களை நினைவு கூரும் வகையில் போத்தலா மாளிகையில் தான் வம்சகாலத்தின் இளவரசி வென் சன்னின் சிலை வணங்கப்பட்டுள்ளது. தாச்சோ கோயிலின் முன்னாலுள்ள சதுக்கத்தில் கி.பி.823ம் ஆண்டில் வைக்கப்பட்ட தான் பென் ஒன்றியம் என்ற கல்தூபி நின்றுள்ளது.

தமிழன்பன்.......இதுவே தான் வரலாற்றில் திபெத் சேர்ந்திருந்ததை நிரூபித்துள்ள உண்மையாயிற்றே.

கலை........இன்னொரு வரலாறு திபெத் பண்டை காலம் தொட்டே சீனாவைச் சேர்ந்திருந்ததை நிரூபிக்க முடியும்.

தமிழன்பன்....... அது வென்ன?விளக்கி கூறுங்கள்.

கலை........திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மிக தரமான ஹோ தியேன் ஜெட் கல்லால் செதுக்கப்பட்ட முத்திரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழன்பன்.......அதில் தாவது சொற்கள் செதுக்கப்பட்டுள்ளனவா?

கலை........படையின் தலைமை தளபதி என்ன செதுக்கப்பட்டுள்ளது. கி.பி.1260ம் ஆண்டில் ஹுப்பிலி மன்னர் பதவியை ஏற்று யுவான் வம்சகால ஆட்சியை நிறுவினார். பாஸிப்பாவை ஆசி வழங்கும் மத துறவியாக நியமித்து ஜெட் முத்திரை ஒன்றை வழங்கினார். அதன் மூலம் நடுவண் ஆட்சியின் கீழுள்ள திபெத்தின் இராணுவ மற்றும் மத விவகாரத்துக்கு பொறுப்புரிமையையும் ஹுப்பிலி பாஸிப்பாவுக்கு வழங்கினார். அவ்வாறு கி.பி.1279ம் ஆண்டில் திபெத்தை சீனாவோடு ஒன்றிணைத்தார். அப்போது முதல் திபெத் சீன நடுவண் அரசின் நேரடியின் தலைமையின் கீழான நிர்வாக பிரதேசமாகியது.

தமிழன்பன்.......கி.பி.1279ம் ஆண்டு அவ்வளவு முன்னாதாக திபெத் சீனாவின் ஒரு பகுதியாக மாறியுள்ளதை நாம் மறக்க கூடாது.

கலை........டாலாய் பெச்சான் போன்ற திபெத் புத்த மத பெரியோர்கள் மறுபிறப்பு குழந்தைகள் ஆகியோரை உறுதிப்படுத்தும் தங்க புட்டி, விளம்பர மரத் துண்டு குச்சி ஆகியவையும் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழன்பன்.......வரலாற்று பதிவேட்டின் படி சீனாவின் சிங் வம்சகால மன்னர் சியேன் லுங் திபெத் விவகாரம் பற்றி 29 சரத்துகளை படைத்தார். அந்த சரத்துகளில் தங்க புட்டி மூலம் மறுபிறப்பு குழந்தைகளை தேர்வு செய்யும் அமைப்பு முறை வகுக்கப்பட்டுள்ளது.

கலை........அந்த வழிமுறையின் படி திபெத்தில் தற்போதைய 11வது பெஞ்சான் எல்தெனி செச்சிச்சாம்பு இந்த முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழன்பன்....... அண்மையில் பெய்ஜிங்கில் திபெத்தின் நேற்றும் இன்றும் என்ற கண்காட்சியை பார்வையிட்ட பின் உணர்ச்சிவசப்பட்ட11வது பெஞ்சான் எல்தெனி செச்சிச்சாம்பு கருத்து தெரிவித்தார் அல்லவா.

கலை........ஆமாம். இந்த கண்காட்சி வரலாற்று பதிவேடுகள், தொல் பொருட்கள், படங்கள், பட பட்டியல், ஆகியவற்றின் மூலம் கடந்த 50க்கும் அதிகமான ஆண்டுகளில் திபெத்தில் நிகழ்ந்த தலைகீழான மாற்றங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. திபெத்தின் செழுமையான வளர்ச்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அன்புடன் பெறப்பட்டுள்ளது என்றார்.

தமிழன்பன்.......சீன மக்களின் மாபெரும் ஆதவுடனும் திபெத்தின் சாதனைகள் மிகவும் தொடர்புடையவை. மதவட்டாரத்தினர் என்ற முறையில் நாட்டையும் மதத்தையும் விரும்பும் நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வேண்டும்.

கலை........மதவிதிகளை கடைப்பிடித்து, திபெதின் இணக்கமான நிதானம் செழுமை மற்றும் வளர்ச்சிக்கும் நாட்டின் ஒன்றிணைப்புக்கும் பங்கு ஆற்ற வேண்டும் என்று 11வது பெச்சான் கண்காட்சியை பார்வையிட்ட பின் தெரிவித்தார்.

தமிழன்பன்.......நண்பர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடையும் நேரம் ஆகிவிட்டது.

கலை........அடுத்த சனிக்கிழமையில் இடம் பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் திபெத் விவகாரம் பற்றி மேலும் விபரமாக விளக்கி கூறுவோம்.

தமிழன்பன்.......இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியை கேட்க தவறாதீர்கள்.

கலை........வணக்கம் நேயர்களே.